உன் வாசமே என் சுவாசமாய் !…. ஜெனா மதியின் பார்வையில் .

 

உன் வாசமே என் சுவாசமாய் 

மயூரன்  அவந்திகா

அலட்டலில்லாத எந்நேரமும் சிரித்தவாறே எதையும் ஸ்போட்டிவாக எடுக்கும் ஹீரோ😍😍😍

அடக்கப்பட்ட எரிமலையின் உருவமாய் அடிக்கடி கோபத்தில் சீறும் ஹீரோயின் 😊😊

அவந்திகா குடும்பத்தை தாங்கினாலும் அன்பால் அரவணைக்காமல் அதட்டி அடித்து அவர்களை பார்ப்பதில் அவளை வெறுத்தாலும் சில நாட்களிலேயே அவளை புரிந்து அவள் மேல் காதல் கொள்ளும் மயூரன் 

மயூரன் தன்னை திருமணம் செய்வதை முதலில் தன்நிலை உணர்ந்து மறுத்தாலும் பின் குடும்பத்திற்காக சம்மதித்து பின் அவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது ஆரம்பத்தில் அவள் மேல் கொண்ட கோபம் எல்லாம் காத்தோடு போயாச்சு😊😊

மயூரன் தன் காதல் அவந்தி மனதை மாற்றும் என காத்திருந்து அவள் மனதை வெல்கிறான் 

அவந்திக்கு தொடர்புடைய யாருக்கோ ஏதோ நடந்த சம்பவம் தான் அவளின் இந்த குணங்களிற்கு காரணம் என்று பாரத்த போது அது யார் என தெரிந்த போது அதிலும் யாரால் என்று அறிந்த போது 
அந்த அதிர்ச்சியிலிர்ந்து மீண்டு சந்தோஷ மான முடிவென்று முடிவுக்கு வந்த போது அடுத்த அதிர்ச்சி சுஜி யாரென்ற உண்மை😌😌

ஜேம்ஸ் அவந்தியின் அப்பா போன்றவர்கள்😡😡 வாழும் சமூகத்தில் தான் மயூரன் அமலன் போன்றவர்களும் 😍😍

நம்ம பக்கத்து வீட்டு அண்ணா அக்கா லவ் ஸ்ரோரி போல இருக்கே ன்னு தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் கதைக் கருவும் அது சொன்ன செய்தியும் ரொம்பவே மனசை தாக்கிடிச்சு😭😭

ரொம்ப சாதாரணமான எழுத்து நடையிலே போகிற போக்கில சொல்லிட்டு போறது போல இவளோ பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க அதுக்காகவே 😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗

நானும் இனி வீடு தேடுறப்போ யாராவது மயூரனையும் சேர்த்து தேட வேண்டியது தான்😂😂😂

Waiting for ur next story ka😍😍

Advertisements