உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – 1

அன்பு வாசகர்களே !

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலபல!

new-year-images-wishes_650x500_81514437469

 

ஏற்கனவே சொன்னபடி, புத்தம் புது வருடத்தில் தனது முதல் கதைக்கான முதல் அத்தியாயத்தோடு நம்மைக் காண வந்துள்ளார் கிருநிசா.

தன் கன்னி முயற்சியை, மிகுந்த எதிர்பார்ப்போடு உங்கள் முன்வைக்கும் அவருக்கு, உங்கள் கருத்துப் பகிர்வுகள் மூலம் ஊக்கம் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.

கிழமையில் இரு அத்தியாயங்கள் என,  திங்கள் , வியாழன் இருதினங்களும் பதியப்படும். 

அத்தியாயம் 1

 

 

 

Advertisements

தை ஒன்று…

happy-New-year-2018-poems

 

இலங்கையில் இருந்து இங்கு வந்து பதினைந்து வருடங்கள்.

இதை எண்ணியதும் கிறுக்கியவை …வாசித்துப் பாருங்கள் மக்களே !

தை ஒன்று

இந்நிலவை மன்னிப்பாயோ என்நிலவே! -9

அன்பு வாசகர்களே!

வருடக் கடைசி என்றாலும் அத்தனை வேலைகளையும் ஒதுக்கிவிட்டு, தீயாக வேலைசெய்து அடுத்த அத்தியாயம் தந்துள்ளார்கள் நம்ம துஜி சஜீ.

அதை வாசித்துவிட்டு அப்படியே போனால் …அந்தத் தீ சுடும் சொல்லிப் போட்டேன். 

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் 9

 

 

 

இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே! -8

அன்பு வாசகர்களே!

துஜி சஜீயின் கதைக்கான அடுத்த அத்தியாயம் இதோ!

இதுவரை, அமைதியாக வாசித்துவிட்டு செல்பவர்கள் இந்தப் பகுதியையும் வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு ஜே ஜே என்று இருக்குமாம்!

அத்தியாயம் 8

 

 

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!

105539

 

 

எமதன்பு வாசகர்களிற்கும் மற்றும் உங்கள் உற்றார் உறவினர்களிற்கும்,

எங்கள்,  மனமார்ந்த   நத்தார்   வாழ்த்துக்கள் உரித்தாகுக !

மற்றும்,

பிறக்கவிருக்கும் புத்தாண்டில், உங்கள் கனவுகள்  மெய்ப்படவும், உள்ளங்களிலும் இல்லங்களிலும் அமைதியும் அன்பும் பெருகவும்  அன்போடு வாழ்த்துகிறோம்!

பிரியங்களுடன்,

துஜி சஜீ,

கிருநிசா, 

ரோசி.

 

இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே! -7

அன்பு வாசகர்களே !

துஜி சஜீயின்  கதைக்கான அடுத்த அத்தியாயம் இதோ!

 

வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த அத்தியாயம் வரும் புதன் பதிவிடுகின்றேன் .

 

அத்தியாயம் 7.

 

 

எதிர்வரும் 25 லிருந்து …

25129874_1797145283629162_164323341_o

அன்பு வாசகர்களே!

‘என் பூக்களின் தீவே!’ கதை, எதிர்வரும் 25 லிருந்து அனைத்து முன்னணிக் கடைகளிலும் கிடைக்கும் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன் .

இக்கதை, இணையத்தில் வராது  நேரடியாகவே நூல் வடிவம் பெற்றுள்ளது.

ஆதலால், வாசகர்களிடமிருந்து கதை பற்றி கருத்துக்களை அறியும் ஆவலில் காத்திருக்கிறேன். வாசித்துவிட்டு ஓடி வாங்கோ பார்ப்போம்!

அது மட்டுமின்றி, கைகலப்பாக எழுதவேணும் என்ற ஒரே நோக்கில் எழுதினேன். அனு , ராகவ் பாத்திரங்கள் சிந்திக்கவைக்கும் வகையில்  அமைந்திருந்தாலும்  அகல், வருண் இருவருமே,  வாசகர்களைத் தம் வசப்படுத்திவிடுவார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அதோடு, என் சொந்த ஊர் , அனலைதீவு பற்றிக் கதையில் எழுதும் வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்வு! ஊர் போய் வந்த உணர்வு!

