காவ்யா 19

 

அன்பு வாசகர்களே !

பதினெட்டாம் அத்தியாயம் வாசித்திட்டு அடுத்ததைக் கிளிக் பண்ணி வாசித்துவிட்டு அப்படியே போனால் சாமி கண்ணைக் குத்தும் சொல்லிட்டேன் . 

யோசிச்சுப் பாருங்க ..உங்களைப் பற்றி எவ்வளவு யோசித்து அடுத்த அத்தியாயமும் இன்றே போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்திருக்கிறேன் .

இதற்கு உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது உங்கள் மனம் திறந்த கமெண்ட்ஸ்  மட்டுமே!

 இதுவரை மௌனம் காப்பவர்களின் மனதில் கதைபற்றி என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதை அறியக் காத்திருக்கிறேன் 

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசித்து ரசித்து உங்கள் மனதில் தோன்றுவதை சொல்லி என்னையும் மிகவும் ரசிக்க வைக்கும் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள் .

பதில் போடாதவர்களுக்கு நாளை போட்டுவிடுவேன் கோபிக்க வேண்டாம் …சரியா..

CALAMEO 19

GOOGLE DOC 19

 

COMMENTS:  PENMAI 

                           LADY’S WINGS

 

Advertisements

காவ்யா 18

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம் . 

உங்கள் மனதில் அறிந்தே ஆகவேண்டும் என்று பலகேள்விகள் இருக்குமல்லவா ?

முக்கியமாக காவ்யாவின் தங்குமிடம் பற்றி அறியும் ஆவல் இருக்கும்; அதுபற்றி இந்த அத்தியாயத்தில் இல்லாததால் …ஹலோ ..ஹலோ…கொஞ்சம் நின்று நிதானித்து …இந்த எபியை வாசித்துவிட்டு அடுத்த போஸ்டுக்கு வாங்க பார்ப்பம்…

CALAMEO 18

GOOGLE DOC 18

COMMENTS:  PENMAI 

                           LADY’S WINGS

 

 

 

காவ்யா 17

அன்பு வாசகர்களே!

இதோ அடுத்த அத்தியாயம் . இதுவரை மௌனமாக வாசித்துவிட்டு செல்பவர்கள் கமெண்ட்ஸ் சொல்லவில்லையோ ….பிறகு நான் பொறுப்பு கிடையாது சொல்லீட்டன்.

தொடர்ந்து தம் கருத்துக்களை பகிர்ந்து வரும் வாசக நட்புகள் ஒவ்வொருவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.

அதுவும், இக் கதையின் ஆரம்பத்திலிருந்து வரும்  ஒவ்வொரு கமெண்ட்சையும் வாசிக்கையில் ஏதோ ஒரு இடத்தில் நன்றாகவே சிரித்துவிடுவேன் . 

 

 

அதைவிட , என் கதை வாசித்து அதில் வரும் ஒரு முக்கிய பாத்திரத்தை…நீங்கள் திட்டும் அழகு இருக்கே .. அதை வாசிக்கவே அவனை இன்னும் டேமேஜ் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றுது…(கவனியுங்கள் மக்களே! நாயகன் என்று நான் சொல்லவில்லை..ஹா..ஹா..)

<<<<அங்கே காவ்யாவைக் கண்டதும் மகனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவர், “என்னம்மா, இப்போதான் வாறாயா? மாமா வீட்டில் நிற்கப்போகிறாய் என்று நினைத்தேன்.” சொன்னவாறே இறங்கி அருகில் வர, விசுக்கென்று உள்ளே நுழைந்தான் சந்தோஷ்.

  “இவன் உன்னை கண்டுவிட்டா அந்த வேகத்தில் வந்தான்?!” நம்பாத குரலில் கேட்டவரின் பார்வை, அவளின் தளும்பிய விழிகளில் படிந்தது.

   “ஏனம்மா அழுகிறாய்?” அவரும் பதறினார்தான்; கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது அவர் பதற்றம்.

