என்றும் உன் நிழலாக!- பவி


இலங்கை தமிழ் முதலில் follow பண்ண கஷ்டமாக இருந்தாலும், அப்புறம் ரொம்பவே பிடித்து போகிறது.

நிதி – அழகான கதாபாத்திரம் – நாடு கடந்து பெற்றோரை பிரிந்து… கூடவே தன் குடும்பத்தின் பொருளாதார பொறுப்பையும் சிறு வயதில் ஏற்றிருக்கும் ஒரு பெண்ணை கண் முன் நிறுத்துகிறது. ரஞ்சனின் ஆர்வம் புரிந்து ஒதுங்குவதும், வசியிடம் ஒதுங்க நினைத்தும் முடியாமல் காதல் கொள்வதும் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

ரஞ்சன் – முதலில் நிதியின் மீது பரிதாபம்- வயது ஆக ஆக காதல்… அது கை கூடாத போது வேதனை… தன் அண்ணனே தனக்கு துரோகம் செய்து விட்டாரோ என்று கோபம் கொள்வது… பின் நடைமுறை உணர்ந்து தன்னை தேற்றிக் கொள்வது என்று வெகு இயல்பான படைப்பு.

வசீகரன் – பெயரைப் போலவே வசீகரிக்கும் குணம் கொண்டவன். நிதியை மட்டுமல்ல படிப்பவரையும் வசீகரிக்கும் அழகான கதாபாத்திரம். ரஞ்சன் நிதியை விரும்புகிறான் என்று தெரிந்தும் அவள் மேல் காதல் கொண்ட பிறகு குற்ற உணர்வு கொள்வதும்… எது எப்படி இருந்தாலும் நிதியை தன்னால் விட முடியாது என்று உறுதியாக இருப்பதுமாக சிறப்பான கதாபாத்திரம்.

நிதியும் அவளது அண்ணனும் சந்திக்கும் இடம் உணர்வு குவியல்.

எளிமையான ஒரு கதையை, அழகான நடையுடன் எடுத்து சென்று நல்ல கதை கொடுத்ததற்கு நன்றி ரோசிக்கா.

Advertisements