‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே! BY துஜி சஜீ (துஜி மௌலி)

அன்பு வாசகர்களே! மீண்டும் நானே …எல்லோரும் நலம்  தானே? இதோ, ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.  வேறு என்னவாக இருக்கும்? எல்லாம் கதைதான்.  இம்முறை, சற்றே ஒரு மாறுதலுக்காக புதிதாக ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறேன்.  ”இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே!‘ எனும்  கவிதை போலொரு தலைப்போடு, தன் முதல் கதையை நம் முன் கொண்டுவரவுள்ளார்  ‘துஜி மௌலி’. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன், படபடக்கும் இதயத்தோடு, குறுநாவல் ஒன்றுடன் உங்கள் முன்னால் வந்த என்னை இந்நிமிடம் வரை நீங்கள் ஏமாற்றியதில்லை. தொடர்ந்து எழுதத்தூண்டும் வகையில் ஆக்கபூர்வமான, ஆழமான கருத்துப் பகிர்வுகளால் என் எழுத்து மெருகேற உதவிக்கொண்டிருக்கும் நீங்கள், புதிதாக எழுத்துலகில் அடியெடுத்து வைக்கும் துஜி மௌலிக்கும் அதேபோல, அதைவிடவும் அதிகமாக ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். அவரும் உங்களை ஏமாற்ற மாட்டார் என்று நினைக்கிறன். எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கும் கதைக்கு, செய்வாய் , வெள்ளி  என … Continue reading ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே! BY துஜி சஜீ (துஜி மௌலி)