உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – ராதா கிருஷ்

 

காதல் ஒரு அருமையான அழகான உணர்வு,உன்னை கொடு என்னை தருவேன் என்பதல்ல காதல்,நீ எனக்கு சகலமும் என்ற சரணகதியே காதல், எப்படி சர்க்கரை நோய் வந்தால் உய்ர் ரத்த அழுத்தமும்,கொலஸ்டராலும் கூட வருமோ அதே போல் காதல் என்ற நோய வந்து விட்டால் அதனுடன் உரிமையும் உறவும் போட்டி போட்டுக் கொண்டு கூடவே குதித்து விடும்,காதலை உணரும் வரை தான் அந்த காதல் கொண்ட எதிர்பாலினத்தின் மேல் சிந்தனை இருக்கும், அந்த உண்ர்வை உணர்ந்த பின் எதிர் பாலினத்தின் &தம்முடைய வீட்டின் மீதும் உள்ள உறவும்,சுற்ற்மும்,நட்பும் கொண்டுள்ள உரிமையை எவ்வாறு உறவின் பிணைப்போடு அவர்களிடம் இருந்து தாங்கள் கை கொள்வது என்ற போராட்டம் தொடங்கி விடும்.

சிலர் தாங்கள் உணர்ந்த காதலை உறவுக்கும் உரிமைக்கும் எடுத்துசொல்ல தெரியாமல் தங்களுக்குள் உறவும் உரிமையும் முழுவதுமாய எடுத்துக்கொள்வதற்காக இது நாள் தங்கள் பிறந்தது முதல் கொண்ட உறவை பாதிலேயே அறுத்து செல்கின்றனர்.ஆனால் வெகு சிலர் தான் பிறந்தது முதல் கொண்ட உறவிற்கு தன்னுடைய காதல் எனற உணர்வினை உரிமையாய் புரிய வைத்து தன்மேல் காதல்கொண்ட இணையை உறவின் துணையோடு உறவாகவும் உரிமையாகவும் கைப்பற்றுகின்றனர்

நான் இப்பொழுது சொல்ல போவதும் உறவும் உரிமையும் இரு காதல் ஜோடிகளின் வாழ்வில் எவ்வாறு விளையாடியது என்று பார்ப்போமா?

ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்து பழகியதும் அவனுக்கு தோன்றுகிறது இவ்வாறு 

அல்குபட ருழந்த அரிமதர் மழைக்கண் 

பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல் 

திருமணி புரையு மேனி மடவோள் 

யார்மகள் கொல்லிவள் தந்தை வாழியர் 

துயரம் உறீஇயினள் எம்மே

(அழகிய இளம் மலர் போல் உடல் உள்ள பெண்ணே நீ யாருடையா மகள் உன் தந்தை வாழி ,உன்னை ஈன்ற தாயும் வாழி)

காதலிக்க கூடாது என்று நினைக்கும் அந்த பெண்ணும் அந்த ஆடவனின் தூயமையான காதலின் முன் தோற்று போய் காதலிக்கிறாள் அந்த ஆண்மகனை தன மனதிற்குள்ளாகவே சொல்கிறாள்  

என் அறிவும் உள்ளமு மவர்வயிற் சென்றென 

வறிதால் இகுளையென் யாக்கை யினியவர் 

வரினும் நோய்மருந் தல்லர் வாராது 

அவண ராகுக காதலர் 

(என் அறிவும் உள்ளமும் அவரிடத்து சென்று சேர்ந்துவிட்டது,என் உடல் தான் இங்கு உள்ளது இனி அவர் வந்தாலும் அவர் என் காதல் என்னும் நோய்க்கு உரிய மருந்தாகியா காதலரே ஆவர் )

ஆனால் வெளியே எனக்கு உன்னை நான் காணும் வரை உள்ள உறவும் அது என் மீது கொண்டுள்ள உரிமையுதான் முக்கியம் என்கிறாள் காரணம் அவர்கள் குடும்பத்தில் எற்கனவே நிகழ்ந்த காதல் மணம் தான் அதற்கு காரணம் அந்த பெண்ணின் அத்தை காதல் கொண்டு அதற்காக இவர்களின் குடும்பத்திற்கு உள்ள உறவினையும் உரிமையையும் விட்டு விட்டு காதல் மணம் புரிந்து செனறு விட்டார்,அதனால் இவளின் பாட்டி இவ்வாறு புலம்பிக்கொண்டு இருக்கிறார் 

