IE-4

அத்தியாயம்-4   சூரியனின் வெப்பம் தணிந்துவிட்டதில் மாலைக்காற்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தர்சனின் கார், சற்று வேகமாகவே சாலையில் பயணித்தது. அவன் மனதிலோ ஒருவித உற்சாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.   அதற்குக் காரணமானவளை எண்ணியதுமே அவனது இதழோரம் உல்லாசப் புன்னகை ஒன்று இதமாக ஜனித்தது. அவளையும் அவள் வீசும் அக்கினிப் பார்வைகளையும் நினைக்கையிலேயே அவனுக்குள் என்னென்னவோ மாற்றங்கள்.   இதற்கே இந்தப் பாடாக இருக்கிறதே.. அவள் காதலுடன் அவனைப் பார்த்தால்? அந்த மான்விழிகள் மயக்கத்துடன் அவனை நோக்கினால்? நினைக்கவே நெஞ்சம் சில்லிட்டது. மனதோரம் அந்தப் பார்வைகளுக்கான ஏக்கமும் உண்டாயிற்று!   இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றின? அவனுக்கே தெரியவில்லை.   ஆனால், அவன் உடலின் ஒவ்வொரு அணுக்களும் அவளுக்காகவும், அவளின் அண்மைக்காகவும் ஏங்கின.   பத்து வயதுச் சிறுமியாக இருந்தவளை அப்போதே அவனுக்குப் பிடிக்கும்தான். ஆனால், அந்தப் பிடித்தத்தின் அர்த்தம் … Continue reading IE-4

IE-3

அத்தியாயம்-3   ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்ற மகேஸ்வரி தன்னை ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக்கொண்டார்.   “அண்ணி, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” மஞ்சுளா சொன்னதை இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார்.   “பின்னே? இதில் யாராவது விளையாடுவார்களா?” என்ற மஞ்சுளா, “என்னப்பா, நான் சொன்னது சரிதானே? நீங்களும் ஒருதடவை உங்கள் வாயால் சொல்லுங்கள். அதன் பிறகாவது உங்கள் தங்கை நம்பட்டும்.” என்றார் கணவனிடம்.   வெண்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீ சொன்னால் அது பிழையாக இருக்குமா மஞ்சு.” என்றார் ராஜசேகரும்.   அப்போதும் ஆச்சரியம் விலகாமல் நின்ற தங்கையிடம் திரும்பி, “இதில் நீ இவ்வளவு ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது மகி? இந்த வீட்டுக்கு மருமகளாகும் உரிமை அவளுக்கு உண்டுதானே..” என்றார்.   கண்கள் பனிக்கத் தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்தார் மகேஸ்வரி. சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி பத்து வருடங்கள் கழித்து வந்தபோதும், எந்தவிதக் கோபமும் இன்றித் தன் மகளை மருமகளாக … Continue reading IE-3

Sticky post

NKN-1

  நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது..!!   அத்தியாயம்-1   “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்ல கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவென சிரித்தாள் மதிவதனி.   மகளின் சிரிப்பை ரசித்தவாறே, “என்னம்மா, பொய்தானே சொன்னாய்?” என்று அவரும் விடாமல் கேட்டார்.   ஒரு காலினை பூமிக்கு நோகாதபடி உதைத்து, “அப்பா” என்று சிணுங்கியவள், “சங்கரனின் மகள் பொய் சொல்ல மாட்டாளாக்கும். ” என்றாள் கண்ணடித்து.   அவளின் அந்த சிறுபிள்ளைத்தனமான செய்கையில் பெருங்குரலெடுத்து சிரித்தார் சங்கரன். அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.   “உன் சிரிப்பே நீ பொய் சொல்கிறாய் என்பதை சொல்கிறது.” என்றவர் மகளின் தாமரை முகத்துக்கு என்றே அளவாய் அமைந்த காதினை வலிக்காதபடி திருகி,   “அம்மாவிடம் இப்படி பொய் சொல்லலாமா வனிம்மா?” என்று கேட்டார்.   வில்லென வளைந்திருந்த தன்னுடைய புருவங்களை உயர்த்தி, நான் கேள்வி கேட்க போகிறேன் என்பதை முன்னே அறிவித்து, “செலவுக்கு போதாது என்று சொன்னால் மட்டும் … Continue reading NKN-1

கடைசியாய் ஒரு காதல் விடு தூது!

