Category Archives: துஜி மௌலி

கிரு நிஷாவின் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! by துஜிமௌலி

எமது தமிழில் அழகாகக் கதையை ஆரம்பித்து, நாயகன் நாயகியின் காதலை எடுத்து சொல்வதே கதையின் கருப்பொருள்.

தனது தாய் நாட்டில் இருந்து வேலை விடயமாக லண்டன் வரும் நாயகி, விமானநிலையத்திலேயே வைத்து தனது உடமைகளை தொலைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்ப, அக்குழப்பத்தைத் தீர்க்க அறிமுகமாகிறான் நாயகன்.

நாயகி தமிழ், அதுவும் தன் நாட்டுக்காரி என்று தெரிந்து உதவி செய்து, அவளைத் தன் வீட்டிலேயே தங்கும்படி அழைத்து செல்கிறான்.

உறவுகள் என்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் வேற வழி இல்லை என்று நாயகன் ரித்விக்குடன் அவன் வீடு செல்லும் ஆனந்தி, அங்கு உள்ள சூழலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவள், அங்கு ரித்விக் வீட்டில் வேலை செயும் மார்க் எனும் வெள்ளைக்காரனுடன் சகோதரத்துவ பாசத்தை உணர்ந்து, அவனுடன் ஒரு சகோதரி மாதிரியே பாசம் காட்டுகிறாள்.

ஒரு கட்டத்தில் ரித்விக்கின் மேல் காதல் கொண்டு, பின் , அவனின் பிழையான அதாவது அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதை அறிந்து வேதனையுற்ற நேரம், தனது மொத்தக் குடும்பமும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது கேள்விப்பட்டு மொத்தமாக துவழ்கிறாள் ஆனந்தி.

அவன் வீட்டில் இருப்பதையே அவமானமாக கருதியவள், தனது மாமன் மகளைத் தொடர்புகொண்டு ரித்விக் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவள் வெளியேறிய நேரம் ஆனந்தி மீதான காதலை உணரும் ரித்விக், பின், எவ்வாறு நாயகியுடன் சேர்கிறான் என்பதைக் கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.

அழகான கதை, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

Advertisements

நிச்சயம் செல்வாய் நரகம்…

புத்தம் புதிதாக ஆரம்பித்திருக்கும் செந்தூரம் மின்னிதழ் 1 இல் வெளிவந்த ரோசிகா வின் நிச்சயம் செல்வாய் நரகம்…..

ஒரு பிள்ளையை பெற்றுவிட்டால் அப்பிள்ளை தானாக சுயமாக முடிவெடுக்கும் காலம் வரை அப்பிள்ளையின் அனைத்து பொறுப்புக்களுக்கும்ம் பெற்றவர்களே காரணம் .

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே

இந்த பாடலுக்கான நூறு சதவிக்கித அர்த்தம் என்ன என்பதை நாம் இந்த கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்க வேண்டும் தான். ஆனால், அது அவர்களின் வாழ்க்கை முறையை நல்லதாக கொண்டு செல்ல வேண்டுமே தவிர அவர்களை தவறான பாதைக்கு எடுத்து சொல்ல கூடாது .

இந்த கதையில் வரும்  ரஞ்சி அளவுக்கு மீறி மகள் பிரியாக்கு செல்லம் குடுத்ததாலும் அடுத்தவர் மகளைப்பற்றி கூறுவதை காதுகொடுத்து கேட்காமல் மகள் மேல் வைத்த கண்மூடித்தனமான  நம்பிக்கை  ப்ரியாவின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டதை அழகா எடுத்து சொல்லி இருக்கிறிங்கள் ரோசி கா .

ப்ரியாவின் வாழ்க்கை இப்பிடி திசை மாறி போனதற்கு நிச்சயம் ரஞ்சி தான் காரணம் . இந்த கதையை படிச்சு முடிச்சதும் ஒரு பயம் மனசுக்க .. எங்கட கவனம் இன்னும் பிள்ளையள் மேல படோணும் எண்டு எடுத்து காட்டிட்டிங்கள்…சூப்பர் கா ..

‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே! BY துஜி சஜீ (துஜி மௌலி)

அன்பு வாசகர்களே!

மீண்டும் நானே …எல்லோரும் நலம்  தானே?

இதோ, ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். 

வேறு என்னவாக இருக்கும்? எல்லாம் கதைதான். 

இம்முறை, சற்றே ஒரு மாறுதலுக்காக புதிதாக ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறேன். 

”இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே!‘ எனும்  கவிதை போலொரு தலைப்போடு, தன் முதல் கதையை நம் முன் கொண்டுவரவுள்ளார்  ‘துஜி மௌலி’.

ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன், படபடக்கும் இதயத்தோடு, குறுநாவல் ஒன்றுடன் உங்கள் முன்னால் வந்த என்னை இந்நிமிடம் வரை நீங்கள் ஏமாற்றியதில்லை.

தொடர்ந்து எழுதத்தூண்டும் வகையில் ஆக்கபூர்வமான, ஆழமான கருத்துப் பகிர்வுகளால் என் எழுத்து மெருகேற உதவிக்கொண்டிருக்கும் நீங்கள், புதிதாக எழுத்துலகில் அடியெடுத்து வைக்கும் துஜி மௌலிக்கும் அதேபோல, அதைவிடவும் அதிகமாக ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். அவரும் உங்களை ஏமாற்ற மாட்டார் என்று நினைக்கிறன்.

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கும் கதைக்கு, செய்வாய் , வெள்ளி  என வாரத்தில் இரண்டு  அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

 


ஹலோ பிரண்ட்ஸ்…

எழுத்துலகத்திற்கு நான் புதிதானவள். ஆனால், கதையுலகத்திற்குப் புதியவள் அல்ல. உங்களைப் போல் நானும் ஒரு வாசகிதான் . எண்ணிலடங்கா புத்தகங்களைப் படித்துள்ளேன். அவற்றைப் படிக்கும் போது என்னுடைய கற்பனையில் ஒரு நாவல் எழுத எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

 அதுவே, ‘நீங்களும் கதை எழுதுங்கோ உங்களால் முடியும்’ என ரோசி அக்கா கேட்கவும் மனதின்அடி ஆழத்தில் இருந்த ஆசை கொஞ்சம் எட்டிப் பார்த்துக் கண்ணச் சிமிட்டிச்சு!

அந்தக் கண் சிமிட்டலின் விளைவு…. இன்று உங்கள் முன் என் முதல் கற்பனையுடன் வந்து நிக்கிறன்,

கதையை வாசித்து, நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி என் எழுத்து மெருகேற உதவுவீர்கள் எனும் நம்பிக்கையுடன்.

அன்புடன், 

துஜி மௌலி


கீழே உள்ள அத்தியாங்கள் மீது கிளிக் செய்தும் வாசிக்கலாம் 

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10