  “வந்ததும் வராததுமாக ஏதோ சொல்லிவிட்டான் போல! இவனை என்ன செய்வது? கொஞ்ச நாட்கள் அமைதியாகத்தானே இருந்தான்; திரும்ப ஆரம்பித்து விட்டானா? பச்…! நீயும் அவன் சொல்வதற்கெல்லாம் அழலாமா காவ்யா? திருப்பி நாலு வார்த்தை சொல்லிவிட்டு போகாமல் கண்ணை கசக்குகிறாயே! நான் சொல்கிறேன், அவன் ஏதாவது கதைத்தால் பயப்படாமல் திருப்பிக் கொடு!” அவளை சமாதானம் செய்யத் தொடங்க, இப்போ அதிர்ந்தது காவ்யா தான்.

  இதைத்தான் ‘காகம் இருக்க, பனம் பழம் விழுந்த கதை!’ என்பார்களோ!

   சற்றுமுன், அவன் பதறியவாறு வந்து நின்றது இவள் மனதின் முன்னணியில் வந்து நின்றது. ‘அவரது பதற்றத்தை எள்ளலாக நினைத்துக் கேலி செய்தது போலல்லவா நடந்து விட்டேன்!’ என்ற நினைவோடு, மெல்லச் சமாளித்தவாறே சாந்தாவைப் பார்த்தாள்.

   “ஐயோ ஆன்ட்டி! அவர் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கண்ணில் எதுவோ விழுந்திட்டுது என்று கண்ணை கசக்கிக்கொண்டு நிற்க, என்னவோ ஏதோ என்று வந்து கேட்டார்; நான் தான் சரியாகப் பதில் சொல்லாமல் முறைத்து விட்டேன்.” என்றவளை, நம்பாது பார்த்தார் சாந்தா.>>>>

தொடர்ந்து வாசிக்க கீழேயுள்ள லிங்கின் உதவியை நாடுங்கள்.

 

CALAMEO 17

GOOGLE DOC 17

கமெண்ட்ஸ் : பெண்மை 

                             லேடீஸ்விங்க்ஸ்

 

காவ்யா 16

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம். வாசித்துவிட்டு சத்தம் போடாது போகாமல் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுவரை  வாசித்து, மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொள்ளும் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் மிக்க மிக்க நன்றிகள் .

CALAMEO  16 

GOOGLE DOC 16

COMMENTS :பெண்மை

                          லேடீஸ்விங்க்ஸ்

 

 

காவ்யா 15

அன்பு வாசகர்களே!

இன்று போனஸ் எபி.

முதல் போட்டது  எட்டுப் பக்கம் என்று யாரும் சொல்லக் கூடாது என்றுதான் இதையும் போடுகிறேன்.

இதுவரை கமெண்ட்ஸ் சொல்லாமல் அமைதியாக வாசித்துவிட்டுப் போகும் வாசகர்களின்  கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .

<<<அடுத்தநாள், விரிவுரை காலை பத்துமணிக்கே ஆரம்பமாகும் என்பதால் அதற்குமுன் அருகிலிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றுவர நினைத்தாள் காவ்யா.

   விடியற்காலை எழுந்து தலைக்குக்குளித்துத் தயாராகி, சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்து கேட்டை திறக்க முயன்றவள், “காவ்யா!” சந்தோஷின் அழைப்பில் சட்டென்று நின்றுவிட்டாள்.

   ‘போன பிறந்தநாள் போலவே இன்றைக்கும் இவரோடு மல்லுக்கட்டி என் நாளையே வீணாக்கப் போகிறேனா?’ மனதில் எழுந்த ஆயாசம் திரும்பி அவனை ஒருபார்வை பார்க்கச் சொன்னது.

   காணும் போதெல்லாம் சீறினாலும் அவளின் பிறந்ததினத்தை மறவாது நினைவில் வைத்திருந்திருந்தான் இவன். நிச்சயம் அவள் கோவிலுக்கு போவாள் எனக் கணித்து, காலையிலெழுந்து காத்திருந்து, சமையலறையில் நிற்கும் தாயறியாது வெளியில் வந்தவன், அவளின் வெட்டும் பார்வையில்  சட்டென்று நிதானித்தான்.

  அடுத்தநொடி இதழ்கடையில் நெளியும் முறுவலோடு, “என்ன மேடம் முறைப்பு பலமாக இருக்கு!” என்றவாறே அணுகி, “ஹாப்பி பர்த்டே!” மலர்வோடு வலக்கரத்தை அவள் புறம் நீட்டினான்.

