‘உன் வாசமே என் சுவாசமாய் ! ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …

 

ரோசியின்…. உன் வாசமே என் சுவாசமாய்!

இந்த அவசரகதியான, இயந்திரத்தனமான வாழ்க்கை பயணத்தில்.. இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டுமெனில் பொறுமையும், காத்திருப்பும் அவசியமே… அதுவும் புண்பட்ட மனதிற்கு அது மிகவும் அவசியமே என்பதை உணர்த்தும் கதை…

இப்போது மனிதர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தும் ஒரு மிகக் கொடுரூமான செயலை (பொதுவாக மனிதர்கள் ஏன் சொன்னேன் என்றால், அப்படி ஒரு காரியத்தை செய்ய துணிபவனும், அதை ஏதோ ஒரு காரணம் கொண்டு நியாயப்படுத்துபவனோ கண்டிப்பாக மிருக இனத்தில் கூட சேர்க்க முடியாது) மையமாக கொண்டு, அதே சமயத்தில் அதை படிக்கும் நம் கண்களில் கண்ணீரையோ, இல்லை உடலில் நடுக்கத்தையோகொண்டு வராமல்,ஒரு இதம் தரும் காதலோடு சேர்த்து, அந்த பாதிப்பின் தாக்கத்தையும் நம் மனதில் கொண்டு சேர்த்திருக்கிறார் ரோசி..

மயூரன் – அவந்தியை முதன்முதலில் பார்க்கும் போது அவள் நடவடிக்கையையும், அவள் குணத்தையும் கண்டு, கோபமும் சிடுசிடுப்பும் கொண்டு… பின் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்பதை புரிந்து அவள் பால் கொண்ட ஈர்ப்பால் அவளை சீண்டுவதும், அவள் குடும்பத்தின் மீது அவன் காட்டும் அக்கறையும், அவள் மீது கொண்ட காதலை அவன் உணர்ந்த போதும், தன் பொறுமையினாலும், காத்திருப்பாலும் அவளிடம் மனமாற்றத்தை கொண்டு வருவதின் மூலம் நம் மனதிலும் அழகாக இடம்பிடித்து விடுகிறான்.

அவந்திகா – பொதுவாக பிரச்சனைகளை தூரம் இருந்து பார்ப்பவரை விட, அதை எதிர்கொள்பவர்கள் அந்த பிரச்சனையை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதற்கு அவள் ஒரு எடுத்துக்காட்டு… தன்நிலை எந்த பெண்ணிற்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் வெளிப்பாடு தான் அவள் சுஜியிடம் காட்டும் கண்டிப்பும், கல்பனா மீது வெளிப்படும் அக்கறையும்…

மயூரன் தன்னிடமும் தன் குடும்பத்தினரிடமும் எடுத்துக் கொள்ளும் உரிமையை பார்த்துக் கோபம் கொண்டு, அதே நேரம் அதன்பின் இருக்கும் காரணத்தை அறிந்தாலும்.. அதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், மனதை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பதிலும் அவளின் கதாப்பாத்திரம் அழகாக மிளிர்கிறது..

தாத்தா, அமலன், சகுந்தலா, சக்தி,சுஜி, ரூபிஷ், கல்பனா மற்றும் அனைவரது கதாபாத்திரங்களும் அருமை… அருமையான கதை.

இது தான் நான் படிக்கும் உங்களின் முதல் கதை…

வாழ்த்துக்கள் சிஸ்

Advertisements