நிலவே… நீ எந்தன் சொந்தமடி…!-6

“நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..!” கதையின் ஆறாவது அத்தியாயம் இதோ. எங்கள் செந்தூரத்தில் என் முதல்  பதிவு.எப்படி இருக்கு எண்டு சொல்லிப்போட்டு போவீர்களாக.

 

 

 

Advertisements

நிலவு ஒரு பெண்ணாகி!

தமிழ் மதுராவின் நிலவு ஒரு பெண்ணாகி  – யாழ் சத்யாவின் பார்வையில்

என்ன சொல்ல? எதைச் சொல்ல? கதை படித்து நான்கு நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் ஏதோ ஒரு மோன நிலையிலேயே இருக்கிறேன். ஏதோ ஒரு சக்தி என்னையும் கட்டிப் போட்டு விட்டது போல.

சித்ராங்கதாவை எழுதியவரிடமிருந்து இது போல ஒரு படைப்பா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

சத்தியமாக சித்ராங்கதா போல ஒரு காதல் கதை என்ற எதிர்பார்ப்போடு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையோ வேறு பாதையில் இட்டுச் சென்றது. சந்தேகத்தில் மறுபடியும் இதை தமிழ் மதுராக்காவின் கதைதானா என்று ஊர்ஜிதப் படுத்தி விட்டே தொடர்ந்து வாசித்தேன். காரணம் கதை சென்ற பாதை அமானுஷ்யம்.

ஆத்ரேயன்! ஆணழகன் இவன்  தொழில் திறமையை எண்ணி வியக்கவா? இல்லை இவன் காதலின் ஆழத்தை எண்ணி வியக்கவா?

சந்த்ரீமா! ஆத்ரேயனின் காதலுக்கு கொஞ்சமும் குறைவில்லாது அவனுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய முன் வரும் இவள் காதலை என்ன சொல்லி வர்ணிக்க?

அம்பலம்! தன் குடும்பம், தன் கௌரவம் என்று சுயநலமே உருவான ஒரு சாதாரண மனிதர். அவர் மீது கோபம் வந்தாலும் அவரது பக்கம் இருந்து யோசித்துப் பார்க்கும் போது திட்ட முடியவில்லை. வயதானவர். பாவம் பிழைத்துப் போகட்டும்.

தத்தாத்ரேயன் – திலோத்தமா

இவர்களைப் போல ஒரு தாத்தா பாட்டி கிடைக்காதா என்று தங்கள் பாசத்தின் மூலம் ஏங்க வைத்தவர்கள்.

ராம்குமார்! நட்புக்கு இலக்கணம் நீர் தானா?

ஆதிரன்! உங்கள் வீரத்தினதும் தலைமைத்துவப் பண்பினதும் ரசிகை நான். கொண்ட லட்சியத்தை காப்பதற்காக உயிரையும் விடத் துணியும் கர்மவீரன்.

சந்திரிகா! போகும் பாதை கற்களும் முட்களும் மட்டுமே என்று அறிந்தும் தன் உயிரைப் பொருட்படுத்தாது விரும்பியவனைக் கரம் பிடிக்கும் பத்தினி.

ஜெயப்பா! காமப் பிசாசு.

கதையில் வரும் மீதிக் கதாபாத்திரங்களும் ரொம்ப அருமையாக கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

காதலர்கள் சேருவார்களா? இல்லை அவர்கள் உயிர் பிரியுமா? என ஒரு எதிர்பார்ப்போடேயே இறுதி வரை கதை நகர்கிறது.

மத நம்பிக்கைகள், மூடப் பழக்கவழக்கங்கள் எல்லாம் பற்றிய கதையின் போக்கு, இவை பற்றிய எனது எண்ணங்களை மாற்றியமைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப் புது விடயங்கள். இவையெல்லாம் உண்மையாய் இருக்குமோ என்று கூகிளாண்டவரை தட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து கொண்டேயிருந்தது என்பது தான் உண்மை.

