அன்பெனும் பூங்காற்றில்! – தேனு ராஜ்

ஸ்ரீ, மஞ்சு, மயூரி மூவரும் தோழிகள்… இதில் மஞ்சு கலகலப்பான பேர்வழி…  துடுக்குத்தனம் ஜாஸ்தி.. அதே நேரம் பொறுப்பானவளும் கூட. ஸ்ரீ அமைதியானவள்… ஜெயராம் – மேல்படிப்புக்காக இந்தியா சென்றுவிட்டு திரும்பி இருப்பவன்.., தாய்க்கு வேண்டியவற்றை  வாங்க வேண்டி.. கடைக்கு சென்றபோது அவனுக்கும் ஸ்ரீக்கும் மோதல்.. மஞ்சுவின் அண்ணன் சிவாவின் நண்பன் நரேன்… பெற்றோர் இல்லாமல் படித்து முன்னேறி வேலை பார்ப்பவர்.. அவருக்கு மஞ்சுவின் மேல் காதல் வர…  பின் என்ன இருவரும் காதல் பறவைகளாக மாறினார். மயூரியின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ராகவனின் தங்கை மகனான சத்தியன்… மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் பார்த்து..பழகி.. விளையாடி  களித்த சிறுவயது நியாபகத்துடனேயே இவள் அங்கு இருக்க… சத்தியன் மாமா வீட்டுடன் குடும்ப பிரச்சனை ஆகி விட… இனிமேல் இங்கு வரவே முடியாது என்ற  சூழ்நிலையில் அவன் அங்கிருந்து செல்லும்போது சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளை நம்பி மயூவும்….  இவள் நினைவுகளை மட்டுமே எடுத்து சென்ற அவனும் சொல்லாத காதலில் திளைத்து இருக்க… தோழிகள் … Continue reading அன்பெனும் பூங்காற்றில்! – தேனு ராஜ்

அன்பெனும் பூங்காற்றில்! -priyasarangapani

  செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்  வினைக்கரிய யாவுள காப்பு. –குறள் 781- கதை என்ற கற்பனை சாரலுடன் பயணிக்க வைக்க இரண்டு வழிகளை தேர்ந்தெடுக்கலாம்…ஒன்று நடைமுறை வாழ்வில் ஒவ்வாத அதீத கற்பனை எழுத்துக்கள் மூலம் படிப்பவர்களை வேறு உலகிற்கு அழைத்து செல்லலாம் இல்லை என்றால் சமகால வாழ்வில் இருக்கும் சராசரி மனிதர்களிடையே நடக்கும் சம்பவங்களை தொகுத்து தன் எழுத்து மூலம் ஆளுமையை நிலைநாட்டலாம்….இதில் ரோசி கையாண்டது இரெண்டாவது….. சில நேரங்களில் முதல் முறை சந்திக்கும் போது முட்டிக்கொள்பவர்கள் பின்னால் டூயட் பாட வாய்ப்புண்டு…அதே தான் ராம் & ஸ்ரீ வாழ்வில்…….தெரியாமல் மோதிகொண்டு பிறகு காதலித்து கல்யாணம் முடித்த ஜோடி……. வாயாடிகளை அனைவருக்கும் பிடிக்காது என்று சொல்லமுடியாது…….அந்த துடுக்கு தனமே மற்றவர்களை தன்பால் ஈர்க்கும்…..அண்ணனின் நண்பன் தன் மேல் காதல் வயப்பட்டதை அறிந்து மஞ்சுவும் நரேனை காதலிக்க…இவர்கள் சேர இருக்கும் ஒரே தடையையும் தகர்க்கிறான்…… சிறு வயதில் இருந்தே தன்னுடன் விளையாடும் … Continue reading அன்பெனும் பூங்காற்றில்! -priyasarangapani

அன்பெனும் பூங்காற்றில்!- அனு அஷோக்.

வெவ்வேறு விதமான குணங்கள் கொண்ட மூன்று பெண்கள்,அவர்களுக்குள் உள்ள தோழமை..அவர்களுக்கு அமைய போகும் வாழ்க்கை துணை, அவர்களுடைய குடும்பங்கள் பற்றிய சுவாரசியமான கதை இது  ஸ்ரீ,ஜெயராம்: கதை இவர்களின் மோதலில் இருந்து ஆரம்பிக்கிறது தோழியுடன் ஷாப்பிங் மால் போன ஸ்ரீ..தெரியாமல் ராமின் மீது மோதிவிட,ராமும் அவளை திட்டி விடுகிறான்..பிறகு தான் ஸ்ரீ க்குதெரிய வருகிறது ராம் அவளுடைய தோழி மஞ்சுவிற்கு தெரிந்தவன் என்று…ராம் அவர்கள் படிக்கும் கல்லூரிக்கே விரிவுரையாளராக வருகிறான்.மஞ்சுவின் மூலம் அவனுடைய காதல் தோல்வியை பற்றி தெரிந்து கொண்ட ஸ்ரீக்கு ராமின் மேல் ஈர்ப்பு வருகிறது…ராமும் ஸ்ரீயின் அமைதியான குணம்,நடத்தை எல்லாவற்றிலும் கவரப்பட்டு அவள் மேல் காதல் கொள்கிறான்.இறுதியில் பெற்றோரின் சம்மதத்துடன் அவளை கைபிடிக்கிறான்…இருவரும் இறுதி வரை காதலை பகிர்ந்து கொள்ள வில்லை என்றாலும்..இருவருக்குள்ளும் இழையோடிய காதல் அழகு..மூன்று ஜோடிகளில் எனக்கு பிடித்தது..ஸ்ரீ, ஜெயராம் ஜோடி தான். மஞ்சு,நரேன்: தோழியர் மூன்று பேரில் வாய்துடுக்கானவள் மஞ்சு, தன் அப்பாவிடமே தைரியமாக வாதிடுபவள்..நரேனும் மஞ்சுவும் … Continue reading அன்பெனும் பூங்காற்றில்!- அனு அஷோக்.