   அன்றும் முறைத்துக்கொண்டு நின்றாலும் வாழ்த்தி, கரத்தை நீட்டினான் தானே! இவள் தான் அந்த வாழ்த்தையும் ஏற்கவில்லை; அவன் கரத்தையும் பற்ற நினைக்கவில்லை.

  இன்றும், சட்டென்று அவன் வாழ்த்தை ஏற்க முடியவில்லை. சற்றும் எதிர்பாராத வாழ்த்தென்பதால் எழுந்த அதிர்ச்சியாலும் இருக்கலாம்; தன்முன் நீண்ட கரத்தில் பார்வை பதிந்திருக்க அமைதியாக நின்றாள்.

   “காவ்யா” மீண்டும் அவன் அழைப்பு நிமிர்ந்து நோக்கச் செய்தது.

   “இன்றைக்கு உமக்கு பிறந்தநாள் தானே?”

   அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டதை அறிந்து கொண்டவளின் பார்வையில் மெல்லிய குறும்பு ஓடி மறைய, “இல்லையே; இன்றைக்கு எனக்கு பிறந்தநாள் என்று யார் உங்களுக்கு சொன்னது?” என்றவள், அவன் பதிலுக்குக் காத்திராது வெளியேறிவிட்டாள்.>>>>>

மேலும் வாசிக்க …

CALAMEO  15 

GOOGLE DOC  15

 

கமெண்ட்ஸ்:

பெண்மை

லேடீஸ் விங்க்ஸ்

காவ்யா 14

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம் .

<<<‘ராகிங் பற்றி அத்தனையையும் சொன்ன சீலன் இன்னும் என்னென்ன உளறினானோ! அப்பா அம்மா மனம் நோகக் கூடாது என்றுதானே எதையும் சொல்லவில்லை.” நண்பனில் கோபத்தோடு, தாய் உள்ளே வருவதைக்கண்டு விரைந்து மாடி ஏறியவன், அறைக்குள் நுழைந்த வேகத்தில் சீலனுக்கு அழைத்தான்.

   இவன் அழைப்பை எதிர்பார்த்திருந்தவன் போல் சட்டென்று எடுத்தான் அவன்.

   “ஏன்டா இப்படி ஒரு காரியம், அதுவும் என்னிடம் ஒருவார்த்தை சொல்லாது செய்தாய்?” எடுத்த எடுப்பில் சீறினான் சந்தோஷ்.

   “உடனே சந்திக்க வேண்டும் என்ற ஆன்ட்டி இப்படி என்னிடம் கேட்பார் என்று நான் கண்டேனா? அதையும் விட, உன் வீட்டில் காவ்யா இருப்பதை நீ என்னிடம் முதலே சொன்னாய் பார்; கேட்க வந்திட்டான் கேள்வி!” தன்பங்குக்கு சீறினான் சீலன்.

   “அது…வந்து…மச்சான்…சொல்லத்தான் நினைத்தேன்; வேலை பிஸியில் விட்டுட்டேன். முதல், அதொன்றும் அவ்வளவு முக்கியமாக எனக்குத் தெரியவில்லை.” என்று, அவள் இங்கு வந்த விதம் பற்றிக் கூறிச் சமாளிக்க முயன்றான்.

   “ஹ்ம்…அப்போ காவ்யா விடயம் உனக்கு முக்கியம் இல்லை..ஹ்ம்ம்.” ஒருமாதிரி இழுத்தான் சீலன்.

   “டேய் நீ பேச்சை மாற்றாதே! அம்மா கவலைப்படுவார் என்று நான் மறைத்தவற்றை அப்படியே சொல்லி இருக்கிறாயே; உனக்கு கொஞ்சம் சரி அறிவிருக்கா?”

  “உனக்கும் காவ்யாவுக்கும் இடையில் எதுவோ நடந்திருக்கு என்று ஆன்ட்டிக்கு சந்தேகம் சந்தோஷ்; அது உண்மையா? இல்லையே! அப்படியிருக்க, காவ்யா பற்றி ஆன்ட்டி தவறாக நினைத்துவிட்டால் என்றுதான் எல்லாம் சொன்னேன்.”

  “அப்போ, உனக்கு என்னைவிட அவள் அத்தனை முக்கியமா?”>>>>

 

மேலும் வாசிக்க …லிங்க் உதவியை நாடுங்கள்.

