Category Archives: கிருநிசா

கிரு நிஷாவின் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! by துஜிமௌலி

எமது தமிழில் அழகாகக் கதையை ஆரம்பித்து, நாயகன் நாயகியின் காதலை எடுத்து சொல்வதே கதையின் கருப்பொருள்.

தனது தாய் நாட்டில் இருந்து வேலை விடயமாக லண்டன் வரும் நாயகி, விமானநிலையத்திலேயே வைத்து தனது உடமைகளை தொலைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்ப, அக்குழப்பத்தைத் தீர்க்க அறிமுகமாகிறான் நாயகன்.

நாயகி தமிழ், அதுவும் தன் நாட்டுக்காரி என்று தெரிந்து உதவி செய்து, அவளைத் தன் வீட்டிலேயே தங்கும்படி அழைத்து செல்கிறான்.

உறவுகள் என்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் வேற வழி இல்லை என்று நாயகன் ரித்விக்குடன் அவன் வீடு செல்லும் ஆனந்தி, அங்கு உள்ள சூழலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவள், அங்கு ரித்விக் வீட்டில் வேலை செயும் மார்க் எனும் வெள்ளைக்காரனுடன் சகோதரத்துவ பாசத்தை உணர்ந்து, அவனுடன் ஒரு சகோதரி மாதிரியே பாசம் காட்டுகிறாள்.

ஒரு கட்டத்தில் ரித்விக்கின் மேல் காதல் கொண்டு, பின் , அவனின் பிழையான அதாவது அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதை அறிந்து வேதனையுற்ற நேரம், தனது மொத்தக் குடும்பமும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது கேள்விப்பட்டு மொத்தமாக துவழ்கிறாள் ஆனந்தி.

அவன் வீட்டில் இருப்பதையே அவமானமாக கருதியவள், தனது மாமன் மகளைத் தொடர்புகொண்டு ரித்விக் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவள் வெளியேறிய நேரம் ஆனந்தி மீதான காதலை உணரும் ரித்விக், பின், எவ்வாறு நாயகியுடன் சேர்கிறான் என்பதைக் கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.

அழகான கதை, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

Advertisements

உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – கிருநிசா (முழுகதை )

அன்பு வாசகர்களே !

கிருநிசா தனது கதைக்கான முழு லிங்க் தந்துள்ளார். 

முதல் கதை , வாசிப்பவர்கள் அமைதியாகப் போகாமல் உங்கள் கருத்துகளை அவரோடு பகிர்ந்து கொண்டால், மேலும்  அவரது எழுத்தை நேர்த்தியாக்க அது உதவும்.

 

வாசித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறன் மக்களே. லிங்க் டிலிட் செய்துவிட்டேன்
 

உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – கிருநிசா

  

அன்பு வாசகர்களே!

இன்னுமொரு  மகிழ்ச்சியான செய்தி!

 

‘உயிரே உன்னில்  ச(அ)ரண் புகுந்தேன்!’ எனும் அழகிய தலைப்போடு, தன் முதல் கதையில் அறிமுகமாகிறார் ‘ கிருநிசா‘. 

அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மிக்க சந்தோசம். 

முதல் கதை என்று சொல்ல முடியாதவகையில் இலாவகமும் சுவாரசியமுமாகக்  கதை நகர்த்துகிறார்.

நாயகி ஆனந்தவர்ஷினி,  நாயகன் ரித்விக்ராஜ் நம் மனங்களைக் கொள்ளை கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டில், தை முதலாம் திகதி முதலாவது அத்தியாயத்தோடு உங்களிடம் வரவுள்ள கிருநிசாவை, வாழ்த்துவதுடன், உங்கள் ஆதரவையும்  நல்குவீர்கள் என்று நம்புகிறேன் .

 

அவரது சிறு அறிமுகமும் கதைக்கான சிறு முன்னோட்டமும் கீழே…

 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நான் கிருபாகரன் நிசாந்தி.  கிருநிசா என்ற பெயரில் எழுதப்போகிறேன்.
என் சொந்த இடம் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை.

 

நிறைய கற்பனைக் கதைகளை நினைக்கும் என்னையும் ‘நீ கதை எழுது, நல்லா வரும்.’ என, துஜி தூண்டிவிட்டாள்.
அதன் பயனாக, என் முதல் முயற்சியுடன் உங்களை நாடி வந்துள்ளேன். 
முதலாவது அத்தியாயத்துடன் வருகின்ற முதலாம் திகதி சந்திப்போம்.
அன்புடன் ,
கிருநிசா 
கதை முன்னோட்டம் 

 

லண்டன் ஹீதுறு விமான நிலையம்.

அங்கிருந்த இருக்கையில் சம்மணமிட்டபடி அமர்ந்திருந்தாள் அவள்.

கண்களை மூடி, கைகூப்பி வேண்டியபடி இருந்த அவளது தோற்றம் அங்கிருந்த ஒருவனை உற்றுப்பார்க்கவைத்தது.

அவன், லண்டனில் ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்கும் இலங்கைத்தமிழன். பார்ப்பதற்கு வெளிநாட்டவன் போலவே இருப்பான். தனது நண்பனை வழியனுப்புவதற்கு அந்த விமான நிலையத்திற்கு வந்திருந்த அவனைத் திரும்பிப்பார்க்கவைத்தாள் அவள்.

மெல்ல அவளருகில் சென்றவன் , “ஹேய்! இங்க பார்!” என்று, அவளது முகத்திற்கு நேரே தனது கையைத் தட்ட, அதிர்ந்து, கண்களை மலர்த்தினாள் அந்தக் காரிகை…