‘உன் வாசமே என் சுவாசமாய் !” வசு அவர்களின் பார்வையில்

 

First of all, HATS OFF KA… இப்படி ஒரு அழுத்தமான baseline கொண்ட கதையை அற்புதமாய் செதுக்கி அதனை அழகாய் கையாண்டதற்கு!

ஆனாலும் BEWARE… not all will be giving positive feedbacks for this story specially for the last ud… ஏன், நானே இப்போ செம கோவமாதான் வந்திருக்கேன்..

ஆமா, என்னதான் எழுத்தாளரா சமூகக் கடமை இருக்கென்றாலும் உங்களை யாரு எங்க டீச்சரை இத்தனை துன்புறுத்தச் சொன்னது???

ரொம்ப மோசம் நீங்க..

மனசுக்கு மிக நெருக்கமான, நான் பிரம்மிச்ச அவந்தி டீச்சரை (அதுவும் அத்தனை சிறு பெண்ணாக) அந்த ஒரு நிலையில வெச்சு பார்க்க சுத்தமா முடியல.. நான் கதையை படித்து முடித்து கிட்டதட்ட பாதிநாள் ஆகிப்போச்சு,.இன்னமும் பாதிப்பு குறையவே இல்ல…

“அதான் அக்கா ஹேப்பி என்டிங் வெச்சிட்டாங்களே, மகிழ்ச்சி”னு நகரமுடியலயே….

All coz of you our dear writer!

படிக்குற எங்களுக்கே இத்தனை கடினமா இருக்கே, ஒரு எழுத்தாளரா அக்கொடிய நிகழ்வு, அதைச் சார்ந்த பகுதிகளை எழுதி முடிக்க நீங்க எவ்ளோ யோசிச்சும் ,போராடியும் இருப்பீங்கல!!!

ஒரு கதையை ஸ்டார்ட் செஞ்சோமா, ஒரு இரண்டு மணிநேரத்துக்குள்ள படிச்சு முடிச்சோமானு இருந்திருந்தா இத்தனை சோகம் இருந்திருக்காது போல…

கிட்டதட்ட மாதக்கணக்காய் ஒவ்வொரு udயாக கதைமாந்தர்களுடன் நட்பு பாராட்டத் தொடங்கியது எவ்வளவு பெரிய தப்பு பாருங்க!

‘ Writers, artists எல்லாரும் கண்டிப்பா அவர்கள் படைப்புகள் மூலம் ஏதோ ஒரு வகையில சமூக நலன், விழிப்புணர்வுக்கு contribute செய்யனும்’அப்படீனு என்னைப் போல வாய்க் கிழிய பேசுபவர்கள் பேசமட்டுமே செய்யாமல், இம்மாதிரி படைப்புகளை படிக்க மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்…

டீச்சரின் வலிக்குப் பின்னால் இப்படி ஏதேனும் ஒரு காரணம்தான் இருக்குமென்று யூகித்தேன், ஆனால் இப்படி (the last UD) ஒரு காரணம் இருக்குமென்று துளியும் எதிர்பார்கவில்லை!

‘நமக்கு பிடித்த டீச்சருக்கு அதுவும் கதையில் நடப்பதற்கே இவ்ளோ கஷ்டமாக இருக்கே இதைவிடவும் எத்தனை கொடுமைகள் உண்மையில் நடக்கின்றன’வென்று மறந்து போனேன் பாருங்க…

‘நமக்கு வந்தால் ரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளிச் சட்டினி’என்ற கொள்கை கொண்ட சமூகத்தில் பிறந்தவள்தானே..வேரெப்படி யோசிக்கத் தோன்றும்!

“what a story!”, “what a man(Mayuran)!, “superwoman (Avanti)!!!, “lovely characters!!!!”, “what a writer!( நீங்கதான் ) இவ்வாறு பல ஆச்சிரியக்குறிகள் தோன்றுவதைப்போலவே அதைவிடவும் இன்னும் கொஞ்சம் அதிகமாக உதிக்கிற ஒருவித வலி… அந்த வலி நம் ஒவ்வொருவரிலும் நம் கண்ணுக்கு முன்னால் தினம் தினம் நடக்கும் கொடுமைகளைக் கண்டு தோன்றினால் போதும்..

வலி வந்தால் கண்டிப்பாக அதற்கு மருத்துவம் செய்துதானே ஆகவேண்டும், அப்படியே சமூகத்திற்கும் ஒரு மருத்துவம் செய்துவிடுவோமே!ஆனால் எங்கே, நாம்தான் வலியையே மறக்க, மறுக்கச் செய்பவர்களாயிற்றே!

முதல் பக்கத்தில் சுஜி செல்லத்தின் சாதனைச் செய்தியை மட்டுமின்றி, நடுப்பக்கத்தில் கல்பனாவின் அடையாளத்தை அடிகோடிட்டது அசத்தல் கா..loved it..

அதைப்போலவே “ டிரைவராய் இருந்து தீவிரவாதியாய் மாறிப்போன ஜேம்ஸ் என்கவுன்டரில் போட்டுத் தள்ளப்பட்டான்”னு ஒரு செய்தி இருந்திருந்தா!!!!

மயூரன் o my god…………..u r fabulous man!!!! அடுத்த ஜென்மத்துல நான் வரேன் உங்க பக்கத்து வீட்ல வாடகைக்கு!!!!

அக்கா….U ROCKED ASUSUAL… FEELING PROUD! KEEP ROCKING!!!!!!!!

ஆனாலொன்னு. அடுத்தமுறை இத்தகைய டிவிஸ்டு தருவதாக இருந்தால் முன்னமே லைட்டாக கண்ணடித்துவிடுங்களேன் ப்ளீஸ், நாங்க கொஞ்சம் மனதை திடப்படுத்திக் கொள்வோமில்ல..

எத்தனை பெரிய கமெண்ட் பார்த்தீங்கல!!!

இத்தனை நாட்கள் கமெண்டாததற்கு ஈடுசெய்திட்டேனா??????

Advertisements