Category Archives: ரோசி கஜன்

செந்தூரம் வைகாசி இதழ்/ரோசி கஜன்

ஊர்கோலம் போவோமா 

Advertisements

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

ரோசி கஜனின் உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே  – யாழ் சத்யாவின் பார்வையில்

 

பூஜா – சமிந்த – ரஞ்சித்

 

இவர்களின் ஒரு முக்கோணக் காதல் கதை, அழகாக இலங்கைத் தமிழில் தந்திருக்கிறார் ரோசி அக்கா.

 

பூஜா! கலாச்சாரமான யாழ்ப்பாணத்து குடும்பத்திலிருந்து வேலை நிமித்தம் கொழும்பு வரும் கலகலப்பான இளம் யுவதி. தனது குறும்புப் பேச்சிலும் பழுகுவதற்கு இனிமையான சுபாவத்திலும் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் தனது நண்பிகள் வனிதா, தீப்தியுடன் சேர்ந்து அவள் அடிக்கும் லூட்டிகளால் எங்களையும் சிரிக்க வைத்து மகிழ்விக்கிறாள்.

 

அதிலும் சிங்களவனான நாயகன் சமந்தவிடம், அவன் பேசும் போதெல்லாம் அவனுக்கு முன்னால் தமிழில் அவனைப் பற்றியே அடிக்கும் கமெண்ட்டில் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறாள்.

 

சமிந்த! காதலுக்கு இனம், மதம், மொழி எதற்கு என்று பார்வையாலேயே தன் உணர்வுகளைப் புரிய வைக்கும் அன்பன். அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகி நிற்கும் போது அவன் மேல் மரியாதை தோன்றி அவனும் பூஜாவும் சேர்ந்து வாழ மாட்டார்களா? என்று எங்களையும் ஏங்க வைக்கிறான்.  

 

ரஞ்சித்! பூஜாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டியோடு வார இறுதி நாளைக் கழிக்க வரும் இவன் ஒரு நாள் தவறுதலாக பூஜாவோடு மோதுண்டதில், அவளைக் கண்ட நொடியில் இருந்து காதலால் தவிக்கிறான். அவன் தவிப்பை அவனோடு சேர்த்து எங்களையும் உணர வைத்து பூஜா இவனோடு சேர்ந்து வாழ்ந்தால் நல்லமே என்று எண்ண வைக்கிறான்.

 

ரஞ்சித்தின் தந்தை ஸ்ரீசேனாவுக்கும் மனைவிக்குமான அன்னியோன்யம், ரஞ்சித்துக்கும் தங்கைக்கும் இடையே இருக்கும் புரிதலான பாசப் பிணைப்பு, பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் நட்பு என்று ரஞ்சித்தின் குடும்பம் ஒரு கவிதை.

 

தன் முரட்டு பிடிவாதங்களில் தன் முடிவே இறுதியானது என வாழும் பூஜாவின் தாத்தா குமாரசாமி, அவரது சொல் தட்டாத மகன், மருமகள். இவர்கள் குடும்பம் ஒரு சாதாரண பாரம்பரியமிக்க யாழ்ப்பாண குடும்பம்.

 

பூஜா யாரோடு இணைய வேண்டும் என்று படிக்கும் போது மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடாத்த வைத்து, இறுதியில் சந்தோசமாக எங்களை அந்த முடிவை ஏற்க வைத்து சுபம் போட்டிருப்பதில் இந்தக் கதையும் எனது மிகப் பிடித்தமான கதைகளின் பட்டியலில் இணைந்து விட்டது.

 

கதையின் கடைசிவரை யார் யாரோடு இணைவார்கள்? அவர்கள் குடும்பங்களிலிருந்த சிக்கல்கள் எவ்வாறு நீங்கும்? அவர்கள் காதலுக்கு வந்த தடை எவ்வாறு அகலும்? என்று இடியப்ப சிக்கலாய் எழுந்த சந்தேகங்களை இலகுவான கதையோட்டத்தில் ஒவ்வொரு சிக்கையும் எளிமையாய் பிரித்தது அருமை.