எப்போதுமே உன்னை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. உன்னில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஏளனமாய் எண்ணியுமிருக்கிறேன். உன்னை வாசித்ததும் இல்லை நேசித்ததும் இல்லை. இப்போதெல்லாம் எப்படி என்னை ஈர்த்தாய் என்றே தெரியாமல் சுழலுக்குள் சிக்கிய மீனாய் உனக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். உன்னைத்தான் எனக்குப் பிடிக்காதே. பிறகும் எப்படி உன் புறமாய் என் மனம் அலைபாய்கிறது. உன் மீது மட்டுமில்லை என் மீதும் கோபம் கோபமாய் வருகிறது. சரி உன்னை ஏற்றுக்கொள்வோம் என்றால் நீ முரண்டு பிடிக்கிறாய் என்னருகே வரமாட்டேன் என்று. என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்னைப்பற்றி? வேலை வெட்டி இல்லாதவள் என்றா? அல்லது உன்னையே நினைத்துக் கலங்கி கொண்டிருப்பேன் என்றா? ஒரே முடிவாய் சொல்லிவிடு; என்னிடம் வருவாயா மாட்டாயா? வருவதாய் இருந்தால் உடனேயே வா இல்லையோ என் கண்காணாத தூரத்துக்கே தொலைந்துபோ! எதையோ நான் தேடிச் செல்லும் பொழுதுகளில் எல்லாம் நீயாக வந்து கண்களில் விழுகிறாய். ஆசையையும் ஏக்கத்தையும் ஒன்றாகவே தருகிறாய். என் … Continue reading கடைசியாய் ஒரு காதல் விடு தூது!

நல்லூர் கந்தன்!

எங்கள் நல்லூர் கந்தனை பாருங்கள். இதுவரையிலும் நானே போனதில்லை. பார்ப்போம், என்று கந்தன் என்னை அழைக்கிறான் என்று.             Continue reading நல்லூர் கந்தன்!

நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!- முழுக்கதை

ஹாய் ஹாய்,   நிலவே… நீ என் சொந்தமடி முழுக்கதைக்குமான லிங்க் கீழ இருக்கு. படித்து மகிழ்வீர்களாக. மக்களே, 18வது எபி மிகவுமே பெரிதாக இருந்ததால் அதை இரண்டாக்கினேன். அதனால்தான் நேற்று 20 இல் இருந்து துவங்கியது. ஆகவே குழப்பம் வேண்டாம்.   Continue reading நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!- முழுக்கதை

NNES Final

வணக்கம் உறவுகளே,   உங்கள் பொறுமையை நிறையவே சோதித்துவிட்டேன் என்று தெரியும். என்னளவில் கதையை ஒருவழியாக முடித்துவிட்டேன் என்கிற சந்தோசம் தான். ஆமாம், எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. ஹாஹா… ஆனால் உண்மையாகவே கதையை முடித்துவிட்டேன். இனி நீங்கள்தான் குறை நிறைகளை சொல்லவேண்டும். மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். இதுநாள் வரை என்னோடு பயணித்த எல்லோருக்கும் மிக்க நன்றி!   நட்புடன் நிதா.   Continue reading NNES Final

NNES-18

ஹாய் ஹாய்,   எப்பவும் போல லேட். சரி சரி விடுங்க. நிதா இப்படித்தானே. இன்னொரு விஷயம் மக்களே, இந்த அத்தியாயம் சிலருக்கு போர் அடிக்குமோ தெரியாது. ஆனாலும் இதை தவிர்க்க விருப்பமில்லை எனக்கு. அயராது உழைத்தான், இரவு பகல் பாராது உழைத்தான், வெறியோடு உழைத்தான் என்கிற பொய்யான வார்த்தைகளில் செந்தூரனின் முன்னேற்றத்தை அடக்கிவிட்டுப் போக விருப்பமில்லாமல் இருந்தது. அவன் எப்படி முன்னுக்கு வருகிறான். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கான பாதையை எப்படி வகுக்கிறான் என்பதை சொல்லி இருக்கிறேன். சும்மா முன்னேறி விட்டான் என்று சொல்வதை விட இப்படிச் சொல்வது எனக்கு மனதுக்கு நிறைவாய் இருந்தது. அதனாலேயே இந்த நீண்ட அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பொறுமையை சோதித்தாலும் கொஞ்சம் எனக்காக பொறுமையோடு படித்துவிட்டு, அவன் முன்னேற்றத்துக்காக நான் முன்வைத்த ஐடியா எப்படி என்று சொல்லுங்கள். ஆனால், இங்கே சொல்லியிருப்பது பொய்யோ கற்பனையோ அல்ல! நான் கண்கூடாகக் கண்டா ஒன்றை செந்தூரனுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவுதான். அடுத்தது … Continue reading NNES-18

NNES-17

ஹாய் மக்களே,   செந்தூரனை தேடிய எல்லோருக்கும் நன்றி. மிகவுமே சந்தோசம். அதேமாதிரி ஒரு ‘சாரி’ எல்லோருக்கும் பார்சல்.(நிதாவோட ஸ்பெஷலே எப்பவுமே லேட் பண்றதுதான்.) இதோ அடுத்த எபி. படிச்சிட்டு எப்படி இருக்கு எண்டு சொல்லுங்கோ.     Continue reading NNES-17