EPT- 10 by Rosei Kajan

அன்பு வாசகர்களே !

அடுத்த  அத்தியாயம் இதோ…

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisements

கிரு நிஷாவின் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! by துஜிமௌலி

எமது தமிழில் அழகாகக் கதையை ஆரம்பித்து, நாயகன் நாயகியின் காதலை எடுத்து சொல்வதே கதையின் கருப்பொருள்.

தனது தாய் நாட்டில் இருந்து வேலை விடயமாக லண்டன் வரும் நாயகி, விமானநிலையத்திலேயே வைத்து தனது உடமைகளை தொலைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்ப, அக்குழப்பத்தைத் தீர்க்க அறிமுகமாகிறான் நாயகன்.

நாயகி தமிழ், அதுவும் தன் நாட்டுக்காரி என்று தெரிந்து உதவி செய்து, அவளைத் தன் வீட்டிலேயே தங்கும்படி அழைத்து செல்கிறான்.

உறவுகள் என்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் வேற வழி இல்லை என்று நாயகன் ரித்விக்குடன் அவன் வீடு செல்லும் ஆனந்தி, அங்கு உள்ள சூழலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவள், அங்கு ரித்விக் வீட்டில் வேலை செயும் மார்க் எனும் வெள்ளைக்காரனுடன் சகோதரத்துவ பாசத்தை உணர்ந்து, அவனுடன் ஒரு சகோதரி மாதிரியே பாசம் காட்டுகிறாள்.

ஒரு கட்டத்தில் ரித்விக்கின் மேல் காதல் கொண்டு, பின் , அவனின் பிழையான அதாவது அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதை அறிந்து வேதனையுற்ற நேரம், தனது மொத்தக் குடும்பமும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது கேள்விப்பட்டு மொத்தமாக துவழ்கிறாள் ஆனந்தி.

அவன் வீட்டில் இருப்பதையே அவமானமாக கருதியவள், தனது மாமன் மகளைத் தொடர்புகொண்டு ரித்விக் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவள் வெளியேறிய நேரம் ஆனந்தி மீதான காதலை உணரும் ரித்விக், பின், எவ்வாறு நாயகியுடன் சேர்கிறான் என்பதைக் கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.

அழகான கதை, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – கிருநிசா (முழுகதை )

அன்பு வாசகர்களே !

கிருநிசா தனது கதைக்கான முழு லிங்க் தந்துள்ளார். 

முதல் கதை , வாசிப்பவர்கள் அமைதியாகப் போகாமல் உங்கள் கருத்துகளை அவரோடு பகிர்ந்து கொண்டால், மேலும்  அவரது எழுத்தை நேர்த்தியாக்க அது உதவும்.

 

வாசித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறன் மக்களே. லிங்க் டிலிட் செய்துவிட்டேன்
 

சரயுவின் இதயம் தேடும் என்னவளே

சரயுவின் இதயம் தேடும் என்னவளே – யாழ் சத்யாவின் பார்வையில் 

காதல் காதல் காதல். இந்த காதல் எப்படி எல்லாம் எல்லா மனிதர்களையும் இந்த பாடுபடுத்துகிறதோ தெரியவில்லை. பதவி, அந்தஸ்து எதையும் கருத்தில் கொள்ளாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்துகிறது.

 

அப்படி தான் இங்கே ஒருவன் இந்த காதல் எனும் வலையில் சிக்கி படும்பாட்டை அழகாக சொல்லி இருக்கிறார் சரயு.

 

சின்னத்திரையில் பிரபலமான நடிகன். ஆனால் வீட்டுக்குள்ளோ பாசத்திற்கு ஏங்கும் சிறுபிள்ளை. அவனது குடும்பத்தினர் ஒழுங்கமைக்கும் திருமணம் தடைப்பட்டு விட மீளவும் ஒரு பெண் பார்க்க அதிலும் தடங்கல்.

 

நாயகி புவனா. ஒரு குழந்தையோடு இருக்கும் குடும்ப பாங்கான பெண். குழந்தையோடு இருப்பவளை எவன் ஏற்றுக்கொண்டு குழந்தையையும் தன் குழந்தையாகப் பார்த்துக் கொள்ளுவான்?  இந்தக் காலத்தில்இதெல்லாம் சாத்தியமா என்ற பயத்திலேயே கல்யாணம் பற்றி சிந்திக்க மறக்கும் புவனா.

 

எப்படி அகிலனும் புவனாவும் சந்தித்துக் கொண்டார்கள்? குழந்தை பூர்வி என்ன ஆனாள்?  பூர்வியை அகிலன் ஏற்றுக் கொண்டானா? புவனாவை அகிலன் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனரா? இவர்கள் காதலுக்கு வந்த தடைதான் என்ன? எப்படி மறுபடியும் இணைந்தார்கள்? தனிக்குடித்தனம் என்பது குடும்பத்தை பிரிக்கும் வேலை இல்லையா? அனைத்து கேள்விகளுக்குமான விடைகள் கதையின் உள்ளே…

 

அனைத்து கதாபாத்திரங்களும் கனகச்சிதம். தங்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான சிந்தனை, சொல், செயல் கொண்டவர்கள் என்பதை தெளிவாக புரிய வைத்துள்ளார்.

 

மிகவும் மென்னையான எழுத்தோட்டத்தில் செல்கிறது கதை. எந்தப் பரபரப்புமின்றி எங்களை டென்ஷனின் உச்சத்திற்கெல்லாம் கொண்டு போகாமல் ஒரு தென்றலாய் வருடிச் செல்கிறது. அனுபவமிக்க அழகான எழுத்து நடை. இது சரயுவின் எத்தனையாவது கதை என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவரது மீதிக் கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு சிறந்த ஒன்று.

