என்றும் உன் நிழலாக! – ஹமீதா

உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்து…நெதெர்லாந்தில் வசிக்கும் இந்தர்….புவனி தம்பதியினர்…இவர்களின் பிள்ளைகள் ரஞ்சன் மற்றும் ரதீஷ். இந்தரின் தங்கை மகள் நிதி…..போரில் உயிருக்கு உயிரான தமயனை பறிகொடுத்து…வாழும் வழி அறியாத நிலையில் இந்தருடன் நெதெர்லாந்து க்கு அனுப்பி வைக்கப் படுகிறாள். பெண்பிள்ளையின் பொறுப்பை ஏற்க விரும்பாத புவனி…ஒன்பது வயதேயான அந்த சின்னஞ்சிறு மனதை சொல்லம்புகளால் தாக்கி தாக்கி சல்லடையாக்குகிறார்.

பெற்றோரையும் உடன்பிறந்தோரையும் பிரிந்து அந்நிய தேசத்தில்…மாறுபட்ட காலநிலைகளில்….புவனியின் குத்தல் பேச்சுக்கிடையே வளரும் நிதியை….ரஞ்சனும் ரதீஷும் அன்பாய் அரவணைத்துக் கொள்வது அழகு. இந்தரும் அவள் மீது பரிவாக இருந்தாலும் மனைவிக்காக தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிப்பவர். காலப்போக்கில் புவனியின் அச்சத்தை உண்மையாக்குவது போல…ரஞ்சன்…நிதியின் பால் காதல் கொள்கிறான். இதை உணர்ந்து கொள்ளும் நிதி அவனை தவிர்க்கிறாள்.

புவனியின் அக்கா சுமியின் மகன் வசீகரன். அமாங்க….பேரை வெச்சே சொல்லிடலாம்…இவர் தான் நம்ம ஹீரோ….

வேலைக்கு செல்லும் நிதிக்கு….அவ்வப்போது…ரஞ்சனின் கெஞ்சலுக்காக பிக் up..drop….குடுக்க வரும் வசி….இயல்பாகவே இறுகிப் போயிருக்கும் அந்த இளம் பெண்ணின் உணர்வுகளை லேசாக்கும் பொருட்டு சீண்டிக் கொண்டே இருப்பது வெகு இயல்பு. எல்லோரிடமும் ஒதுங்கி பழகும் நிதி ஒரு வழியாய் வசியை நண்பனாக ஏற்கிறாள். நிதியின் மீதான ரஞ்சனின் காதலை ஏற்கனவே அறிந்திருக்கும் வசி..ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை உணர்ந்து கொள்கிறான்….அவளுக்கு ரஞ்சன் மீது அது போல எண்ணமில்லை என்பதையும் அறிந்து கொள்கிறான். அப்புறம் ஐயாவோட approach கொஞ்சம் மாறிப் போகுது. நடு நடுவே romance களை கட்டுது….இதற்கிடையே ரஞ்சன் தன விருப்பத்தை தன தாயிடம் வெளிப் படுத்த…அவர் நிதியை அடிக்க….இதை அறிந்த வசி அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று காதலை சொல்லி….வீட்டிலும் சம்மதம் வாங்கி விடுகிறான்.

நிதி வசி உரையாடல்கள் வெகு அழகு. அவளிடம் கனிவும் காதலுமாக அவன் பேசும் வார்த்தைகள்….நம் காதில் ஒலிப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்தாளராய் ரோசி…அங்க நிக்கறாங்க…..

இவர்களின் காதல் அறிந்து ரஞ்சனின் கோபம்…இயலாமை…தன்னை மனம் புரிந்தாலும் தன் தாய் அவளை மகிழ்ச்சியாக இருக்க விட மாட்டார் என்ற நிதர்சனம் புரிந்து…அவள் வாழ்வு வசீயுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அவனின் உணர்வுகள்……. ரஞ்சனிடம் நேரடியாக பேசி தெளிவு படுத்தும் வசி….அவனின் மெல்லிய குற்ற உணர்வு….. அருமை….

ரஞ்சனை விரும்பும் காயாவை நிதி அவனுடன் கோர்த்து விடுவதும்….வசியுடன் இவள் தனித்திருக்கவே இவள் இப்படி செய்கிறாள் என்று ரஞ்சன் எரிச்சல் படுவதும் செம காமெடி…. 

சரி சாதாரண முக்கோண காதல் கதை போலிருக்கு ன்னு ரொம்ப லேசா எடை போட்டுடாதீங்க பா….

இறந்து விட்டதாக கருதப்பட்ட நிதியின் அண்ணனின் புகைப் படத்தை facebookil கண்டு…அவரை சந்திக்க சென்னை வருகிறார்கள். பழைய நினைவுகளை முற்றிலும் மறந்த நிலையில் இருக்கும் அவளின் அண்ணனுடனான சந்திப்பும்….பின்பு பிரிந்த குடும்பம் ஒன்றாக இணையும் தருணமும்……உணர்வுக் குவியல்.

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வலி…ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது.

நிதியின் அண்ணன்…அவரை காப்பாற்றி வளர்க்கும் குடும்பம்….ஏனோ மனதில் ஒட்டவில்லை. கதையின் பிற்பகுதியில் அந்த கதா பாத்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டதால் இருக்கலாம்….

நிதியை ஒருபோதும் தங்கையாக நினைக்க மாட்டேன் என்று ரஞ்சன் சொல்வதை வெகுவாக ரசித்தேன்…அது தான் எதார்த்தம். 

குடும்ப உறவுகளின் முக்கியத்துவம்……ரஞ்சன் ரதீஷ் வசி…சகோதர பாசம்…புரிந்துணர்வு…..இவர்கள் மூவரும் நிதி மீது கொண்ட அக்கறை….குத்தி குத்தி பேசும் மாமியை கூட….அவரின் நிலையில் இருந்து புரிந்து கொள்ளும் நிதியின் மென்மையான மேன்மையான குணம்…நெதெர்லாந்து பற்றிய குறிப்புகள்…வர்ணனைகள்…..வெகு இயல்பான இலங்கை தமிழ்…..உரையாடல்களில் மெலிதாக இழையோடும் நகைச்சுவை……நிதியின் அண்ணனுக்கு பழைய நினைவுகள் திரும்பாதது….இவையெல்லாம் கதையின் highlights.

அழகாய் எங்க மனதை பறித்தது மட்டுமல்ல…….தேர்ந்த கதைசொல்லி ஆகிடீங்க ரோசி…வாழ்த்துக்கள்.

Advertisements