யாழ் சத்யா

மிஸ்டர் கண்மணி!

பவித்திரா நாராயணனின் மிஸ்டர் கண்மணி – யாழ் சத்யாவின் பார்வையில்

யாழ்முகை!

முதலில் நாயகியின் அழகான பெயருக்கு நன்றிகள் பவி. ஒரு கட்டுப்பெட்டியான குடும்பத்தில் வளரும் இவள் குணங்கள், எதிர்பார்ப்புகள் எங்களில் பலரை நினைவுபடுத்துகிறது.

திருநாவுக்கரசு!

ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தாலும் இவனது கனவுகளும் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் குணமும் இவனைப் பார்த்து வியக்க வைக்கின்றன. பெண்களைத் தன் கண்களாக மதிக்கும், அவர்களது விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதிக்கத் தூண்டும் திரு போன்ற மகனோ, கணவரோ கிடைக்க மாட்டானா என்ற ஒரு சிறு ஏக்கம் எழ வைத்த கதாபாத்திரம் இவன்.

இரு வீட்டுப் பெற்றவர்களாலும் நிச்சயிக்கப்படும் திருமண பந்தத்தில் தங்களுக்கென்று ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு இணையும் இவர்கள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை வெற்றியடையச் செய்தார்களா? இல்லை தோற்றுப் போனார்களா? என்பதை தனது முதிர்வான சிந்தனைகளோடு சேர்த்து ஒரு குறுநாவலாக படைத்துள்ளார் எழுத்தாளர்.

இதிலே கண்மணி யார்? மிஸ்டர் கண்மணி ஆகியது யார் என்பதற்கான விடைகள் கதையில்.

இங்கே இரண்டு விடயங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி என்னை மிகவும் கவர்ந்தன.

# # நிரந்தர விசா எடுத்து அந்நிய தேசம் சென்றது போல என்று திருமணம் புரிந்து பெண்கள் புகுந்த வீடு செல்வதைக் குறிப்பிட்டிருந்தது ‘அடடா! எவ்வளவு பொருத்தமாக சொல்லியிருக்கிறார்’ என்று வியக்க வைத்தது.

# # சுழலில் சிக்கி கரை ஒதுங்கும் பெரியவர் போல வாழ்க்கையைத் தன்பாட்டில் அதன் போக்கில் வாழச் சொல்லி இருப்பது.

எல்லோருக்கும் இலகுவில் புரியும்படி தனது எண்ணங்களை கொண்டு செல்வதில் இம்முறையும் பவி தனது முத்திரையைப் பதித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

இதே போல மேலும் பல படைப்புகளால் எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் பவித்திரா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.  

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s