உண்மையில் இதை ஒரு கற்பனைக் கதையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் கதையில் ஒரு அங்கமாய் நிஜமாய் வாழ்ந்த உணர்வு. ஒரு 3டி படம் பார்த்த திருப்தி.

இந்தக் கதையை எழுதுவதற்கு, இவ்வளவு விடயங்களையும் கதையின் போக்கில் சுவாரசியம் குன்றாமல் தொகுத்து வழங்குவதற்கு நிறையவே மெனக்கெட்டிருப்பீர்கள் என்று புரிகிறது மதுராக்கா.

அந்த அர்ப்பணிப்பும் உங்கள் கடும் உழைப்பும் வீணாகவில்லை என்பது அமேசனைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!

வெறும் காதல் கதைகள் மட்டுமில்லாது இது போன்ற கதைகளையும் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

நிலவு எந்தப் பெண்ணுருக் கொண்டது? படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்கா!

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

‘என் பூக்களின் தீவே!’ ஹரிதாரணி சோமசுந்தரம் அவர்களின் பார்வையில்…

 

 

என் பூக்களின் தீவே – ரோசி கஜன்.

அகல்யா மண்டைக் கொழுப்பா என்று ஆரம்பித்த இடத்தில் இருந்து படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி உற்சாகப் படுத்துகிறாள்.

அறிவும் சுட்டித்தனமும் கொண்ட அழகுப்பெண்.

வருண் வார்த்தையால் எல்லாம் அவனை வர்ணிக்க முடியாது. உண்மையிலேயே பொறுமையின் மறுஉருவம்.. அகலை கொன்னு புதைக்காம பார்த்திருந்தானே.. 
ஒரு வேளை அவனுள் புதைந்திருந்த அந்த அன்புதான் காரணமோ என்னவோ..

அனு – ராகவ் ஆக்கப் பொறுத்தார்கள் ஆறப் பொறுக்கலை கதையாக ராகவ் சூழ்நிலையை புரியாமல் தனக்கு மட்டுமே உரிமை என நினைப்பதும் அதற்கு அமைதியாக அலசி ஆராயமல் வார்த்தைகளால் அனுவை கூறுபோடுவதும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம்.
அகல்யா அங்கேயும் சிறந்த எடுத்துக்காட்டு.

சந்திரன் பாசத்தால் பக்குவத்தை இழந்து பேசும்போதும் வருண் தீர்மானமாக சொன்ன நேரம் வாயடைத்து நிற்கிறார். அவரது கோபம் நியாயமானது ஆனால் கோபத்தால் எதையும் சாதிக்க முடியாதே..

அமைதியும் அன்பும் விவேகமும் உதவும் அளவில் கோபமும் அதனால் ஏற்பட்ட வேகமும் உதவாது என்பதை அழகாய் காட்டியுள்ளீர்கள். சுகந்தன் அருமையான பாத்திரம். அவனது பெற்றோர் அதைவிட அழகு பிள்ளையை நீங்கள் சரியாய் வளர்க்கலை என்று அவர்களும் சந்திரனைப் போல எகிறியிருந்தால் அந்த குடும்பமே சிதைந்து இருவரின் வாழ்க்கை அதில் சிதிலமாகியிருக்கும்.

அகல்யா மீதான செல்வி-சந்திரனின் பாசம் வருணை மட்டுமல்ல என்னையும் பொறாமை கொள்ள வைத்தது. ஆனால் வருண் பொய்யாக பொறாமை காட்டினான். நான் மெய்யாகவே பொறாமைப் பட்டேன். இப்படியொரு மாமியார் கிடைக்கணுமே என்று..

சிவா நண்பனை குறை கூறும் நிலை வந்தும் அமைதி காப்பது.

