உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! – சுதா ரவி

காதல் என்ற உணர்விற்காக குடும்ப உறவுகளை தூக்கி எரியும் போது அதில் ஏற்படும் வலிகளையும் அதன் பின் அக்குடும்பத்தில் ஏற்படும் துயரங்களையும்……தன் குடும்பத்திற்காக காதலையே தியாகம் செய்யும் இருவரின் காதலையும் தனக்கே உரிய பாணியில் அழகானதொரு கதையாக கொடுத்து இருக்கிறார் ரோசி………….

பூஜா மகாலிங்கம் சுமதியின் மூத்த மகள். இவர்களின் இரெண்டாவது பெண் வீணா. குமாரசாமி விசாலம் இந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையினர். குமாரசாமிக்கு தன் பேத்திகள் என்றாள் உயிர். யாழில் வசிக்கும் இவர்கள் மிகவும் கண்டிப்பான தமிழ் குடும்பத்தினர்..

தன் பெரியம்மா வீட்டில் தங்கி வேலைக்கு போக கொழும்பு வருகிறாள் பூஜா. பூஜா மிகவும் துருதுருப்பானவள். அதுவே அவளுக்கு அவள் வேலை செய்யும்ஆபிசில் தீப்தி, வனி இரு தோழிகளை பெற்று தருகிறது….

ஆரம்ப நாட்களில் ஆபிசில் வேலையை ரசித்துக் கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும் தமிழ் தெரியாத சிங்களவர்களை தமிழில் கலாய்த்துக் கொண்டும் நேரம் செல்கிறது பூஜாவிற்கு. சில நாட்களுக்கு பிறகு அவளின் மேலதிகாரியாக வருகிறான் சமிந்த என்கிற சிங்களவன். மிகவும் கண்டிப்பானவன் என்று பெயர் பெற்றவன்.

நாட்கள் செல்ல செல்ல சமிந்தவிற்கு பூஜாவின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. முதலில் அவனின் காதலை மறுத்தாலும் பின்னர் தன்னை அறியாமலேயே அவன் தன் மனதிற்குள் நுழைந்து விட்டான் என்பதை புரிந்து கொண்டு அவனிடம் காதலை ஒத்துக் கொள்கிறாள். ஆனால் காதலை ஒத்துக் கொள்ளும் அந்த நிமிடமே நான் காதலுக்காக என் குடும்பத்தை பிரிய துணிய மாட்டேன் என்று கூறி பிரியவும் செய்து விடுகிறாள்….

இதன் நடுவே ரஞ்சித் என்ற ஒருவனும் அவளை காதலிக்கிறான்……பூஜாவின் குடும்பத்தில் அவள் அத்தை ரேணு சிங்களவன் ஒருவனை மணந்ததால் ஏற்பட்ட இழப்பின் காரணமாக தானும் அதே தவறை செய்ய கூடாது என்று தன் காதலியே தனக்கு பூட்டி வைத்துக் கொள்கிறாள்…..

பூஜாவும் சமிந்தவும் சேர்ந்தார்களா???? அவர்கள் குடும்பத்தில் சிங்களவனை ஏற்றுக் கொண்டார்களா???? ரஞ்சித் யார்???? யார் பூஜாவை மணந்து கொண்டது? ரேணுவை அவள் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டார்களா???? இந்த கேள்விகளுக்கு விட உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதேவில் கிடைக்கும்……….தெரிந்து கொள்ள…..படியுங்கள் மக்களே

Advertisements