Category Archives: என்றும் உன் நிழலாக!

என்றும் உன் நிழலாக! – ஹமீதா

உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்து…நெதெர்லாந்தில் வசிக்கும் இந்தர்….புவனி தம்பதியினர்…இவர்களின் பிள்ளைகள் ரஞ்சன் மற்றும் ரதீஷ். இந்தரின் தங்கை மகள் நிதி…..போரில் உயிருக்கு உயிரான தமயனை பறிகொடுத்து…வாழும் வழி அறியாத நிலையில் இந்தருடன் நெதெர்லாந்து க்கு அனுப்பி வைக்கப் படுகிறாள். பெண்பிள்ளையின் பொறுப்பை ஏற்க விரும்பாத புவனி…ஒன்பது வயதேயான அந்த சின்னஞ்சிறு மனதை சொல்லம்புகளால் தாக்கி தாக்கி சல்லடையாக்குகிறார்.

பெற்றோரையும் உடன்பிறந்தோரையும் பிரிந்து அந்நிய தேசத்தில்…மாறுபட்ட காலநிலைகளில்….புவனியின் குத்தல் பேச்சுக்கிடையே வளரும் நிதியை….ரஞ்சனும் ரதீஷும் அன்பாய் அரவணைத்துக் கொள்வது அழகு. இந்தரும் அவள் மீது பரிவாக இருந்தாலும் மனைவிக்காக தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிப்பவர். காலப்போக்கில் புவனியின் அச்சத்தை உண்மையாக்குவது போல…ரஞ்சன்…நிதியின் பால் காதல் கொள்கிறான். இதை உணர்ந்து கொள்ளும் நிதி அவனை தவிர்க்கிறாள்.

புவனியின் அக்கா சுமியின் மகன் வசீகரன். அமாங்க….பேரை வெச்சே சொல்லிடலாம்…இவர் தான் நம்ம ஹீரோ….

வேலைக்கு செல்லும் நிதிக்கு….அவ்வப்போது…ரஞ்சனின் கெஞ்சலுக்காக பிக் up..drop….குடுக்க வரும் வசி….இயல்பாகவே இறுகிப் போயிருக்கும் அந்த இளம் பெண்ணின் உணர்வுகளை லேசாக்கும் பொருட்டு சீண்டிக் கொண்டே இருப்பது வெகு இயல்பு. எல்லோரிடமும் ஒதுங்கி பழகும் நிதி ஒரு வழியாய் வசியை நண்பனாக ஏற்கிறாள். நிதியின் மீதான ரஞ்சனின் காதலை ஏற்கனவே அறிந்திருக்கும் வசி..ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை உணர்ந்து கொள்கிறான்….அவளுக்கு ரஞ்சன் மீது அது போல எண்ணமில்லை என்பதையும் அறிந்து கொள்கிறான். அப்புறம் ஐயாவோட approach கொஞ்சம் மாறிப் போகுது. நடு நடுவே romance களை கட்டுது….இதற்கிடையே ரஞ்சன் தன விருப்பத்தை தன தாயிடம் வெளிப் படுத்த…அவர் நிதியை அடிக்க….இதை அறிந்த வசி அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று காதலை சொல்லி….வீட்டிலும் சம்மதம் வாங்கி விடுகிறான்.

நிதி வசி உரையாடல்கள் வெகு அழகு. அவளிடம் கனிவும் காதலுமாக அவன் பேசும் வார்த்தைகள்….நம் காதில் ஒலிப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்தாளராய் ரோசி…அங்க நிக்கறாங்க…..

இவர்களின் காதல் அறிந்து ரஞ்சனின் கோபம்…இயலாமை…தன்னை மனம் புரிந்தாலும் தன் தாய் அவளை மகிழ்ச்சியாக இருக்க விட மாட்டார் என்ற நிதர்சனம் புரிந்து…அவள் வாழ்வு வசீயுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அவனின் உணர்வுகள்……. ரஞ்சனிடம் நேரடியாக பேசி தெளிவு படுத்தும் வசி….அவனின் மெல்லிய குற்ற உணர்வு….. அருமை….