அழகாக அச்சிட்டு  வெளியிட்டுள்ள சிறகுகள் பதிப்பகத்தாருக்கு மிக்க நன்றி!

.

என் பூக்களின் தீவே!- ரோசி கஜன்( கதை அறிமுகமும் முன்னோட்டமும்)

25129874_1797145283629162_164323341_o

 

 

அன்பு வாசகர்களே!

விரைவில்  வெளிவரவிருக்கும் ‘என் பூக்களின் தீவே!’ எனும் நாவல், இணையத்தில் வெளிவராது நேரடியாக நூல் வடிவம் பெறுகின்றது.  

அதனால், கதை பற்றிய சிறு அறிமுகமும் , முன்னோட்டமும் பார்க்கலாமா?

 

காதல்… என்பது எப்போதுமே அழகுதான் இல்லையா? அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்?  

    அதுவே இங்கும் நிகழ்கின்றது.

    வருண் , அகல் …காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இவர்களுள்  நுழைந்த காதல், அவர்களை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிவைக்கின்றது என்பதையும்,

   ராகவ், அனு… கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும், கோபமும், கலந்து பேசாத பொறுமையின்மையும் குறுக்கிட்டால் அந்த அழகிய காதல் வித்தும் ஆட்டம் காணலாம் என்பதுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுமாக  நகர்கின்றது கதை.

  ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் கலகலப்புமாக நகரும் இக்கதை  உங்கள் மனங்களில் இடம்பிடிக்குமென்று நம்புகிறேன். கதையை வாசித்து முடிக்கையில் உங்கள் வதனம் முறுவலால் நிறைந்திருக்கும் .

 இன்னொரு ரகசியம் … ஆமாம் மக்களே ரகசியமேதான் .

இந்தக் கதையில் வரும் சில சுவாரசியமான காட்சிகளின் சொந்தக்காரர் இங்கே தான் உலவித் திரிகின்றார். 

ஹே…ஹே…யார் என்று கேட்டால் சொல்லவே மாட்டேனாம்.  பிறகு copyright issues ஆகிவிடும்!

உங்களால் அனுமானிக்க முடிகின்றதா என்று, கதையை வாசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் . 

 

கதையிலிருந்து …

“சரிதான் போடா மண்டைக்கொழுப்பா!’ என்றவாறே, விசுக்கென்று திரும்பி நடந்தவளின் இதழ்களிடையே நெரிந்தது, பொங்கியெழுந்த  நகைப்பு!

  “ஏய்ய்ய்! வேண்டாம்டி ஒல்லிக்கோம்பை; கையில் மட்டும் அகப்பட்டாயோ சட்னிதான்!” படித்துக்கொண்டிருந்த வருண், அடங்காத கோபத்தோடு கதிரையை(இருக்கை) தள்ளிகொண்டு விசுக்கென்று எழுந்தான்.

   “அதே..அதேயேதான் நானும் கேட்டேன்; குத்து மதிப்பா இருபது தோசைகளை…அப்படியே குழைத்து விழுங்க சட்னி தேவைதானே? அதுக்குத்தான் தேங்காய் துருவித்தாங்க என்றேன்!” என்றவள், கோபத்தில் முகம் சிவக்கத் தன்னை நோக்கிப் பாய்ந்தவனிடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தில், ஒரே பாய்ச்சலாக மாடிப்படிகளில் தாவியிறங்கி, வலப்புறமாகத் திரும்பி, எதிரே வந்துகொண்டிருந்த சந்திரனில் மோதி, “ஏன்மா இப்படி கண்மண் தெரியாமல் ஓடி வாறாய்?” என்ற அவரின் கண்டிப்பைக் காதில் வாங்காது, “ஆன்ட்டி!” என்ற கூவலோடு சமையலறை நோக்கி ஓடினாள்.

 

****

“இப்போ என்ன சொல்ல வாறீங்க? நான் இங்க இருப்பதால் உங்க நிம்மதி கெட்டுப் போகுதா?” சீறலாகக் கேட்டவளுக்குச் சட்டென்று பதில் சொல்லாது, வெகு அசட்டையாக தோள்களைக் குலுக்கியவாறே கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், அவளை நோக்கிய பார்வையில் அப்பட்டமான கேலி!

