செந்தூரம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது!

 

ஹாய் ஹாய் ஹாய்,

எல்லோரும் நலம் தானே? நாமும் நலமே! அதனோடு மிகுந்த சந்தோஷமும் கூட!

பொழுதுபோக்கிற்காக மட்டுமே ஆரம்பித்த எம் எழுத்து இன்று ஒரு இலக்கினை நோக்கி நடைபோடத் துவங்கியிருப்பது நமது செந்தூரம் மின்னிதழ் வாயிலாகவே! பெரிதாக எதையும் திட்டமிடவும் இல்லை. யோசிக்கவும் இல்லை. ஒருநாள் மின்னிதழ் போடுவோமா என்று கதைத்துக்கொண்டோம். அது கூட ஒரே ஒரு தடவைதான். ‘அப்ப… சித்திரை வருஷப்பிறப்புக்கு முதல் இதழ் வெளியிடுவோமா?’ என்று நிதா கேட்க, சந்தோசமாகவே சரி சொன்னேன். அதற்கான வேலைகளில் அப்போதே ஈடுபடத் துவங்கினாலும், நாமும் இல்லத்தரசியர் தானே. நினைத்தது போலவே செயலாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன? எப்போது செய்தோம் என்பதை விட செய்து முடித்தோம் என்பதில் தானே வெற்றியே இருக்கிறது!

இதோ இன்று செய்து முடித்துவிட்டோம்!

ஆமாம்! எங்களின்…இங்கு எங்களின் என்று சொல்வதை விட நமது என்பதே பொருந்தும். நமது முதல் செல்லக்குழந்தை ‘செந்தூரம் மின்னிதழ்’ இனை இன்று வெளியிட்டுவிட்டோம்! இன்று நம் குழந்தை உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறாள். எல்லோரும் கைகளில் ஏந்தி அவளை வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

எப்போதும் சின்னச் சின்ன கேலிகளும் சீண்டலுமாக எம்மை ஆதரிக்கும் எம் குடும்பத்தவர்களுக்கு எங்களின் அன்பான நன்றிகள்! இதனை முற்றுப்பெற எங்களுக்கு துணையிருந்த ஆண்டவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! இந்த முயற்சி வெற்றியை தரும் என்று எங்களுக்கு நம்பிக்கை தந்த அத்தனை வாசக நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றிகள்! அது மட்டுமல்லாது, ஆர்வத்தோடு ஆக்கங்களை அனுப்பி வைத்த, எழுத்தாளர்கள், தமிழ் நிவேதா, தமிழ் மதுரா, ஜெகநாதன் வெங்கட் அவர்கள், ஹேமா, அகத்தியா, துஜிமௌலி, யாழ் சத்யா, பவித்ரா நாராயணன், நிலா, நர்மதா சுப்ரமணியம், கோபிகை, மற்றும் ராகவி …உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!
தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் மட்டுமல்ல விரும்பியவர்கள் அனுப்பி வைக்கலாம். அடுத்தடுத்த இதழ்களில் நிச்சயம் வெளியாகும். அதேநேரம் உங்களின் ஆக்கங்களுக்கு ஏற்ற வகையில் பணப்பரிசும் வழங்கப்படும்.

மாதம் தோறும் வெளிவரக்காத்திருக்கும் நம் இதழ் இன்னுமின்னும் பல புதுமைகளை சுமந்து வரப்போகிறது. ஆதரவு தந்து பயன்பெறுவீராக!

மின்னிதழை வாசிக்க விரும்புவோர் அமசோன் கின்டிலில் தரவிறக்கம் செய்தோ, கிண்டில் லெண்டிங் லைபிரரியிலோ வாசிக்கலாம்.

இம்முயற்சியில் ஆர்வத்தோடு தொடர உங்கள் ஆதரவும் வாழ்த்தும் என்றென்றும் வேண்டும் மக்களே!

அன்புடன் ரோசி கஜன், நிதனி பிரபு

 

கீழேயுள்ள லிங்கில் கிளிக் பண்ணவும் 

செந்தூரம் மின்னிதழ் 1

Advertisements

4 thoughts on “செந்தூரம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது!

 1. அன்பான வாழ்த்துக்கு நன்றிகள் உமா.

  நீங்கள் இந்தியாவில் இருந்தால்

  மேல உள்ள லிங்கில போய் வாங்கலாம் . அமேசானில் ac ஓபன் பண்ணவேணும் . அப்போதான் அங்கு எந்த பொருளும் வாங்க முடியும். உங்க ac க்கான folder இல் pdf dl ஆகும் . பிறகு வாசிக்கலாம் .
  இதுவே எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டுக்கான அமேசானில் வாங்கலாம் . அப்படி உங்க நாட்டுக்கு அமேசான் இல்லையோ amazone.com இல வாங்கலாம்.

  Liked by 1 person

 2. மிக்க மிக்க சந்தோசமும் நன்றியும் ஆழிமதி .

  திருத்தங்கள் , உங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லலாம் . அடுத்துவரும் இதழை அழகாக்க உதவும் .

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s