ரஞ்சனை விரும்பும் காயாவை நிதி அவனுடன் கோர்த்து விடுவதும்….வசியுடன் இவள் தனித்திருக்கவே இவள் இப்படி செய்கிறாள் என்று ரஞ்சன் எரிச்சல் படுவதும் செம காமெடி…. 

சரி சாதாரண முக்கோண காதல் கதை போலிருக்கு ன்னு ரொம்ப லேசா எடை போட்டுடாதீங்க பா….

இறந்து விட்டதாக கருதப்பட்ட நிதியின் அண்ணனின் புகைப் படத்தை facebookil கண்டு…அவரை சந்திக்க சென்னை வருகிறார்கள். பழைய நினைவுகளை முற்றிலும் மறந்த நிலையில் இருக்கும் அவளின் அண்ணனுடனான சந்திப்பும்….பின்பு பிரிந்த குடும்பம் ஒன்றாக இணையும் தருணமும்……உணர்வுக் குவியல்.

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வலி…ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது.

நிதியின் அண்ணன்…அவரை காப்பாற்றி வளர்க்கும் குடும்பம்….ஏனோ மனதில் ஒட்டவில்லை. கதையின் பிற்பகுதியில் அந்த கதா பாத்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டதால் இருக்கலாம்….

நிதியை ஒருபோதும் தங்கையாக நினைக்க மாட்டேன் என்று ரஞ்சன் சொல்வதை வெகுவாக ரசித்தேன்…அது தான் எதார்த்தம். 

குடும்ப உறவுகளின் முக்கியத்துவம்……ரஞ்சன் ரதீஷ் வசி…சகோதர பாசம்…புரிந்துணர்வு…..இவர்கள் மூவரும் நிதி மீது கொண்ட அக்கறை….குத்தி குத்தி பேசும் மாமியை கூட….அவரின் நிலையில் இருந்து புரிந்து கொள்ளும் நிதியின் மென்மையான மேன்மையான குணம்…நெதெர்லாந்து பற்றிய குறிப்புகள்…வர்ணனைகள்…..வெகு இயல்பான இலங்கை தமிழ்…..உரையாடல்களில் மெலிதாக இழையோடும் நகைச்சுவை……நிதியின் அண்ணனுக்கு பழைய நினைவுகள் திரும்பாதது….இவையெல்லாம் கதையின் highlights.

அழகாய் எங்க மனதை பறித்தது மட்டுமல்ல…….தேர்ந்த கதைசொல்லி ஆகிடீங்க ரோசி…வாழ்த்துக்கள்.

Advertisements

என்றும் உன் நிழலாக! -சித்திரா. ஜி

 

மண்ணில் பிறந்த எல்லோருக்கும் பூமிதான் வீடு..வானமே கூரை….படைக்கப்பட்ட எல்லோருக்கும் இருக்கும்உரிமை எப்பொழுது யாரால் பறிக்கப்படும் என்பதை படைத்தவனும் அறிவானா….காலச் சக்கரத்தில்அலைக்கழிக்கப்பட்ட ஒரு மெல்லிய சிறு பெண்ணின் உணர்வுகள்…..உள்ளுக்குள் அமுங்கி….உறையும் பொழுது அவளுக்குள் ஏற்படும்மாற்றங்கள்….
அவளை உணர்வுள்ளபெண்ணாக மாற்ற போராடும் இரண்டு மேன்மையான இதயங்களைப் பற்றியக் காதல் கதை….
அப்படிசொல்லத்தான் ஆசை…..ஆனால் படித்துமுடித்தவுடன்…..ஏற்படும் உணர்வு….????????????????