ராகவன் தயக்கமின்றி தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவது,

அகல்யா வருணை அலையவிடுவதாய் நினைத்து அவனது விளையாட்டில் காயப்படுவது,

தேங்காய் துருவல் சண்டை முதல் நண்டுக்கறி சண்டை வரை அருமையோ அருமை..

இயல்பான இலங்கைத்தமிழில் இருந்த கதையை படித்துத் தான் நிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.

ஐயனார் கோவில், நாமகள், அனலைத்தீவு, கொழும்பு என எல்லாம் கதையின் முக்கியப் புள்ளிகள்..

மிக சுட்டித்தனமான பெண்ணொருத்தி காதலொருவனோடு சுட்டித்தனம் மாறாமல் குடும்பம் நடத்துவது அருமை.

பெண்களின் திருமணத்திற்கடுத்த வாழ்வில் புகுந்த வீட்டாரின் உறுதுணையும் அன்பும் எவ்வளவு முக்கியம் என்றும், பெண் என்பவள் இடத்திற்கு இடம் மாறும் பொருளல்ல, அவளது உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அழகாக வடித்துள்ளீர்கள்.

மொத்தத்தில் என் பூக்களின் தீவே என்னை அதற்குள் அழைத்துக் கொண்டது….

EPT-1 by Rosei Kajan

ஹாய் ஹாய்…

சொன்னபடி வந்திட்டேன் . 

‘என் பூக்களின் தீவே!’ இணையத்தில் வெளிவராது நேரடியாகவே புத்தகமாக வெளிவந்த கதை.

புத்தகத்தில் வாசிக்காதவர்களுக்காக தருகிறேன் என்று சொல்வதை விட, உங்க கருத்துப்பகிர்வை அறியும் ஆவலில் உள்ளேன் என்பதே உண்மை.

அதனால… வாசிச்சிட்டு ஒழுங்கா உங்க மனதில் படுவதை சொல்லிப் போட்டுப் போங்கோ.

திங்கள் , வியாழன் கிழமைகளில் அத்தியாயங்கள் பதியப்படும் .

முதல் அத்தியாயம் 

 

சித்ராங்கதா!

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – யாழ் சத்யாவின் பார்வையில்

சித்ராங்கதா!

 

சில வருடங்கள் முதலே ஒரு முறை படித்திருந்தாலும் திரும்பவும் ஒரு முறை ஜிஷ்ணு – சரயு ஜோடியைப் பார்க்கும் ஆவலில் வாசித்தேன். எத்தனை வாசித்தாலும் அவர்கள் காதல் மனசுக்கு இதமாய் சில நாட்கள் அவர்களையே சுற்றி வரச் செய்கிறது.

அந்த காலம் சிரஞ்சீவி, நாகர்ஜுனாவை சைட் அடிக்க ஆரம்பித்து இன்றைக்கு அவர்களின் பிள்ளைகளையும் விட்டு வைக்காது சைட் அடித்தாலும்  புரியாமல் இருந்த தெலுங்கை ஒரே கதைல புரிய வைச்சிட்டீங்க மதுராக்கா.

ராஜூ எப்படி தமிழ் புரியாமல் சரயுவோட உணர்வுகளை புரிஞ்சு கொண்டாரோ அதே போல தான் தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் இருந்தும் ஆங்காங்கே வந்த தெலுங்கு டயலாக்குகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள முடிந்தது.

உண்மைக் காதலுக்கு மொழியெதற்கு? உங்கள் எழுத்தின் வலிமையில் அழகாக உணர்ந்து கொண்டேன்.

இறுதியில் அணுகுண்டு சொல்வது போல அடுத்தவருக்காகவே தன் காதலை மறைத்து, அது தந்த வேதனையை மறைத்து, அடுத்தவர் நலன் மட்டுமே நோக்கி, இப்படி ஒரு காதல் இந்தக் காலத்தில் சாத்தியமாகுமா? இப்படி ஒரு காதல் கிடைக்காதா? என்று ஏங்க வைத்த ஒரு கதை.