 

மேலும் பல கதைகள் இதேபோல் தரமான எழுத்துடன் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சரயு.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

சுதா ரவி அவர்களின் அக்கினிப் பரீட்சை

அக்கினிப் பரீட்சை – யாழ் சத்யாவின் பார்வையில் 

கதைக்கு சாலப்பொருத்தமான ஓர் தலைப்பு. அதற்கே மிகப் பெரிய பாராட்டுக்கள் சுதாக்கா.

 

அர்ஜூன் – வர்ணப்ரியா

அர்விந் – பூஜா

 

இரண்டு ஜோடிகள். இரு ஜோடிகளுக்கு இடையிலும் என்ன தொடர்பு? காதலோடு கலந்து செல்லும் த்ரில்லர் கதை.

 

மொத்தமே இருபத்தைந்து அத்தியாயங்கள். ஆறாம் அத்தியாயத்திலேயே ஒருவர் கடத்தப் பட்டு விடுகிறார். யார் கடத்தினார்கள்?  என்பதை எங்கள் மூளையை கசக்கி யோசிக்க வைத்து இவரா? அவரா? இல்லை இல்லை, இவராக இருக்காது… அவராக இருக்குமோ? என்று பல ஊகங்களை எழுப்பி எதிர்பாராத முடிவோடு சுபம் போட்டிருக்கிறார் சுதாக்கா.

 

நான் முதல் முதலாக வாசித்த சுதாக்காவின் தொடர்கதை. இந்த கதை பற்றி நிறைய சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அதிகமாக நான் எதையும் சொல்லி வைத்து வாசிக்கப் போகும் உங்கள் எதிர்பார்ப்புகளை வீணடிக்க கூடாது என்று கதைக் களத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை சரியா?

 

அன்பு, காதல், பாசம் அதிவேக நவநாகரீக உலகத்தில் அரிதாகிக் கொண்டு போகின்ற விடயம். இன்று நிறைய விவாகரத்திற்கு காரணம் இயந்திர கதி வாழ்க்கையில் ஆற அமர உட்கார்ந்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்காதது தான்.

 

ஒருவர் மீது எவ்வளவு தான் அன்பு இருந்தாலும் உரிய தருணத்தில் அவற்றை நாங்கள் வார்த்தைகளாக வெளிப்படுத்தி புரிய வைக்காவிட்டால் அதனால் எழும் பிரச்சினைகள் பல.

பரிசுகள், செய்கைகள், நடவடிக்கைகள் மூலம் உணர்த்தினாலும் வார்த்தைகள் தரும் வலிமையை சிலவேளைகளில் அவை உணர்த்த தவறி விடுகின்றன.

 

நிலைத்து நிற்கும் காதலுக்கு அவசியம் புரிந்துணர்வே. அதற்கு அவசியம் சிறிது நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுவது. அப்படி பேசும் போது எங்களை மீறி எங்கள் துணைகள் மீது நம்பிக்கை பிறக்கின்றது. அந்த நம்பிக்கை ஆயுள் வரை தன் துணையை எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கி சந்தேகமற்ற மன நிறைவான இல் வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.

 

எங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் மற்றவனுக்கு நிருபிப்பதற்காக பல அக்கினிப் பரீட்சைகளை ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி தாண்டி வருகிறோம். புராண காலத்தில் இருந்து இன்று வரை இதுவே நியதியாய். எப்போது அடுத்தவனை விடுத்து எங்களுக்காக வாழ்கிறோமோ அன்றைக்கு நிறைய பிரச்சினைகள் குறையும்.

 

காதலுக்கு மட்டுமன்றி   அனைத்து உறவுகளுக்குமிடையேயும் இந்த பேச்சு வார்த்தை அவசியம். பிள்ளைகளை வளர்க்கும் போதும் அவர்கள் தவறு செய்யும் போது செய்யாதே என்கிறோம். செய்ததற்காக திட்டுகிறோம், தண்டனை கொடுக்கிறோம். ஆனால் அதை ஏன் செய்யக் கூடாது, செய்வதால் ஏற்படும் தீமை என்ன என்பதை பேசிப் புரிய வைக்க மறந்து விடுகிறோம். சிறு குழந்தையில் எங்களால் ரசிக்கப்படும் பிடிவாதம், கோபம் போன்ற குணங்கள் அவர்கள் வளர்ந்ததும் அவர்கள் வாழ்க்கைக்கே எமனாய் முடிகின்றது.

 

பேச்சு வார்த்தையின் மூலம் எந்த பிரச்சினையையும் வென்று சிறந்த வாழ்க்கை ஒன்றை வாழலாம்.

 

என்ன அக்கினிப் பரீட்சைக்கு விமர்சனம் என்று விட்டு ஏதோ எல்லாம் நிறைய உளறுகிறேன் என்று பார்க்கிறீர்களா?  சுதாக்காவின் அக்கினிப் பரீட்சை வாசியுங்கள். தெளிவாக எல்லாம் புரியும். வெறும் காதல் கதையாக இல்லாமல் நிறைய வாழ்க்கைக்கான அறிவுரைகளோடு சுவாரஸ்யமாய், அலட்டல்கள் எதுவுமின்றி ஒரு த்ரில்லர்.

 

வாசிக்காதவர்கள் வாசியுங்கள். உங்கள் பொன்னான நேரம் வீண் இல்லை என்பதற்கு நான் உத்தரவாதம்.

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.