உள்நாட்டுப்போரால் யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயர்ந்த நாதன்.. ரஞ்சிதம் தம்பதியரின் பெண் நிதி……போரில் தன்மகனைஇழந்ததுபோல மகளையும் இழக்க விரும்பாத அவர்கள்,தன் ஒன்றுவிட்ட அண்ணன் இந்திரனுடன் நெதர்லாந்திற்கு அனுப்பி வைக்கிறார்ரஞ்சிதம்……உயிராய்மதித்த அண்ணனை இழந்தது மட்டும் அல்லாமல்….குடும்பத்தையும் இழந்து..மாமாவுடன் பயணிக்கிறாள் நிதி…….இந்திரனின் மனைவியான புவனிக்கு இவளின் வரவு பிடிக்க வில்லை என்றாலும்….கணவனுக்காக மனமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்….இவர்களின் புதல்வர்கள்..ரஞ்சன்..ரதீஷ்….அவளை அம்மாவிற்கு பிடிக்கவில்லைஎன்றாலும்….முடிந்தவரை அவளை பாதுகாப்பான உணர்வுடன் தங்கள் வீட்டுப் பெண்போல பார்த்துக்கொள்கிறார்கள்..

படிப்புடன் சேர்ந்துபகுதிநேர வேலை செய்து தனது வீட்டிற்கும் பணம் அனுப்புகிறாள்..நிதி..
எப்பொழுதும் இறுகிய முகத்துடன் இருக்கும் அவள்….அவளுடைய இளம்பருவத்திற்கான உணர்வுகளையும் எந்தவிதஆசாபாசங்களையும் வெளி காண்பிப்பதில்லை…..
வளர்ந்த பின் ரஞ்சனுக்குஅவள்பால் அன்புடன் கூடிய அக்கறை ஏற்படுகிறது…..இது நடந்துவிடுமோ என்று ஆரம்பம் முதல் தவிக்கும் புவனி அதைஎதிர்க்கிறார்…..
புவனியின் அக்காசுமியின் மகன்..வசி……தன் சித்தி வீட்டில் வளரும் நிதி யை ரஞ்சனுடன் சேர்ந்து,,அவனின் அக்கறையில் பங்குகொள்கிறான்

அவனுக்கு ..அவனின்அக்கா..ரூபி திருமணம் செய்து கொடுத்த இடத்தில இருந்து பெண் நிச்சயிக்கப்படுகிறது…..ரஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்கநிதிக்கு அவள் செல்லும் இடங்களில் உதவி செய்ய செல்லும் அவன்..நாளடைவில் அவள்பால்காதல் கொள்கிறான்….

முதலில் யாருடனும்இயல்பாக இருக்கும் எண்ணமில்லாத நிதி..அவனை நட்பாக ஏற்றுக் கொள்கிறாள்..அவனிடம் தன்உணர்வுகளை சொல்லும் அளவிற்கு …..

ஒரு கட்டத்தில் வசிதனக்கு நிச்சயிக்கப்பட்டதிருமணம் வேண்டாம்என்று மறுத்துவிட..காரணம் புரியாமல் எல்லோரும் விழிக்க…..ரதீஷ் க்கு மட்டும் வசியின் பார்வை நிதியிடம் இருப்பதை கண்டுகொள்கிறான்…..
அதைமறைமுகமாக அண்ணன் ரஞ்சனிடம்..சொல்லவும்செய்கிறான்அளவுக்கு அதிகமாக அவளை நேசிக்கும் ரஞ்சன் ..தன் அம்மாவிடம் தன் நேசிப்பைச் சொல்லும் நாளில்..வீட்டில்பிரச்னை உண்டாகவசி அவளை தன் இருப்பிடம் கூட்டி சென்று..தன் பெற்றோரிடம் அவளை விரும்புவதாக சொல்கிறான்

இந்திரன் நிதியை யாழில் இருந்து அழைத்து வந்த காலத்தில் இருந்து அவளிடம் உண்மையான பாசத்துடனும்..நெருக்கத்துடனும்இருக்கும் அவனின் பெற்றோர்..அதை ஏற்றுக் கொள்கின்றனர்….