ஜிஷ்ணுவின் காதல் ஒரு வகை என்றால் ராமின் நட்பை விவரிக்க உண்மையில் என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படி ஒருத்தனா என்று இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்.

கதையைப் படிக்கும்போது சரயுவும் ஜிஷ்ணுவும் எந்தளவு தூரம் ஆட்டிப் படைத்தார்களோ,
உண்மையில் கதையைப் படித்து முடித்ததும் என் மனதில் நிறைந்து நிற்பது அணுகுண்டு தான்.

அணுகுண்டு போல ஒரு பாத்திரத்தைப் படைத்த உங்கள் கைக்கு ஆயிரம் முத்தங்கள் அக்கா.

சரயுவின் டெடிகேசன் பற்றிய அறிவுரை தடுமாறும் எத்தனையோ இளையோர்களுக்கு கூறிய அறிவுரையாகவே எனக்கு பட்டது.

எங்கோ ஒரு சிறு ஊரில் பிறந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டி இருக்கிறாள் என்றால் அதற்கு அவள் டெடிகேசன் தானே காரணம். பாஸ்கெட் பால் விளையாட்டை வைத்து அவள் விஷ்ணுவுக்கு சொல்வது சூப்பர்.

 

“உனக்கான கடமைகளைச் செய். அது முடிந்ததும் என்னிடம் வா.”
எத்தனை காதலிகளால் இப்படி கூறி விட முடியும்? சரயு உன் குறும்புகள் மாதிரியே உன் மனசும் ரொம்பவே அழகு.

எத்தனை துன்பங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடும் பொறுமையோடும் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த நாவல்.

உண்மையில் அர்ஜுனனுக்கு ஜிஷ்ணு என்ற ஒரு பெயர் இருந்ததும் அவனுக்கும் சித்ராங்கதாவுக்குமான காதல் பற்றியும் எனக்கு இந்தக் கதை படித்து முடித்ததும் தான் தெரிய வந்தது.

ஒரு காவியத்தின் சிறு துளியை வைத்து நவீன காவியம் எழுப்பிய உங்களுக்கு மறுபடியும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.


கல்கிக்கு ஒரு பொன்னியின் செல்வன் போல, வைரமுத்துவுக்கு ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் போல, எதிர்காலத்தில் தமிழ் மதுராவுக்கு சித்ராங்கதா உங்கள் பெயர் சொல்லி நிற்கும் என்பது மிகையில்லை.

மேலும் மேலும் இதே போன்று தரமான சிறந்த படைப்புகளால் எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்க்கா.

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..! – நிதனிபிரபு

 

ஹாய் ஹாய்,

 

நலம் நலமறிய ஆவல்! நீண்ட நாட்கள் இல்லையா.. கதைவழியே நாம் சந்தித்து. காலமும் நேரமும் எப்போதும்போல் இருப்பதில்லையே. நாட்கள் போகப்போக பொறுப்புகள் கூடிக்கொண்டே போகிறது. ஒரு காலத்தில் நேரத்தை எப்படி போக்குவது என்று இருந்த நிலை போய், எனக்கே எனக்கென்று செலவுசெய்ய கொஞ்சமே கொஞ்சம் நேரம் கிடைக்காதா என்கிற நிலைக்கு மாறிக்கொண்டு இருப்பதாகவே படுகிறது. அப்படி கிடைக்கும் சொற்ப நேரத்தை எனக்கு பிடித்ததாக மாற்றிக்கொள்ள வந்திருக்கிறேன். அடுத்த கதை.. பெரிதாக அழுத்தமில்லை. மனதுக்கு பிடித்த ஒரு சின்ன விஷயத்தை வைத்து கதை பின்ன முனைந்திருக்கிறேன். பிடிக்கிறதா என்று பாருங்கள்.

 

நட்புடன் நிதனிபிரபு