நீ என் சொந்தமடி! – திருமதி லாவண்யா.

 

ஏஞ்சல், என்ன ஒரு துடிப்பான பெண்… எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சது… அவளைப் பார்த்து எழில் உருகறதும், சோபி, லூகஸ் பார்த்து ஏமாற்றம் அடையறதும்… செமையா பீல் பண்ணி எழுதி இருந்தீங்க..

எழில், கலகல பார்ட்டி.. மனோஜ் அவனைக் கிண்டலடிக்கும் இடத்தில், அசடு வழியாம ஆமாம்டா என ஒத்துக் கொள்வது சூப்பரா இருந்தது. ஸ்வேதா இருவரையும் புரிஞ்சுக்குறது நல்லா இருந்தது…

எழில், ஏஞ்சல் ஒருவரை ஒருவர் புரிஞ்சுட்டு ஒருவருக்கு ஒருவர் உருகறது
ரொம்ப நல்லா எழுதியிருந்தீங்க..

ஏஞ்சல், அவளுக்குரிய இடத்தைப் புரிந்து கொண்டு தனிமையில் மருகுவதும், பின்னே எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வதும் இயல்பாக இருந்தது. கடைசியில் இராஜத்திடம் உண்மையை சொல்லாமல் விட்டது எனக்கு மிகவும் பிடித்தது..

எப்பொழுதும் போல் உங்கள் எழுத்து அருமை.. கீழே வைக்க மனமில்லாமல் கிடைத்த இடைவெளியில் படித்து முடித்துவிட்டேன்..
ஸ்வாதியை அம்போன்னு விடாம சீக்கிரம் ஜோடி சேர பாருங்க.. 😉

மிக்க நன்றி…
அன்புடன்,
லாவண்யா.

 

Advertisements