Sticky post

செப்பனிடுவோம்!

எனக்கும் எழுத்துக்குமான அறிமுகம் என்று பார்த்தால் மிகச் சில வருடங்களே. அதாவது, ஆரம்பப்பள்ளியில் பயில்கிறேன் என்று வைத்துக் கொள்வோமே! அதிலும், நாவல்கள் எழுதுவதென்பது சிறுகதைகளில் இருந்தே ஆரம்பமானது. சிறுகதைகள் வாசிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். வரிவரியாக அனுபவித்து வாசித்தப் பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தும் இருக்கிறேன். அப்படி, மனதில் கல்வெட்டாகப் பதியும் எழுத்துகளைப் பார்க்கையில் உண்மையாகவே … Continue reading செப்பனிடுவோம்!

எங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்! – ரோசி கஜன்

    மார்கழி என்றதும் ‘நத்தார்’ நினைவில் வராதிருக்கவே முடியாது.   இப்போதெல்லாம், மதம் என்றதையும் கடந்து மகிழ்விற்காகவென்று நத்தார் கொண்டாடப்படுவது மிக இயல்பாகி வருகிறது.   ஊரிலிருக்கும் பொழுது,  ஒரு மேசையின் மூலையில் சுவரோடு இருக்கின்ற மாதிரி சவுக்கு மரக்கொப்பு; அதில் சில மணிகள், கலர் காகிதங்கள், மின்னிகள், விடிவெள்ளிகள் என எளிமையாக மர … Continue reading எங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்! – ரோசி கஜன்

உன் வாசமே என் சுவாசமாய் ! கதையிலிருந்து…

உன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒன்று,    நினைக்க நினைக்க துன்பம் தருமானால்,    உன்னை வாட்டி வதைக்குமானால்,    உன்னைத் தன்னிஷ்டத்துக்கு அகங்காரத்தோடு ஆட்டி வைக்க முயலுமானால்,    அப்படிப்பட்ட ஒன்றுக்கு உன் சிந்தையில் நீ இடமே தரலாகாது.    அப்படி இடம் தருபவளாள்/னால் வாழ்வை வெற்றிகொள்ள முடியவே முடியாது.   கடக்கும் ஒரு கணத்தையேனும் நிம்மதியாக, அமைதியாகக் கழிக்கவே முடியாது. … Continue reading உன் வாசமே என் சுவாசமாய் ! கதையிலிருந்து…

அறுபடும் நூலிழைகள்!

                     அறுபடும் நூலிழைகள்:       நவீன தொழில் நுட்பமும் குடும்ப உறவுகளும் .  தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகவளர்ச்சியும் மிகமிக நெருக்கனமானவை. முன்னையதன் உயர்வு பின்னையதன் முன்னேற்றத்திற்கு நிச்சயம் துணை செய்யும் என்பதை மறுக்க முடியாது.       அதேநேரம், நவீன தொழில்நுட்பத்தின் … Continue reading அறுபடும் நூலிழைகள்!

வாழ்க்கை!

 வாழ்க்கை வாழ்க்கை, சட்டென்று உச்சரிக்கும் இச்சொல் மிக மிக ஆழமானது; பரந்து விரிந்தது; கண்ணைக்கூசச் செய்யும் ஒளியைத் தரவல்லது; அதே, இன்னொருகணம் கும்மிருட்டையும் காட்டிவிடும்!   வழியெங்கும் மெத்தென்ற மலர்களால் ஸ்பரிசிக்கவும் செய்யும்; நறுக்கென்ற கற்களின் கூர்மையும் பதம் பார்த்துவிடும்!   இதமான தென்றாலாக தழுவும் அது, மறுகணம், ஆக்ரோசமான சுழல் காற்றாகவும் மாறிவிடலாம்!   … Continue reading வாழ்க்கை!