   “இதில் சந்தேகமான கேள்வி வேற! ஹ்ம்ம்…அதுதான் இந்த வீட்டு பூஸுக்கும் பொன்சோவுக்குமே  தெரியுமே…” என ஆரம்பித்தவனை, “தம்பி போதும்; சாப்பிட வந்தால் அந்த வேலையை பார்!” ஆரம்பித்து வைக்கிறானே என்கின்ற அலுப்பில் அதட்டினார் செல்வி.

  அதோடு, சிலுப்பிக்கொண்டு எதுவோ சொல்ல முயன்ற அகல்யாவையும் கண்டிப்போடு பார்த்தார்.

  “உனக்கும் தான்; இனி மாறி மாறி கதை வளர்த்தால் இரண்டு பேரும் முறையாக வாங்குவீங்க!” என்றதுக்கும் வருணுக்கே முறைப்பு பறந்தது.

   “இப்போ உங்களுக்கு குளுகுளுவென்று இருக்குமே! இப்படி என்னையும் ஆன்டியையும் கொழுவி விடத்தான் இந்தாள் பிளான் போட்டார்; அது தெரியாம நீங்க அவுட் ஆன்ட்டி.” முறைத்தவளை நோக்கி,

   “நீயெல்லாம் ஒரு ஆளென்று கதைக்க வாறாயே! உன்னை கொழுவி விட ரூம் போட்டு யோசிக்கிறேனாக்கும்; நினைப்புத்தான்!” என்றவாறே, வெகு அலட்சியமாக ஒரு பார்வையை வீசினான் வருண்.

   அதோடு நிறுத்தாது, “ஏய்! முதல் அங்கால போடி; இங்க நின்று கத்துவதற்கு அப்படியே வெளியில இறங்கி பின்னுக்குப்போய் கத்து; பொன்சோ, தனக்கு ஜோடி கிடைத்துவிட்டது என்று சந்தோசப்படும்.” என்றவனுக்கே, தன் செல்ல நாயோடு இவளை ஜோடி சேர்த்ததில் நகைப்பு பீறிட்டது!

  “என்றாலும் பொன்சோ பாவம்தான் இல்லையாப்பா! ஹா..ஹா..” விடாது வம்பிழுத்தவனையும், சேர்ந்து சிரித்த சந்திரனையும் கொலைவெறியோடு பார்த்தாள் அகல்.

  “வேண்டாம் சொல்லீட்டன், பிறகு சம்பல் உள்ளே போகாது தலையில் கொட்டி விடுவன்.”

   “சரிதான்; முடிந்தால் கொட்டிப்பார் பார்ப்போம்; கலவாய்க்குருவி!” இப்படி, மையம் கொள்ள முனைந்த அனல்காற்றின் ஆரம்பத்தில் விசுக்கென்று குறுக்கிட்டது செல்வியின் கோபக்குரல்.

    “இங்க பாருங்க, இரண்டு பேரும் வாயை மூடுவது என்றால் இங்க இருந்து சாப்பிடலாம்; இல்லையோ, வெளியே போய் நின்று சண்டைபிடித்து, சமாதானம் ஆகீட்டு வாங்க!” குரல் உயர்ந்திருப்பதில் தாய்க்கு கோபம் வந்து விட்டதை உணர்ந்தாலும் அவ்வளவு இலேசில் விட மனமில்லை வருணுக்கு!

   “அய்யே! மனிசனாகப் பிறந்தவன் இவளோடு சமாதானம் ஆவானா? அதற்கு நானும் கொள்ளிவாய்ப்பிசாசாக இருக்க வேண்டுமே!” என்றவன், அவள் முகம் போன போக்கில் உள்ளுக்குள் வெகுவாகவே நகைத்தான்; அவன் உதடுகளிலும் அதன் சாயல் படர்ந்தது!

   “ஆன்ட்டி வேண்டாம்…இப்போ நீங்களே பார்க்கிறீங்க தானே, எத்தனை பட்டப் பெயர் சொல்லுது இந்த ஊத்தப்பம்.”

   “ஏய்ய்ய்!” எழுந்து விட்டான் வருண்.

