நீ என் சொந்தமடி! – ஸ்வப்ணா

  பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஏஞ்சல் அங்கு உள்ள வசதி படைத்த பெற்றோருக்கு செல்ல மகளாக தனி தன் அடையாளத்துடன் இருந்தாலும் தன் வேர் தேடி இந்தியா பயணம் ஆகிறாள் .

  அந்த பயணத்தில் அவள் அறிமுகம் எழில் உடன் ஏற்படுகிறது. எழிலுக்கு அவள் மீது கண்டதும் காதல் வர அதை சொல்லாமல் அவர்களின் பொது நண்பர் மூலம் நட்பு தொடர்கிறான்.

எழில் மூலம் அவள் தான் தேடி வந்த ஒருவரை சந்தித்து அறிமுகம் இல்லாமல் விலகி போகிறாள். இதற்கிடையில் அவள் உருவம் எழில் மிக அறிந்த ஒருவரை ஞாபக படுத்த அவள் வேர் அறிகிறான் எழில்.

அதை அவளிடம் சொல்ல அவள் அதை அறிந்து கொள்கிறாள். எழில் தன் காதல் சொல்ல அது ஒத்து வராது என்றும் ஏற்கனவே அவன் திருமணம் நிச்சயக்க பட்டு இருக்கும் போது இது வேண்டாம் என்றும் கூறி தன் காதல் மறைத்து , பிரான்ஸ் திரும்பி போகிறாள்.

ஆனாலும் அவன் அவள் மனதிலேயே தங்க அவள் சொன்ன காரணம் எல்லாம் சரி செய்து அவள்லின் விட்டு போன உறவுகளுடன் ஒரு நட்பு ஏற்படுத்தி அதை கடந்து அவளுடன் இணைகிறான் எழில் .

நல்ல ஒரு கதை. ஏஞ்சல் மற்றும் அவள் உணர்வுகள் வந்த விதம் அழகாக வந்து இருக்கிறது.

எழிலின் காதலும் அவன் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் நல்லா வந்து இருக்கு.

நல்ல ஒரு கதை காதல் வேகத்தில் பிள்ளை வரை போய் ஆனால் அதில் திடமாக இல்லாமல் இருப்பதால் அவ்வழி வந்த பிள்ளைகளின் நிலைமை என்ன என்ற கேள்வி தாங்கி அதை சார்ந்து வந்த கதை இது .

பெரிய குடும்பம் , குடும்ப உறவுகள், யதார்த்தமான நடை , இயல்பை ஒத்த கதாப்பாத்திரங்கள் செயல்கள் என ஒரு கதை.நான் ஒரு அவுட் லைன் தான் சொல்லி இருக்கிறேன் மொத்தமும் அறிய கதையில் வரும் பலரின் உணர்வுகளை அறிய வாசித்து பாருங்கள் 

Advertisements