Category Archives: அன்பெனும் பூங்காற்றில்!

அன்பெனும் பூங்காற்றில்! – தேனு ராஜ்

ஸ்ரீ, மஞ்சு, மயூரி மூவரும் தோழிகள்… இதில் மஞ்சு கலகலப்பான பேர்வழி…  துடுக்குத்தனம் ஜாஸ்தி.. அதே நேரம் பொறுப்பானவளும் கூட. ஸ்ரீ அமைதியானவள்…

ஜெயராம் – மேல்படிப்புக்காக இந்தியா சென்றுவிட்டு திரும்பி இருப்பவன்.., தாய்க்கு வேண்டியவற்றை  வாங்க வேண்டி.. கடைக்கு சென்றபோது அவனுக்கும் ஸ்ரீக்கும் மோதல்..

மஞ்சுவின் அண்ணன் சிவாவின் நண்பன் நரேன்… பெற்றோர் இல்லாமல் படித்து முன்னேறி வேலை பார்ப்பவர்.. அவருக்கு மஞ்சுவின் மேல் காதல் வர…  பின் என்ன இருவரும் காதல் பறவைகளாக மாறினார்.

மயூரியின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ராகவனின் தங்கை மகனான சத்தியன்… மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் பார்த்து..பழகி.. விளையாடி  களித்த சிறுவயது நியாபகத்துடனேயே இவள் அங்கு இருக்க…

சத்தியன் மாமா வீட்டுடன் குடும்ப பிரச்சனை ஆகி விட… இனிமேல் இங்கு வரவே முடியாது என்ற  சூழ்நிலையில் அவன் அங்கிருந்து செல்லும்போது சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளை நம்பி மயூவும்….  இவள் நினைவுகளை மட்டுமே எடுத்து சென்ற அவனும் சொல்லாத காதலில் திளைத்து இருக்க…

தோழிகள் மூவரும் பல்கலையில் சேர… அங்கே பாடம்  சொல்லிக்கொடுக்க வருபவன் ராம்.. ஏற்கனவே மோதலில் ஆரம்பித்த ஸ்ரீ – ராம் அறிமுகம் இங்கே அப்படியே தொடருமா…..??

ஏற்கனவே காதல் தோல்வியில் துவண்டு … அதிலிருந்து மீண்டு வந்து … பொறுப்பான பணியிலும் சேர்ந்தவன்… பெண்களிடம மட்டும் கொஞ்சம் ஒதுக்கம் காமிப்பான்… இவனும் ஸ்ரீயும் சேருவார்களா…??

நரேனின் அக்காவுக்கு அவனை தன் இஷ்டப்படி தான் பார்க்கும் பெண்ணுக்கு கட்ட ஆசை… ஆனா நரேனோ மஞ்சுவின் மேல் உள்ள காதலால் அதை மறுக்க….  அவரது கோபம் தன் தம்பியை விட்டு மஞ்சுவின் மேல் திரும்பியது….

பெண்களை கண்டால் ஒதுங்கி போகும் ராமின் மனம் மாறுமா…??

தன் மனதில் ராமின் மேல் தோன்றிய காதலை கூட உணராத ஸ்ரீ…, அதை எப்போது உணருவாள்…??

நரேனின் அக்கா மஞ்சுவை ஏற்றுக்கொள்வாரா … ??

அக்கா செய்த கலாட்டாவால் நரேனை விட்டு பிரிந்து போன மஞ்சு … அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டாளா…??

சத்தியன் & மயூரியின் காதல் அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள பட்டதா…??

இப்படி ராம் – ஸ்ரீ, நரேன் – மஞ்சு, சத்தியன் – மயூரி மூன்று 
ஜோடிகளின் காதலும் நிறைவேறியதா…??

அழகான இலங்கை தமிழில் கண்ணை கவரும் ஒரு குடும்ப கதை… படிக்க விரும்புவர்கள் படிக்கலாம்..!! 

Advertisements

அன்பெனும் பூங்காற்றில்! -priyasarangapani

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.
குறள்
781-

கதை என்ற கற்பனை சாரலுடன் பயணிக்க வைக்க இரண்டு வழிகளை தேர்ந்தெடுக்கலாம்…ஒன்று நடைமுறை வாழ்வில் ஒவ்வாத அதீத கற்பனை எழுத்துக்கள் மூலம் படிப்பவர்களை வேறு உலகிற்கு அழைத்து செல்லலாம் இல்லை என்றால் சமகால வாழ்வில் இருக்கும் சராசரி மனிதர்களிடையே நடக்கும் சம்பவங்களை தொகுத்து தன் எழுத்து மூலம் ஆளுமையை நிலைநாட்டலாம்….இதில் ரோசி கையாண்டது இரெண்டாவது…..

சில நேரங்களில் முதல் முறை சந்திக்கும் போது முட்டிக்கொள்பவர்கள் பின்னால் டூயட் பாட வாய்ப்புண்டு…அதே தான் ராம் & ஸ்ரீ வாழ்வில்…….தெரியாமல் மோதிகொண்டு பிறகு காதலித்து கல்யாணம் முடித்த ஜோடி…….