   “யாரடி ஊத்தப்பம்? சின்னப்பிள்ளையில நீயும் குண்டுப்பூசனி தானே! அங்க அனலைதீவு கதியால் குருத்து, தென்னங்குரும்ப, கள்ள மாங்காய், புளியங்காய், நாகதாளிப்பழம் என்று எதை அரைக்காமல் விட்டாய்? அதையெல்லாம் நான் சொல்லியா காட்டுறன். எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறன், அப்படிச்சொல்லாதே என்று; இங்க பார்; என்னை வடிவா பார்; அப்படியா இருக்கிறன்.” அவள் கழுத்தில் பிடித்து தன் முகத்தைப் பார்க்க வைக்க, கையிலிருந்த மர அகப்பையால்சுளீரென்று  அவன் முதுகில் இழுத்தார் செல்வி.

    “ஆஆஆஆஆ அம்மா! உண்மையாகவே அடிக்கிறீங்க! நோகுதம்மா! ஐயோ நிற்பாட்டுங்க. அப்பா…காப்பாத்துங்க…” அலறினான் வருண்.

 

இனி , புத்தகத்தில் வாசித்துப் பாருங்கள் மக்களே!

எப்போதும் போல உங்கள் கருத்துக்களை அறிய மிக மிக ஆவலாகக் காத்திருக்கிறேன்.

online இல் வாங்க விரும்புவோர் MarinaBooks.com இல் இப்போதே முன்பதிவினைச் செய்யலாம் .

 

என் பூக்களின் தீவே

 

அன்புடன்,

ரோசி கஜன்.

 

 

 

உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்! – கிருநிசா

  

அன்பு வாசகர்களே!

இன்னுமொரு  மகிழ்ச்சியான செய்தி!

 

‘உயிரே உன்னில்  ச(அ)ரண் புகுந்தேன்!’ எனும் அழகிய தலைப்போடு, தன் முதல் கதையில் அறிமுகமாகிறார் ‘ கிருநிசா‘. 

அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மிக்க சந்தோசம். 

முதல் கதை என்று சொல்ல முடியாதவகையில் இலாவகமும் சுவாரசியமுமாகக்  கதை நகர்த்துகிறார்.

நாயகி ஆனந்தவர்ஷினி,  நாயகன் ரித்விக்ராஜ் நம் மனங்களைக் கொள்ளை கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டில், தை முதலாம் திகதி முதலாவது அத்தியாயத்தோடு உங்களிடம் வரவுள்ள கிருநிசாவை, வாழ்த்துவதுடன், உங்கள் ஆதரவையும்  நல்குவீர்கள் என்று நம்புகிறேன் .

 

அவரது சிறு அறிமுகமும் கதைக்கான சிறு முன்னோட்டமும் கீழே…

 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நான் கிருபாகரன் நிசாந்தி.  கிருநிசா என்ற பெயரில் எழுதப்போகிறேன்.
என் சொந்த இடம் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை.

 

நிறைய கற்பனைக் கதைகளை நினைக்கும் என்னையும் ‘நீ கதை எழுது, நல்லா வரும்.’ என, துஜி தூண்டிவிட்டாள்.
அதன் பயனாக, என் முதல் முயற்சியுடன் உங்களை நாடி வந்துள்ளேன். 
முதலாவது அத்தியாயத்துடன் வருகின்ற முதலாம் திகதி சந்திப்போம்.
அன்புடன் ,
கிருநிசா 
கதை முன்னோட்டம் 

 

லண்டன் ஹீதுறு விமான நிலையம்.

அங்கிருந்த இருக்கையில் சம்மணமிட்டபடி அமர்ந்திருந்தாள் அவள்.

கண்களை மூடி, கைகூப்பி வேண்டியபடி இருந்த அவளது தோற்றம் அங்கிருந்த ஒருவனை உற்றுப்பார்க்கவைத்தது.

அவன், லண்டனில் ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்கும் இலங்கைத்தமிழன். பார்ப்பதற்கு வெளிநாட்டவன் போலவே இருப்பான். தனது நண்பனை வழியனுப்புவதற்கு அந்த விமான நிலையத்திற்கு வந்திருந்த அவனைத் திரும்பிப்பார்க்கவைத்தாள் அவள்.

மெல்ல அவளருகில் சென்றவன் , “ஹேய்! இங்க பார்!” என்று, அவளது முகத்திற்கு நேரே தனது கையைத் தட்ட, அதிர்ந்து, கண்களை மலர்த்தினாள் அந்தக் காரிகை…