 

யார் நெஞ்சம் யாரில் தடுமாறியது? வெற்றி பெற்ற நெஞ்சங்கள் யாவர்? என்று அறிய கதையைப் படியுங்கள் மக்கா!

 

மேன்மேலும் இது போன்ற பல கதைகள் படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டி வாழ்த்துகிறேன் ரோசி அக்கா.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

‘என் பூக்களின் தீவே!’ ஹரிதாரணி சோமசுந்தரம் அவர்களின் பார்வையில்…

 

 

என் பூக்களின் தீவே – ரோசி கஜன்.

அகல்யா மண்டைக் கொழுப்பா என்று ஆரம்பித்த இடத்தில் இருந்து படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி உற்சாகப் படுத்துகிறாள்.

அறிவும் சுட்டித்தனமும் கொண்ட அழகுப்பெண்.

வருண் வார்த்தையால் எல்லாம் அவனை வர்ணிக்க முடியாது. உண்மையிலேயே பொறுமையின் மறுஉருவம்.. அகலை கொன்னு புதைக்காம பார்த்திருந்தானே.. 
ஒரு வேளை அவனுள் புதைந்திருந்த அந்த அன்புதான் காரணமோ என்னவோ..

அனு – ராகவ் ஆக்கப் பொறுத்தார்கள் ஆறப் பொறுக்கலை கதையாக ராகவ் சூழ்நிலையை புரியாமல் தனக்கு மட்டுமே உரிமை என நினைப்பதும் அதற்கு அமைதியாக அலசி ஆராயமல் வார்த்தைகளால் அனுவை கூறுபோடுவதும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம்.
அகல்யா அங்கேயும் சிறந்த எடுத்துக்காட்டு.

சந்திரன் பாசத்தால் பக்குவத்தை இழந்து பேசும்போதும் வருண் தீர்மானமாக சொன்ன நேரம் வாயடைத்து நிற்கிறார். அவரது கோபம் நியாயமானது ஆனால் கோபத்தால் எதையும் சாதிக்க முடியாதே..

அமைதியும் அன்பும் விவேகமும் உதவும் அளவில் கோபமும் அதனால் ஏற்பட்ட வேகமும் உதவாது என்பதை அழகாய் காட்டியுள்ளீர்கள். சுகந்தன் அருமையான பாத்திரம். அவனது பெற்றோர் அதைவிட அழகு பிள்ளையை நீங்கள் சரியாய் வளர்க்கலை என்று அவர்களும் சந்திரனைப் போல எகிறியிருந்தால் அந்த குடும்பமே சிதைந்து இருவரின் வாழ்க்கை அதில் சிதிலமாகியிருக்கும்.

அகல்யா மீதான செல்வி-சந்திரனின் பாசம் வருணை மட்டுமல்ல என்னையும் பொறாமை கொள்ள வைத்தது. ஆனால் வருண் பொய்யாக பொறாமை காட்டினான். நான் மெய்யாகவே பொறாமைப் பட்டேன். இப்படியொரு மாமியார் கிடைக்கணுமே என்று..

சிவா நண்பனை குறை கூறும் நிலை வந்தும் அமைதி காப்பது.

ராகவன் தயக்கமின்றி தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவது,

அகல்யா வருணை அலையவிடுவதாய் நினைத்து அவனது விளையாட்டில் காயப்படுவது,

தேங்காய் துருவல் சண்டை முதல் நண்டுக்கறி சண்டை வரை அருமையோ அருமை..

இயல்பான இலங்கைத்தமிழில் இருந்த கதையை படித்துத் தான் நிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.

ஐயனார் கோவில், நாமகள், அனலைத்தீவு, கொழும்பு என எல்லாம் கதையின் முக்கியப் புள்ளிகள்..

மிக சுட்டித்தனமான பெண்ணொருத்தி காதலொருவனோடு சுட்டித்தனம் மாறாமல் குடும்பம் நடத்துவது அருமை.

