நெஞ்சினில் நேச ராகமாய்!- வேதா கௌரி

 

ஒரு சாதாரண, நாம் அக்கம்பக்கத்தில் கேட்க ,பார்க்க கூடிய கதைகரு. ஆனால் தந்தவிதம் மிகவும் அசாதாரணம் நெஞ்சினில் நேச ராகமாய் என்னும் கதை

காதல் கடலில் முழ்கி அருமை பெருமையாய் வளர்த்த அன்னை ,தன் தமையன் எல்லோருடைய நம்பிக்கையை சிதைத்து சேர்ந்த ஆனந்த் &மங்கை சேர்ந்த வேகத்தில் வருட கணக்கில் வெறுப்போடு பிரிந்து பட்ட துன்பம் 
அவசரத்தில் முடிவு எடுத்து ஆகாசத்தில் உட்கார்ந்து அழு என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப நடப்பது என பல நிகழ்வுகள் …..
காதல் மணமோ ,பெற்றோர் பார்த்து வைத்த மணமோ இதில் எது நடந்தாலும் அவசர முடிவால் ஏற்படும் பிரிவால் அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டம் அவர்கள் படும் வேதனை எப்போதும் மாறாது என்பதை மகிழின் உணர்வுகள் முலம் அருமையாக சொல்லி இருக்கிறார் ‘’

உதய் பற்றி சொல்லியே ஆக வேண்டும்,,,,அழகான மகனாக ,கணவனாக அவன் வெளிபடுத்தும் நேசம் குறும்புகள் எல்லாமே அருமை …..அருமை ….. 
பல இடங்களில் அவரின் வர்ணனைகள் மனதை வருடுகின்றன,கதையை கொண்டு செல்லும் நேர்த்தி எல்லாமே அருமை …… 
நேச ராகமாய் நெஞ்சுக்குள்புகுந்து , அழியாத கோலமாய் மனதை நெகிழ்த்தி விட்டது …..
(பி.கு ) எனது முதல் முயற்சி எப்படி இருக்கு ..இது எல்லாம் ஒரு rw அப்படின்னு நீங்க திட்டுறது கேட்குது இருந்தாலும் ஆசை யாரை விட்டது ……

Advertisements