‘உன் வாசமே என் சுவாசமாய்!’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…

 உன் வாசமே என் சுவாசமாய்!

ரோசியின் கை வண்ணத்தில் மற்றுமொரு கதை..தாத்தா பேரப்பிள்ளைகள் என்று ஆரம்பித்த கதை,பெற்றோர் இறந்ததால் இவர்களுடன் இருக்கிறார்கள் ..தம்பி தங்கைகள் என்று அளவான குடும்பம்..அவந்தி டீச்சர் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறாள்..அமலனும் கூட தோள் கொடுக்கிறான்..சிறுமி சுஜியை கண்ணுக்குள் பொத்தி பாதுகாக்கிறாள் ..கொஞ்சம் ஓவரா இருக்கே என்று நினைத்தாலும் இன்றைய நாள்களில் இப்படித்தானே இருக்கணும் என எண்ணத்தோன்றுகிறது.

பக்கத்துக்கு வீட்டில் மயூரன் அவன் அம்மா ..அவன் ட்ரைவர் சிறுமியிடம் நடந்து கொள்வதட்கு கண்டிக்கும் அவந்தியை அவனும் எதற்கு இப்படி ஓவரா ..என்றுதான் நினைக்கிறான்.உண்மை தெரிய வரும்போது அவளை கவனித்ததில் அவன் மனம் அவளை விரும்புகிறது.அவளோ அவனை முற்றிலும் தவிர்க்கிறாள்.விடாமல் திருமணம் வரை போகிறான்..சக்தி அம்மாவும் வேறு வழியின்றி ஒத்துக்கொள்கிறார்.விடாமல் மறுக்கும் வாந்திக்கு எதோ ஒரு பெரிய வலி இருக்கு என்று அறிகிறான்…சகுந்தலா சொல்கிறார்..அனால் நமக்கு ஒரு பெரிய சஸ்பென்ஸ்தான்..இறுதி வரைக்கும்!!

நானும் எதோ யாருக்கோ நடந்தது என்று நினைத்தேன்.அந்த சம்பவம் அவந்திக்கே என்று தெரியும் பொது பெரிய ஒரு அதிர்ச்சிதான்!எவ்வளவோ செய்திகளை கடந்து போகிறோம்.பெற்ற தந்தையே பெண்ணை சீரழிக்கும் செய்திகளை பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்…அவந்திக்கு பொருத்தி பார்க்கும்போது தான் அப்பட்டமாய் அதிர்ச்சி அடைகிறோம்!இப்படித்தானே மற்ற பிள்ளைகளுக்கும் …அதுவும் ஒரு பிள்ளை பெற்று எடுக்கிறாள்..கொடுமை..இனி எனக்கு இப்படி ஒரு செய்தி கண்ணில் பட்டால்…படக்கூடாது..அவந்தி நினைப்பு கண்டிப்பா வரும்..அவளுக்கு ஒரு மயூரன் வந்தது போல எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்…

எனக்கு ஒரு சந்தேகம் ,,,சக்தி அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?? அல்லது நான் படிக்காமல் தவற விட்டுட்டேனா??அவர் அறிந்து இருந்தால் அவருக்கு என் பாராட்டுக்கள்..மயூரன் ..இப்படி ஒரு ஆணா??!!

பிள்ளைகள் மீது காட்டும் அன்பாகட்டும், அவந்தி மீது வாய்த்த நேசமாகட்டும், அம்மாவை கன்வின்ஸ் பண்ணும் இடமாகட்டும்…அதான் கட்டிப்பிடி வைத்தியம்!!! கலக்கிட்டே போ!!எவ்வளவு பொறுமையா காத்திருக்கான்…ஆனாலும் அவந்தி ரொம்ப பொறுமையை சோதிச்சுட்டா!!

நான் கூட இப்படிப்பட்ட கதா நாயகியை ரோஸி அசால்ட்டா கொண்டு வந்துட்டிங்களேன்னு நினைச்சேன்…

பொதுவா யாரும் கதைகளில் இப்படி ஒரு கதா நாயகியை கொண்டு வர மாட்டார்கள்..இதற்கே உங்களுக்கு ஒரு பூங்கொத்து ரோஸி…

எப்போவும் நிதா இப்படி அதிரடியாய் எழுதுவாங்க …நானே அவங்க கிட்ட கடைசியா எழுதிய கதையில் நான் மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லியிருந்தேன்..

அதை நீங்க நிரப்பிட்டிங்க…வாழ்த்துக்கள் ரோஸி…

Advertisements