இதற்கிடையில் facebook ல்..ஒரு profile picture பார்க்கும்நிதி வசியிடம்அப்படத்தில் இருக்கும் நபர் தன் இறந்துவிட்ட அண்ணன் போல இருக்கிறது என்று சொல்ல எல்லோருக்கும்அதிர்ச்சி…..
அவரைத் தேடி இந்தியா வரும் நிதி…..அவரைக்கண்டுபிடித்து…..பழையநினைவுகள் இழந்த அண்ணனையும் தன் குடும்பத்தையும் இணைக்கிறாள் ..
தன்னையே நினைத்துக்கொண்டு இருக்கும் ரஞ்சனை மனம்மாற்றி அவனை விரும்பும் காயாவை மணம் முடித்து வைக்கிறாள்….

……………………….ஒருமுழு எழுத்தாளருக்கு உரிய திறமை வந்துவிட்டது ஆசிரியருக்கு….

கதை என்பது இரண்டுநபர்களோ அல்லது அவர்களுக்கு இடையில்ஏற்படும் உணர்வுகளோ .அவற்றை அவர்கள் தீர்த்துக் கொள்ள ஏற்கும் முயற்சி…..என்பதுமட்டுமல்லஅவர்கள் வாழும் இடம்அவற்றின் வர்ணனை..அக்காலத்தில் நடக்கும்சுற்றுப் புற நிகழ்வுகள்….

ஒவ்வொருஇடத்திலும்ஏற்படும் மாற்றங்கள்..அம்மாற்றத்திற்கேற்ப ஏற்படும் கதை மாந்தர்களின் உணர்வுகள் இவையெல்லாம்தான்,,இத்தனையும்கையாளப் பட்டு இருக்கிறது இந்தக்கதையில்….

முதலில் என்மனதில்இடம் பெற்றது உங்களின் நெதர்லாந்து காலங்களின் தெளிவான வர்ணனை……

இயல்பான நிகழ்வுகளை..யாதார்த்த மனிதர்களின்எண்ணம் கொண்டு எழுதி இருப்பது அருமை

யாரும்யாருக்காகவும் தங்களின் உண்மையானஇயல்பை மறைக்கவும் இல்லை..மாற்றவும் இல்லைஅந்த வகையில் கதாபாத்திரங்களை கடைசி வரையில் கொண்டுசென்றிருப்பது..இயல்பு….

தவிர்த்துஇருக்கலாம்……

நிறைய சமையல்குறிப்புகள்..நிதி தயாரிப்பதும்……ஒவ்வொருவர் வீட்டிலும் சாப்பிடவருவதுமான நிகழ்வுகள் அதிகம் இருப்பதுபோலத்தோன்றுகிறது….

எல்லாவற்றையும்எல்லா இடங்களிலும் விரிவாகசொல்லவேண்டியதில்லை…..

குறிப்பாக நடந்ததாக சொல்லலாம்….

இப்படியான விஷயங்கள் இருப்பதால்….தொய்வில்லாமல்சென்றாலும் ஒரே இடத்தை சுற்றி வருவதைப்போலநினைப்பதை தவிர்க்க முடியவில்லை..

கதை படித்துமுடித்தவுடன் எத்தனை நீண்டு இருப்பினும்……சூழ்நிலையால் மற்றவர்கள் வீட்டில் இருக்க நேரும் பிள்ளைகளுக்கு ஏற்படும் அந்தஉணர்வுகள்….இந்த நிலை பிறந்தயாருக்கும் ஏற்படக் கூடாது ..என்னதான் தாங்குவதற்கு ஆள் இருந்தாலும்..அம்மனத்தில்ஏற்படும் வடுக்கள் என்றாவது மாறுமா…..

