‘உன் வாசமே என் சுவாசமாய்!’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San

 

உன் வாசமே என் சுவாசமாய்💕

இதில் யாரை அதிகமாகக் கொண்டாடுவதுனு இன்னமும் புரிபட மாட்டிக்கிது.

அவந்தி ,அமலன் ,சுஜி ,ருபீஷ் ,மார்கண்டு தாத்தா, மயூரன்,சகு &சக்தி ஆன்டி ,கல்பனா.

இத்தனை பேரும் எந்த நேரத்திலும் அவங்களோட கதாபாத்திரம் விட்டு வெளிய போகவே இல்ல.

ஒருவருக்கு தவறாய் தெரிவது பலருக்கு சரியாய்ப்படும்.இந்த கண்ணோட்டத்தில் அவந்தியை சந்திக்கும் மயூரன்

அவன் என்னைப் பற்றி எப்படி நினைத்து விட்டானே என எண்ணாமல்
நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள் am dont care of it என
இரும்பு மனிதியாய் வாழும் அவந்தி👌👍

எவ்வளவு காலம் உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைத்து ,பேரன் பேத்திகள் எப்பொழுது சந்தோஷமாக வாழ்வார்கள் என  நினைத்து அதிலேயே தன் வாழ்வினை முடித்த மாமனிதர் மார்கண்டு தாத்தா.

அமலன் -எனக்கு நிறைய இவனைப் பிடித்ததுக்கா..இதுவரை நான் நிறைய கதைகள் படித்து இருந்தாலும் இவன் போல் ஒரு தம்பி கதாபாத்திரம் chanceless கா..எந்த இடத்தில் அக்காவுக்கு ஆதரவு தர வேண்டும், எங்கு அவளை கண்டிக்க வேண்டுமோ என எல்லா இடத்திலும் he scored கா.
எல்லாரும் maximum அண்ணா தங்கை கதைதான் எழுதுறான்க.அதக் கொஞ்சம் மாற்றி யாராச்சு எழுதலாமேனு ரொம்ப நாளாய் ஒரு ஏக்கம் இருந்துட்டே இருந்த்து..அமலன் அவந்தி அந்த ஆசையை நிறைவேற்றிட்டாங்க.

சகு & சக்தி ஆன்டி- இவங்க நிலையில் போய் பார்க்கும்போது அது ரொம்ப சரியாய்ப்பட்டது எனக்கு..

சுஜி .ருபீஷ்,மயூரன் combo scored well more
than அவந்தி ,மயூரன் &அமலன்..

கதைக்கரு அதைப் பற்றி நான் அதிகமாக விவாதிக்க வேண்டியதில்லைனு நினைக்கிறேன். எல்லாரும் சொல்லிட்டாங்க.

ஆனால் last epi ரொம்ப ரொம்ப கனமானதுக்கா.ஒரு வாக்கியம் அது ஆனா மனதைப் புரட்டிப் போட்டிருச்சுக்கா.

இறுதியில் அனைவரின் நேசமும் சுவாசமானதில் me happyyyy😀😀

Next story epo vena kudunga Ka..BT oru China aasai .Ella storieskum heroinedhan edhachu vali thangi vazhura..so konjam heroku sogam kudungaka…
And amalan madhiri amaidhi padai , namma kavya frnd abi pol oru adhiradipadaiyum serthu vaikra madhiri oru comical story neenga eludhungaka.pls😉

Advertisements