IE-4

அத்தியாயம்-4   சூரியனின் வெப்பம் தணிந்துவிட்டதில் மாலைக்காற்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தர்சனின் கார், சற்று வேகமாகவே சாலையில் பயணித்தது. அவன் மனதிலோ ஒருவித உற்சாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.   அதற்குக் காரணமானவளை எண்ணியதுமே அவனது இதழோரம் உல்லாசப் புன்னகை ஒன்று இதமாக ஜனித்தது. அவளையும் அவள் வீசும் அக்கினிப் பார்வைகளையும் நினைக்கையிலேயே அவனுக்குள் என்னென்னவோ மாற்றங்கள்.   இதற்கே இந்தப் பாடாக இருக்கிறதே.. அவள் காதலுடன் அவனைப் பார்த்தால்? அந்த மான்விழிகள் மயக்கத்துடன் அவனை நோக்கினால்? நினைக்கவே நெஞ்சம் சில்லிட்டது. மனதோரம் அந்தப் பார்வைகளுக்கான ஏக்கமும் உண்டாயிற்று!   இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றின? அவனுக்கே தெரியவில்லை.   ஆனால், அவன் உடலின் ஒவ்வொரு அணுக்களும் அவளுக்காகவும், அவளின் அண்மைக்காகவும் ஏங்கின.   பத்து வயதுச் சிறுமியாக இருந்தவளை அப்போதே அவனுக்குப் பிடிக்கும்தான். ஆனால், அந்தப் பிடித்தத்தின் அர்த்தம் … Continue reading IE-4

IE-3

அத்தியாயம்-3   ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்ற மகேஸ்வரி தன்னை ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக்கொண்டார்.   “அண்ணி, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” மஞ்சுளா சொன்னதை இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார்.   “பின்னே? இதில் யாராவது விளையாடுவார்களா?” என்ற மஞ்சுளா, “என்னப்பா, நான் சொன்னது சரிதானே? நீங்களும் ஒருதடவை உங்கள் வாயால் சொல்லுங்கள். அதன் பிறகாவது உங்கள் தங்கை நம்பட்டும்.” என்றார் கணவனிடம்.   வெண்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீ சொன்னால் அது பிழையாக இருக்குமா மஞ்சு.” என்றார் ராஜசேகரும்.   அப்போதும் ஆச்சரியம் விலகாமல் நின்ற தங்கையிடம் திரும்பி, “இதில் நீ இவ்வளவு ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது மகி? இந்த வீட்டுக்கு மருமகளாகும் உரிமை அவளுக்கு உண்டுதானே..” என்றார்.   கண்கள் பனிக்கத் தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்தார் மகேஸ்வரி. சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி பத்து வருடங்கள் கழித்து வந்தபோதும், எந்தவிதக் கோபமும் இன்றித் தன் மகளை மருமகளாக … Continue reading IE-3

இன்னுயிராவாய் என்னுயிரே!- நிதனிபிரபு

எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய ஒரு கதை. எதையும் கட்டாயத்தினால் சாதிக்க முடியாது. அப்படியிருக்க காதல்? பிடித்து எழுதியது…! Continue reading இன்னுயிராவாய் என்னுயிரே!- நிதனிபிரபு