Sticky post

NKN-1

  நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது..!!   அத்தியாயம்-1   “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்ல கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவென சிரித்தாள் மதிவதனி.   மகளின் சிரிப்பை ரசித்தவாறே, “என்னம்மா, பொய்தானே சொன்னாய்?” என்று அவரும் விடாமல் கேட்டார்.   ஒரு காலினை பூமிக்கு நோகாதபடி உதைத்து, “அப்பா” என்று சிணுங்கியவள், “சங்கரனின் மகள் பொய் சொல்ல மாட்டாளாக்கும். ” என்றாள் கண்ணடித்து.   அவளின் அந்த சிறுபிள்ளைத்தனமான செய்கையில் பெருங்குரலெடுத்து சிரித்தார் சங்கரன். அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.   “உன் சிரிப்பே நீ பொய் சொல்கிறாய் என்பதை சொல்கிறது.” என்றவர் மகளின் தாமரை முகத்துக்கு என்றே அளவாய் அமைந்த காதினை வலிக்காதபடி திருகி,   “அம்மாவிடம் இப்படி பொய் சொல்லலாமா வனிம்மா?” என்று கேட்டார்.   வில்லென வளைந்திருந்த தன்னுடைய புருவங்களை உயர்த்தி, நான் கேள்வி கேட்க போகிறேன் என்பதை முன்னே அறிவித்து, “செலவுக்கு போதாது என்று சொன்னால் மட்டும் … Continue reading NKN-1

நேசம் கொண்ட நெஞ்சமிது! நிதனிபிரபு

என் கற்னைக்கருவறையில் உதித்த முதல் குழந்தை இது. குறைகள் சில தென்பட்டாலும் அவை எல்லாமே மிக மிக அழகாக இருப்பதாகத்தான் தோன்றும் எனக்கு. அவைகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம்  கிடைத்தபோதும் அதை செய்யவில்லை நான். முதல் கதை முதல் கதையாகவே இருக்கட்டுமே! நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். வுனியாவில் நான் வாழ்ந்த பசுமையான நாட்களை மீட்டி, நான் வாழ்ந்த பூந்தோட்டத்தை மையமாக வைத்து, நான் கற்ற கல்வி நிலையத்தை களமாக  கொண்டு உதித்த என் முதல் குழந்தை. காதல் இங்கே போராடியிருக்கும். Continue reading நேசம் கொண்ட நெஞ்சமிது! நிதனிபிரபு