CALAMEO  14

GOOGLE DOC  14

கமெண்ட்ஸ் :

பெண்மை 

லேடீஸ் விங்க்ஸ்

 

 

 

காவ்யா 13

  அன்பு வாசகர்களே! 

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன் .

உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலோடு காத்திருக்கிறேன் .

இதுவரை தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் மிக்க மிக்க நன்றிகளும் அன்பும்!

<<<< “என்னடி அபி அப்படிப் பார்க்கிறாய்? ஒருத்திக்கு காய்ச்சலும் தலையிடியும் வரவே கூடாதா?” தன்னையே கூர்மையாகப் பார்க்கும் தோழியிடம் கேலியாகக் கேட்டவள், “முதல் முதல் வந்திருக்கிறாய், டீ குடிக்கிறாயா?” இவள் கேட்டுக்கொண்டிருக்க, “அக்கா டீ; இரண்டு பேருக்கும் இருக்கு!” கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றாள் கவி.

  “பரவாயில்லையடி, வீடும் நான் நினைத்ததை விட அமைதியாகவும் அளவாகவும் இருக்கு; கவி, சுவாதி கூட இருப்பதும் உதவி.” என்று தொடங்கிய அபி, அன்றைய விரிவுரைகள், பல்கலைக் கதைகள் என்று சலசலக்கத் தொடங்கினாள். இப்படியே கதைத்துக் கொண்டிருந்தவள், “சரிடி, நல்லா பொழுது பட்டிட்டுது நான் போயிட்டு வாறன்; மரியாதையாக காலையில் வந்து சேர்.” என்றவாறே விடைபெற்றவளை அனுப்பி விட்டு முகம் கைகால் அலம்பச் சென்றாள் காவ்யா.  

   சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்து கேட்டைத் தாண்ட முயன்ற அபி, சர்ரென்று வந்து கேட்டினுள் புக முயன்ற மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாள்.

   ஹெல்மட் போட்டிருந்தாலும் வந்து நின்றவனைப் பார்த்ததும் அபியின் நெற்றி சுருங்கியது.

  ‘அட! நம்ம சந்து போல இருக்கே!’ யோசனையோடு அவனைத் தொடர்ந்தன அவள் விழிகள்.

   உள்ளே சென்று கராஜில் மோட்டாரை விட்ட சந்தோஷ், மோட்டாரை விட்டிறங்காது சில கணங்கள் அப்படியே இருந்தான்.

  ‘இந்த குட்டிச்சாத்தான் இன்றைக்குத்தான் இங்க வந்திருக்கு போல! இது என் வீடு என்று தெரியும் போது முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே!’ இந்நினைவே அவன் உதடுகளில் சிறுமுறுவலை ஒட்டிச் சென்றது.

   ‘சிலவேளை, ஏற்கனவே அவள் சொல்லியும் இருப்பாள்; ம்ம்…பார்ப்போம் என்ன நடக்குதென்று!’ ஹெல்மட்டை கழட்டி வைத்துவிட்டு கராஜிலிருந்து வெளியில் வந்தவனின் விழிகள் அந்த முறுவலை தம்பக்கம் இழுத்திருந்தன!

   “அட…அபி! எப்படிப்பா இருக்கிறீர்? கண்டு கன நாட்களாச்சே! என்ன எங்க வீட்டுப்பக்கம்! என்னையா பார்க்க வந்தீர்? ஏதேனும் அலுவலா அபி?” என்றவன் விழிகளில் கேலியின் சாரல் எக்கச்சக்கமாக அடித்தது!

   அதில் நனைந்தவளின் முகமோ, கருமையைக் கடன் வாங்கிக் கொண்டது. 

   ‘டீ காவ்யா, என்னாங்கடி இங்க நடக்குது?! என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரியுது? இந்தாள் வீட்டில் வந்திருந்துகொண்டு இத்தனைநாட்கள் என்னிடம் சொல்ல வேண்டும் என்று உனக்குத் தோன்றவே இல்லையா? அதுவும், அந்தாள் வீடு இந்த லேனுக்குள்ள என்று சொல்ல, சுவாரஸ்சியம் இல்லாதவள் போல நடித்தாயா?’ பற்களை நறும்பியவளுக்கு, தோழியில் மிகையாக கோபம் ஏற்பட்டது.

