உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – சரளா

 

பிறர் மீது நாம் கற்களை வீசினால்……. காயங்களாக நம்மீது விழும்….
பிறர் மீது நாம் பூக்களை வீசினால்….. மாலையாக தோள்களில் விழும்….
என்பதை உணர்த்துவதே இக்கதை.

பூஜா…..  தாய், தந்தை, தாத்தா, பாட்டி, தங்கை…… என்ற அன்பான குடும்பத்தின் இளவரசி…. வேலையின் காரணமாக….. குடும்பத்தைப் பிரிந்து, தன் பெரியம்மா தேவியின் வீட்டில் தங்கி…. பணிபுரிகிறாள்…. மிகவும் கலகலப்பானவள்…. தன் குடும்பத்தினரிடம் மிகுந்த பாசம் கொண்டவள்…… 

சமிந்த….. பூஜாவின் மேலதிகாரி…… வேலையில் சரியாக நடந்து கொள்ள வேண்டும்…. சிறு தவறு என்றாலும் சகித்துக் கொள்ளாதவன்….. என்று பல பட்டங்களைத் தன் அலுவலகத்தினரிடமிருந்து…. பெற்றுக் கொண்டிருப்பவன்….. ஆனாலும், பூஜாவிடம் சிறிது தன்மையாகவே நடந்து கொள்வான்…..

பூஜாவிற்கு….. வனி, தீப்தி என்ற இரு நெருங்கிய தோழியர் உண்டு…. அவர்களுடன் இணைந்து சமிந்தவை….. 
அவனுக்குத் தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் எப்போதும் கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்க…… நாட்களோடு வேலையும் இலகுவாகவே சென்றது…. இந்நிலையில், சமிந்தவும் பூஜாவும் ஒருவரையொருவர் காதலித்தாலும்…… தன் குடும்பத்தை மனதில் கொண்டு சமிந்தவிடமிருந்து விலகிச் செல்ல……. சமிந்தவோ, தன் மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவளை நெருங்கி வந்தான்…..

இதற்கிடையில், ரஞ்சித் என்பவன் பூஜாவைப் பார்த்துவிட்டு……. அவளைக் காதலிக்கிறான்…… பூஜாவின் பெரியம்மா தேவியோடு நட்பு ஏற்படுத்திக் கொள்கிறான்….. தங்கை, தாய், தந்தை, பாட்டி, தாத்தா என்ற அழகான குடும்பம் அவனுடையது…..

ஒரு நிலைக்கு மேல் தன் காதலை மறைத்துக் கொள்ள முடியாத பூஜாவும்……. வெளிப்படுத்த தவித்துக் கொண்டிருக்கும் சமிந்தவும்…. தத்தம் காதலை வெளிப்படுத்தும் அதே நேரம்…… பூஜா, தன் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும்….. அவர்களை உதறிவிட்டு, தன்னால் வர முடியாது எனவும் கூறி…. பிரிந்து, தன் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டு அங்கேயே தன் வேலையைத் தொடர்கிறாள்…… சமிந்தவும், அவளைக் குடும்பத்திலிருந்து பிரிக்க மாட்டேன் எனக் கூறி…. பிரிந்து விடுகிறான்…..

நாட்களும் செல்ல…. பூஜாவின் குடும்பத்தினர் அவளது காதலை அறிய….. பலவிதமான குழப்பங்கள்…… சண்டைகள்….. விவாதங்கள்….. கோபதாபங்கள்…. என்று நீண்ட பிரச்சனைகளின் முடிவில்…. அனைவரது வாழ்விலும் சந்தோஷம் மலர்கிறதுஎப்படி…..?வாசித்து அறியுங்கள்……

அன்பு என்ற மூன்றெழுத்து மந்திரத்தைக் கொண்டு….. உறவு நட்பு காதல் …… என்ற மூன்று தளங்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்……

இழப்புகௌரவம்…. துரோகம்…. காயம்…. கோபம்என்ற எதிர்மறை உணர்வுகளுக்கும்….. பாசம்…. அன்பு…. நம்பிக்கை….. காதல்…. என்ற நேர்மறை உணர்வுகளுக்கும்இடையே பெரியவர்களையும் சிறியவர்களையும் சிக்கித் தவிக்க வைப்பதோடு….. நம்மையும் சேர்த்து தவிக்க வைக்கிறார்…….

சிற்சில இடங்களில் இலங்கைத் தமிழில் எழுதி இருந்தாலும்…… அதனையும் மீறி நம்மைக் கதையோடு ஒன்ற செய்வது…… அவருடைய சீரான எழுத்து நடையும்…. உணர்வுப் பூர்வமான வார்த்தைப் பிரயோகங்களும் தான்…….

வைரத்தால் வைரத்தை அறுப்பது போல…… காதலால் காதலை வெறுத்து ஒதுக்குவதும்….. காதலால் காதலை விரும்பி ஏற்பதும்….. அழகாக கையாண்டிருப்பது அருமை

முந்தைய கதைகளுக்கும்…… இந்த கதைக்கும்…. நிறைய வித்தியாசம்…. முந்தையக் கதைகளில், இலங்கைத் தமிழால், கதையோடு ஒன்ற முடியாது ( எனக்கு)…. ஆனால், இந்தக் கதையில்….. கதையோடு நாம் பயணம் செய்வது நம்மால் தவிர்க்க முடியாது என்பது…… மிகப்பெரிய முன்னேற்றம்ஆசிரியருக்கு வாழ்த்துகள்….

கொஞ்சம் பக்கங்கள் குறைத்திருந்தால்….. இன்னும் நன்றாக இருந்திருக்கும்…. என்பது என்னுடைய அபிப்ராயம்

 

Advertisements