ரஞ்சனின் பாத்திரப்படைப்பு அருமை…….இதுதான் காதலா……சூப்பர் rosei………….

 

என்றும் உன் நிழலாக! – தேனுராஜ்


ரஞ்சன் — இந்திரன்- புவனேஸ் தம்பதிகளின் மகன் .. தம்பி ரதீஷ்.. நெதர்லாந்தில் வசிப்பவர்கள்.. 
 இருவருமே படித்துக்கொண்டு இருப்பவர்கள்… 

புவனியின் சகோதரி சுமி., இந்திரனின் நண்பன் ஜீவானந்தத்தை மணம் செய்து…, வசி, நிம்மி, & ரூபி என்ற பிள்ளைகளுடன் வசிப்பவர்.. பெண்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட… 

வசீகரன் — சுமி -ஜீவானந்தம் தம்பதிகளின் மகன் … இவனுக்கென நிச்சயிக்கப்பட்டவள் நிஷா… வசி ஓட்டுனர்  பயிற்சி பள்ளி வைத்து நடத்துபவன்…

நிதி — சொந்த ஊரை, உறவை விட்டு , மாமா இந்திரனின் தயவால் நெதர்லாந்த் வந்து , மெக் டொனால்ட்ல  வேலை பார்ப்பவள்… கூடவே லேப் டெக்னீஷியன்  படிப்பையும் படித்துக்கொண்டு இருப்பவள்…

நிதியை தத்தெடுத்து கூட்டி வந்ததில் விருப்பமில்லாத புவனி, அதை தன் சொல்லிலும், செயலிலும் காட்ட…. மனம் நொந்து இருக்கும் அவளுக்கு ஆறுதல் ரஞ்சனும், ரதீஷும் மட்டுமே…! ரஞ்சனை தன் உடன்பிறவா சகோதரனாக இவள் நினைக்க…. அவனோ வேறு நினைப்பை சுமந்தப்படி இருக்க…

எப்போதும் நிதியை கரித்துக்கொட்டும் தன் சித்தியை எதிர்க்கும் துணிவில்லாமல்  இருக்கும் நிதியின் மேல் தன் கோபத்தை காட்டும் வசி, தாயை எதிர்க்க தைரியம் இல்லாமல் இருக்கும் ரஞ்சன்…, இருவருக்குமே நிதியின் மேல் அக்கறை, அன்பு, பாசம்… 

ரதீஷின் தோழி காயா ….  பெற்றோர்களின் பாசம் கிடைக்காமல் தவிக்கும் அவளுக்கு ரதீஷ் வீட்டினரின் அன்பும், பாசமும் கிடைக்க… அந்த வீட்டில் ஒருத்தி ஆகிறாள்… இவளும் ரஞ்சனை விரும்ப..

கண்ணன் — மனோகர்-விமலா தம்பதியரின் மகன்… விமாலாவின் அண்ணன் நேசனின் மருத்துவமனையிலேயே மருத்துவராக மனோகர் இருக்க…, அங்கேயே நிர்வாக பொறுப்பில் கண்ணன் இருக்க…

நேசனின் மனைவி ஜீவிதா , மகள்கள் ஜனனி, ஜமுனா… ஜனனிக்கு கண்ணனின் மேல் விருப்பம்… ஆனால் கண்ணன் மறுத்துவிட….  அவளின் துரத்தல், மிரட்டல் எல்லாம் ஆரம்பமாக…..

நிதியை விரும்பும் ரஞ்சன்…, ரஞ்சனை விரும்பும் காயா…
வசியை விரும்பும் நிதி…. நிதியை விரும்பும் வசி..
கண்ணனை விரும்பும் ஜனனி…

இவர்களில் எந்த காதல் ஜெயித்தது….?


யார் யார் யாருடன் வாழ்வில் இணைந்தார்கள்…?

புவனியின் கொடுமை ஓய்ந்ததா…?


கண்ணனுக்கும், நிதிக்கும் என்ன தொடர்பு…?