பெண்களின் திருமணத்திற்கடுத்த வாழ்வில் புகுந்த வீட்டாரின் உறுதுணையும் அன்பும் எவ்வளவு முக்கியம் என்றும், பெண் என்பவள் இடத்திற்கு இடம் மாறும் பொருளல்ல, அவளது உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அழகாக வடித்துள்ளீர்கள்.

மொத்தத்தில் என் பூக்களின் தீவே என்னை அதற்குள் அழைத்துக் கொண்டது….

‘டேட்ஸ் கேக்’

** ‘டேட்ஸ்கேக்’ இன்னமும் சுவையாக வர, ஒரு சின்ன variation :

cadju plums உடன் கொஞ்சம் candied peel, 2 tbl spoon fresh orange juice, honey சேர்த்து ஊறவைத்து mix பண்ணி பாருங்க இன்னும் moist ஆகவும் taste ஆகவும் இருக்கும். 

தகவலுக்கு நன்றி நிம்ஸ்

 

 

மெல்லிசையாய் என் வசமானாய்!- 1- ரோசி கஜன்

அன்பு வாசகர்களே!

இலங்கையில் வெளிவரும் ஒளிஅரசி மாத இதழில் வெளிவரும் என் தொடரின் முதல் அத்தியாயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகிறேன். 

மிக்க நன்றி ஒளி அரசி

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . 

இந்த அத்தியாயம் கூகிள் டாக்கில் …

அத்தியாயம் 1 

 

26857149_1981451788775479_187412104_n20121004_1981451792108812_1741760870_n26855751_1981451782108813_450248935_n

‘என் பூக்களின் தீவே!’ தீபி அவர்களின் பார்வையில் …

“என் பூக்களின் தீவே ” என்னையும் அறியாமல் என் இதழ்களில் புன்னகை பூத்திடச் செய்த புது டாம் அண்ட் ஜெர்ரி.
அனலைத்தீவின் அட்டகாச வர்ணனையில் அகத்தின் ஆர்வத்தீயை அணைத்திட இயலவில்லை .
அகல், இவள் ஒரு சூறாவளி. எங்கே, எப்பொழுது, எப்படி மையம் கொள்ளுவாள் என்பது அவளுக்கே தெரியாது. விளையாட்டுத்தனம் கொண்டிருந்தாலும் விபரீதமான நிலையிலும் விளைவில்லா முடிவுகளை வினாடியில் எடுக்கும் வித்தைக்காரி .வருணிடம் கொள்ளும் உரிமை, கோபமும் விதண்டாவாதமும் விழியில் நீர் வர சிரித்திட செய்கிறது .
வருண், வடிவான அச்சாப்பிள்ளையை  கல்யாணம் கட்டி கொள்வதை விட்டு இந்த வானரப்படை தலைவியிடம் சிக்கி சின்னா பின்னமாவது விதி செய்த சதியோ!
ராகவே பேசாமல் வெளிவருமிடத்தும், தோழியின் தொலைந்த வாழ்வை செப்பனிட தந்தை கூறிய மாற்று வழியை திடமாக மறுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துமிடத்தும் சபாஷ் .

அனு, ராகவ் அடுத்தவர்களை காயப்படுத்துவதில் காட்டிய அவசரத்தை தங்கள் காதலை நிலை நிறுத்தி கொள்வதில் காட்ட தவறியது இன்றைய நிலையை இமைகளின் முன்னே நிலை நிறுத்துகிறது .
என் பூக்களின் தீவே
எந்நிலையிலும்
எத்திசை சென்றாலும்
மாறாத
மண்ணின் நேசம்!
 

தை ஒன்று…

happy-New-year-2018-poems

 

இலங்கையில் இருந்து இங்கு வந்து பதினைந்து வருடங்கள்.

இதை எண்ணியதும் கிறுக்கியவை …வாசித்துப் பாருங்கள் மக்களே !

தை ஒன்று