ஒருமகள் உடையேன் மன்னே; அவளுஞ் 

செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு 

பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் 

இனியே, தாங்குநின் அவலம்என்றிர் அதுமற்று 

யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே 

உள்ளின் உள்ளம் வேமே உண்கண் 

மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன் 

அணியியற் குறுமகள் ஆடிய 

மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே

(ஒரே மகளை தானே பெற்றென்,அவளை காளை ஒருவன் காதற்கொண்டு அவனுடன் சென்றுவிட்டாளே,இந்த அவலத்தை எவ்வாறு தாங்குவேன் என்று வீட்டில் உள்ளொர் உரைக்குமாறு செய்துவிட்டு சென்றுவிட்டாளே இந்த இடத்தில் தானே அவள் நடைபயின்றாள்,இந்த தின்னையில் தானே அவள் கழல்,நொச்சி போனற விளையாட்டுகளை விளையாடினாள்)

போல் தன் தாயும்,வயோதிக காலத்தில் உள்ள பாட்டியும் மீண்டும் துயர்படக்கூடாது என்று எண்ணி தன்னுடிய நிலையை சொல்லி விலகி செல்ல 

அதனை கண்ட அந்த காதலானும் அவளின் நிலை உணர்ந்து விலகுகிறான் இது எவ்வாறு இருக்கிறது என்றால் 

கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் 

நீவிளை யாடுக சிறிதே யானே 

மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை 

மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி 

அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் 

நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே

(பெண்ணே இந்த காட்டில் உலவி திரியும் தும்பிகளை பிடித்து நீ விளையாடுக, மதங்கொண்ட யானை போல் பருத்து விரிந்து அகன்று நின்று கொண்டு இருக்கும் அந்த வேங்கை மரத்தின் பின்னே நான் ஒளிந்து இருக்கிறேன்,கள்வர்கள்,எதிரிகள் வந்தால் அவர்களோடு நேர்ருக்கு நேர் போர்யிடுவேன்,ஆனால் உன் வீட்டு ஆள்கள் வந்தால் போரிடமல் உனக்காக அடங்கி நிற்பேன்)

அவளின் உற்வுகளுக்கு அவள் மதிப்பளிப்பது இவனும் மதிப்பளித்து விலகுகிறான் இந்த காதலியின் அத்தை தான் கொண்ட காதல் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறாள் 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே


அதை அறிந்த காதலியின் பாட்டி உடல் நலம் குன்ற,அத்தை இவள் குடும்பத்துடன் உற்வு கொள்ள வர அங்கே அத்தை மகனுடன் திருமணம் நடகிறது ஆம் இவள் காதலித்த வேற்று இனத்துக்காரன் இவளின் அத்தை மகனாக மாறி இவளுடன் திருமணத்தை முடித்து இவள் வீட்டு ஆள்களோடு உறவுகரனகவும் தன் காதலிக்கு உரிமைகாரனாகவும் மாறுகிறான் இது எவ்வாறு?… சரி காதலான் காதலி என்கிறாய் இவர்களுக்கு பெயர் கிடையாதா?… கதையின் பெயர் என்ன?… இந்த கதையை எழுதியது யார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது அது தானே சொல்கிறேன் இருங்கள் 

நம்ம ரோசி என்கிற ரோசிக்கா எழுதிய உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதேஎன்ற கதை கதையின் நாயகி பூஜா என்கிற தமிழ்ச்சி கதைநாயகன் சமிந்த என்ற சிங்களவன் இவன் பின்பு ரஞ்சித் என்று மாறுகிறான் எவ்வாறு பெயர் மற்றும் இனம் மாறுகிறான் என்பதை நீங்கள் கதை படியுங்கள் அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் படித்து அறிந்தை நாங்கள் எவ்வாறு படித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டோமொ அதுபோல் நீங்களும் வந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Advertisements