வாயாடிகளை அனைவருக்கும் பிடிக்காது என்று சொல்லமுடியாது…….அந்த துடுக்கு தனமே மற்றவர்களை தன்பால் ஈர்க்கும்…..அண்ணனின் நண்பன் தன் மேல் காதல் வயப்பட்டதை அறிந்து மஞ்சுவும் நரேனை காதலிக்க…இவர்கள் சேர இருக்கும் ஒரே தடையையும் தகர்க்கிறான்……

சிறு வயதில் இருந்தே தன்னுடன் விளையாடும் மயூரியை சத்தியனுக்கு பிடித்து போக…….வளர்ந்த பிறகு பெரியவர்களிடையே நடந்த சண்டையால் கொஞ்ச காலம் விலக வேண்டி…..பிறகு பெற்றவர்களாகவே சேர்த்து வைக்கப்பட்ட ஜோடி…..

comment:

சின்ன கதை என்பதால் ஒரு அவுட்லைன் சொல்லி இருக்கேன்……….படித்து நீங்களே மீதி கதையை தெரிந்து கொள்ளுங்கள்……..

மூன்று தோழிகளின் அடாவடி பேச்சில் அவர்கள் வாழும் முறைகளின் தொகுப்பு…….

 

அன்பெனும் பூங்காற்றில்!- அனு அஷோக்.


வெவ்வேறு விதமான குணங்கள் கொண்ட மூன்று பெண்கள்,அவர்களுக்குள் உள்ள தோழமை..அவர்களுக்கு அமைய போகும் வாழ்க்கை துணை, அவர்களுடைய குடும்பங்கள் பற்றிய சுவாரசியமான கதை இது 

ஸ்ரீ,ஜெயராம்: கதை இவர்களின் மோதலில் இருந்து ஆரம்பிக்கிறது தோழியுடன் ஷாப்பிங் மால் போன ஸ்ரீ..தெரியாமல் ராமின் மீது மோதிவிட,ராமும் அவளை திட்டி விடுகிறான்..பிறகு தான் ஸ்ரீ க்குதெரிய வருகிறது ராம் அவளுடைய தோழி மஞ்சுவிற்கு தெரிந்தவன் என்று…ராம் அவர்கள் படிக்கும் கல்லூரிக்கே விரிவுரையாளராக வருகிறான்.மஞ்சுவின் மூலம் அவனுடைய காதல் தோல்வியை பற்றி தெரிந்து கொண்ட ஸ்ரீக்கு ராமின் மேல் ஈர்ப்பு வருகிறது…ராமும் ஸ்ரீயின் அமைதியான குணம்,நடத்தை எல்லாவற்றிலும் கவரப்பட்டு அவள் மேல் காதல் கொள்கிறான்.இறுதியில் பெற்றோரின் சம்மதத்துடன் அவளை கைபிடிக்கிறான்…இருவரும் இறுதி வரை காதலை பகிர்ந்து கொள்ள வில்லை என்றாலும்..இருவருக்குள்ளும் இழையோடிய காதல் அழகு..மூன்று ஜோடிகளில் எனக்கு பிடித்தது..ஸ்ரீ, ஜெயராம் ஜோடி தான்.

மஞ்சு,நரேன்: தோழியர் மூன்று பேரில் வாய்துடுக்கானவள் மஞ்சு, தன் அப்பாவிடமே தைரியமாக வாதிடுபவள்..நரேனும் மஞ்சுவும் சந்திக்கும் காட்சி கொஞ்சம் வித்தியாசமானது..மஞ்சு உடன் படிப்பவன் அவளுக்கு காதல் கடிதம் எழுதி அவள் ரெகார்ட் நோட்டில் வைத்து கொடுத்து விட.அது மஞ்சுவின் அப்பாவின் கண்ணில் பட்டு மஞ்சுவிற்கு நாலு அப்பு கிடைக்கிறது..அதை தடுக்கும் மஞ்சுவின் அண்ணன் சிவாவின் தோழனான நரேன் அவளிடம் மனதை பரி கொடுக்கிறான்..இருவரும் காதலிக்க ஆரம்பித்தாலும் நரேனின் அக்காவிடம் இருந்து இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது..அதனால் இருவருக்குள்ளும் வரும் ஊடல்..பிறகு இருவரின் உண்மையான நேசம் அவர்களை சேர்த்து வைக்கிறது..

மயூ,சத்தியன் : உறவுக்கு காரர்களான மயூவிர்க்கும் சந்தியனுக்கும் சிறு வயதில் இருந்தே அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பு..இருவரின் குடும்பங்களில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக வெளிப்படுத்த படாமல் அவர்களுக்குளே காதலாக வளர்கிறது..அவர்கள் இருவரும் ஒருவரை நினைத்து மற்றொருவர் தவிப்பதை ஆசிரியர் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.ஊர் திருவிழாவில் இருவர் குடும்பமும் பகையை மறந்து உறவு கொண்டாட மயூ சத்தியனுக்கு திருமணம் நிச்சயிக்க படுகிறது..

cmt:

தோழியர்யர்களுடைய ஒற்றுமை,அவர்களுடைய கேலி கிண்டல் ஒருவர் துன்பத்தில் மற்றவர் மடி தாங்குவது..மூன்று பேரையும் காதலிப்பவர்களின் கண்ணியமான நடத்தை என்று கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்..மூன்று பெண்களும் திருமணதிற்கு பிறகும் நட்பை விடாமல் தொடருவது போல் காட்டி இருப்பது மனதிற்கு இதம் தருகிறது.. ஆசிரியருடைய மூன்றாவது கதையும்..அவரருடைய இரண்டு கதைகளை போல நம் மனதில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்து இருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அழகான இலங்கை தமிழில் கதையை படிப்பதற்கு நன்றாக இருந்தது..நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..நான் தான் கொஞ்சம் தாமதமாக படித்தேன்..யாரும் படிக்காமல் இருந்தாள் தவறாமல் படியுங்கள்.