இதையெல்லாம் தெரிந்துக்கொள்ள கதையை படிங்க…. அழகிய இலங்கை தமிழில் அழகான குடும்ப கதை…!

என்றும் உன் நிழலாக! – பொன்

தாநாயகன் – வசீகரன் 
கதாநாயகி – நிதி.

தாய் நாட்டையும் ,சொந்தங்களையும் விட்டு தொலைவில் …..தூரத்து சொந்தமான மாமன் வீட்டில் அடைக்கலமாகும் நிதி அங்கே மாமியால் தினம் கரித்து கொட்ட்படுகிறாள்.
வேதனையை உள்ளடக்கி ,மாமியையும் புரிந்து அனுசரணையாக வாழும் நிதியின் நிலை படிப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும் ,,நம் ரோசிக்காவின் எழுத்து நடை.

ரஞ்சன் ,நிதிஷ் என்னும் மாமன் பிள்ளைகளும்,மாமியின் அக்கா மகன் வசீகரனும் நிதிக்கு ஆறுதலாக இருக்க ……….அவள் வாழ்விலும் வசந்தம் வருகிறது வசீகரன் உருவில்.

காதலுக்கு தூது விட்டால் ………என்ன நிலை என்பதை ……ரஞ்சன் நிலையில் அறிந்து கொள்ளலாம்.

மாமா பையன் ரஞ்சனை தன் அண்ணனாய் காண,இறுதியில் தொலைந்த அண்ணனையும் கண்டு இணைகிறார்கள்.

சின்ன கதை தான் ….ஆனால் சொன்ன விதத்தில் …….அவ்வளவு அழகு,எதார்த்தம் ……..உணர்வுகள் எழுத்துல புகுந்து விளையாடுது.
மிஸ் பண்ணாமல் படிங்க.

என்றும் உன் நிழலாக!- பவி


இலங்கை தமிழ் முதலில் follow பண்ண கஷ்டமாக இருந்தாலும், அப்புறம் ரொம்பவே பிடித்து போகிறது.

நிதி – அழகான கதாபாத்திரம் – நாடு கடந்து பெற்றோரை பிரிந்து… கூடவே தன் குடும்பத்தின் பொருளாதார பொறுப்பையும் சிறு வயதில் ஏற்றிருக்கும் ஒரு பெண்ணை கண் முன் நிறுத்துகிறது. ரஞ்சனின் ஆர்வம் புரிந்து ஒதுங்குவதும், வசியிடம் ஒதுங்க நினைத்தும் முடியாமல் காதல் கொள்வதும் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

ரஞ்சன் – முதலில் நிதியின் மீது பரிதாபம்- வயது ஆக ஆக காதல்… அது கை கூடாத போது வேதனை… தன் அண்ணனே தனக்கு துரோகம் செய்து விட்டாரோ என்று கோபம் கொள்வது… பின் நடைமுறை உணர்ந்து தன்னை தேற்றிக் கொள்வது என்று வெகு இயல்பான படைப்பு.

வசீகரன் – பெயரைப் போலவே வசீகரிக்கும் குணம் கொண்டவன். நிதியை மட்டுமல்ல படிப்பவரையும் வசீகரிக்கும் அழகான கதாபாத்திரம். ரஞ்சன் நிதியை விரும்புகிறான் என்று தெரிந்தும் அவள் மேல் காதல் கொண்ட பிறகு குற்ற உணர்வு கொள்வதும்… எது எப்படி இருந்தாலும் நிதியை தன்னால் விட முடியாது என்று உறுதியாக இருப்பதுமாக சிறப்பான கதாபாத்திரம்.

நிதியும் அவளது அண்ணனும் சந்திக்கும் இடம் உணர்வு குவியல்.

எளிமையான ஒரு கதையை, அழகான நடையுடன் எடுத்து சென்று நல்ல கதை கொடுத்ததற்கு நன்றி ரோசிக்கா.