என்னைப்பற்றி..

 

இலங்கையின் வடக்கேயுள்ள சப்த தீவுகளில் ஒன்றான அழகுமிகு ‘அனலைதீவு’ எனது பூர்வீகம். 

நான்காம் வகுப்புவரை அனலை தெற்கில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், பின்னர், இருவருடங்கள் குருநாகலை ஹிஸ்புல்லா மகா வித்தியாலத்திலும், பின், யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலையிலுமாக பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்துள்ளேன்.

யாழ் பல்கலையில் வணிகத்துறையில்  பட்டபடிப்பைப் பூர்த்தி செய்துவிட்டு , இலங்கை காணி நிர்ணய திணைக்களத்தில் (LSD) நான்கு வருடங்கள் மேலதிக பதிவாளராகக் கடைமையாற்றியுள்ளேன்.

திருமணத்தின் பின், கடந்த பதினைந்து வருடங்களாக நெதர்லாந்தில் வசித்துவருகிறேன்.  

சிறுவயதிலிருந்தே  வாசிப்புப் பிரியை!

அதிகமாக, சரித்திர நாவல்கள் , குடும்ப நாவல்களை விரும்பி வாசிப்பேன்.

அப்போதெல்லாம்  எழுதவேண்டும்  என்றெல்லாம் சிறிதும் எண்ணியிருக்கவில்லை.

எழுத்துலகில் என் அறிமுகம் மிகமிகத் தற்செயலானது! சுவாரசியமானது !

எனக்குள் எனக்கே தெரியாதிருந்த ஒரு அடையாளத்தை கண்டுகொண்ட மகிழ்வான தருணமது!

இணையத்தில், நான் வாசித்து ரசித்த நாவல்களுக்கான கதை ரிவ்யூகளில் ஆரம்பித்து, இணைய நட்புகள் தந்த ஊக்கத்தால், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என, கடந்த 2014 இருந்து எழுதி வருகிறேன்.

எழுத்தெனும் ஆழ்கடலில் மிகவும் விருப்பத்தோடு நீந்தப்பழகிக் கொண்டிருக்கிறேன் என்றே  சொல்லலாம்.

என்றாவது திறம்பட நீந்துவேனா என்பதை விடுத்து , அன்றாடப் பயிற்சியை  நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்ற எண்ணமொன்றே என்னுள்!

இங்கு நான் பதிவிடும் ஆக்கங்கள் உங்கள் மனதுக்கு பிடித்திருந்தால் அதுவே என் முயற்சிக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு!

 

இதுவரை புத்தகமாக வெளிவந்துள்ள எனது நாவல்கள் இந்தியாவில் பிரபல புத்தகக் கடைகளில் கிடைக்கும். 

அதோடு, இணையத்தில் மெரீனா புக்ஸ் .காம் இல் பெற்றுக்கொள்ளலாம் .

ரோசி

எனது புத்தகங்களை அமேசான் கிண்டில் எடிஷன் மற்றும் லென்டிங் லைபிறரியிலும் பெற்றுக்கொள்ளலாம் .

Rosei Kajan

 

 

அன்புடன், 

ரோசி கஜன் 

 

Advertisements

4 thoughts on “என்னைப்பற்றி..

 1. Dear Rosei, I am a fan of your novels. I love to read yours, Nithani’s and Ushanthy’s novels. Finding it hard to buy all your novels from India – please try to make all as eNovels (now I could get only 2). Just wanted to say hi. Though I am from India and living in Singapore now, I love any Tamil novels based in Srilanka. Keep up the good writing and help us by writing more and more novels. My only entertainment with the hectic work pressure is reading your novels. If I visit Srilanka ever (my dream anyway), I will certainly make arrangement to visit you as well. Tks

  Liked by 2 people

 2. ஹாய் கார்த்திகா ,

  உங்களை இங்கு மகிழ்வோடு வரவேற்கிறேன்.

  எங்களது எழுத்துக்கள் உங்களைக் கவர்ந்ததுள்ளத்தில் மிக்க மிக்க மகிழ்ச்சி.

  எனது மற்றைய கதைகளையும் e book வடிவில் தரவே எனக்கும் விருப்பம். புத்தகமாக வெளிவந்து சில காலம் போகவிட்டு நிச்சயம் ebook வடிவில் கிடைக்கும் கார்த்திகா.

  உஷாந்தியின் நாவல்கள் அனைத்துமே e book வடிவில் http://WWW.MYANGADI.COM இல பெற்றுக்கொள்ளலாம் .

  எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் , திருமணத்தின் பின்னர் நெதர்லாந்தில் வசித்து வருகிறேன் கார்த்திகா.

  கதைகள் பற்றிய உங்கள் கருத்துகளை நேரமிருக்கும் பொழுது பகிர்ந்து கொள்ளுங்கள் .

  மிக்க நன்றி .

  Liked by 1 person

 3. உங்கள் அனைவர் கதைகளும் மிக மிக அழகாக இருக்கிறது! முழுவதையும் படித்து முடித்து விட்டே நகர தோன்றுகிறது. மொபைல் போனில் பார்த்து படிப்பது கண்களுக்கு நல்லது அல்ல என்பதால் புத்தக வடிவில் வாங்கி வாசிக்க விரும்புகிறேன். ஆனால் தங்களின் கதைகள் புத்தகங்களாக இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. அது தெரிந்தால் மகிழ்ச்சியுடன் புத்தகங்கள் படிக்கலாம்.

  Liked by 1 person

 4. மற்ற புத்தகங்கள் கிடைக்கும் கடைகளில் எல்லாம் கிடைக்கும் கௌரி.

  பிரபல புத்தகக் கடைகள் , லைபிரரிஸ் எல்லாத்திலும் கிடைக்கும் .

  முதல் நான்கு கதைகள் ரோசி என்று இருக்கும்.

  ஆன்லைனில் மெரீனா புக்ஸ் ல வாங்கலாம் .

  நன்றி கௌரி

  Liked by 1 person

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s