    “அபி, என்னைத்தேடியா வந்தீர் என்று கேட்டேன்; நீர் நிற்கும் நிலையைப் பார்த்தால் என்னை மறந்து போனீர் போலிருக்கே!” என்றவாறே அவளை அணுகினான் சந்தோஷ்.>>>>

தொடர்ந்து வாசிக்க, வழமைபோல லிங்க் உதவி செய்யும் .

CALAMEO   13 

GOOGLE DOC  13

வாசகர்கள் கருத்துக்கள்:

பெண்மை இணையதளம் 

லேடீஸ் விங்க்ஸ் இணையதம் 

நீ என் சொந்தமடி! – ஸ்வப்ணா

  பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஏஞ்சல் அங்கு உள்ள வசதி படைத்த பெற்றோருக்கு செல்ல மகளாக தனி தன் அடையாளத்துடன் இருந்தாலும் தன் வேர் தேடி இந்தியா பயணம் ஆகிறாள் .

  அந்த பயணத்தில் அவள் அறிமுகம் எழில் உடன் ஏற்படுகிறது. எழிலுக்கு அவள் மீது கண்டதும் காதல் வர அதை சொல்லாமல் அவர்களின் பொது நண்பர் மூலம் நட்பு தொடர்கிறான்.

எழில் மூலம் அவள் தான் தேடி வந்த ஒருவரை சந்தித்து அறிமுகம் இல்லாமல் விலகி போகிறாள். இதற்கிடையில் அவள் உருவம் எழில் மிக அறிந்த ஒருவரை ஞாபக படுத்த அவள் வேர் அறிகிறான் எழில்.

அதை அவளிடம் சொல்ல அவள் அதை அறிந்து கொள்கிறாள். எழில் தன் காதல் சொல்ல அது ஒத்து வராது என்றும் ஏற்கனவே அவன் திருமணம் நிச்சயக்க பட்டு இருக்கும் போது இது வேண்டாம் என்றும் கூறி தன் காதல் மறைத்து , பிரான்ஸ் திரும்பி போகிறாள்.

ஆனாலும் அவன் அவள் மனதிலேயே தங்க அவள் சொன்ன காரணம் எல்லாம் சரி செய்து அவள்லின் விட்டு போன உறவுகளுடன் ஒரு நட்பு ஏற்படுத்தி அதை கடந்து அவளுடன் இணைகிறான் எழில் .

நல்ல ஒரு கதை. ஏஞ்சல் மற்றும் அவள் உணர்வுகள் வந்த விதம் அழகாக வந்து இருக்கிறது.

எழிலின் காதலும் அவன் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் நல்லா வந்து இருக்கு.

நல்ல ஒரு கதை காதல் வேகத்தில் பிள்ளை வரை போய் ஆனால் அதில் திடமாக இல்லாமல் இருப்பதால் அவ்வழி வந்த பிள்ளைகளின் நிலைமை என்ன என்ற கேள்வி தாங்கி அதை சார்ந்து வந்த கதை இது .

பெரிய குடும்பம் , குடும்ப உறவுகள், யதார்த்தமான நடை , இயல்பை ஒத்த கதாப்பாத்திரங்கள் செயல்கள் என ஒரு கதை.நான் ஒரு அவுட் லைன் தான் சொல்லி இருக்கிறேன் மொத்தமும் அறிய கதையில் வரும் பலரின் உணர்வுகளை அறிய வாசித்து பாருங்கள் 

நெஞ்சினில் நேச ராகமாய்!- தேனு ராஜ்

காதல் — இரு பெண்களுக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தும் விளைவே கதை. அழகான காதல் யாரையும் பார்க்காது, சற்று சுயநலத்தோடு தான் இருக்கும். ஆனால் அது படுத்தும் பாடுகளை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று…! குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து செல்கிறது கதை…! 

இலங்கை பளையில் உள்ள பெரும் வசதி படைத்த வீட்டின் செல்லப்பெண் மங்கை, அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாம் நிறைந்து, அம்மா சரசு, அண்ணன் ராசன், அண்ணி கோகிலாவுடன் பாசமான கூட்டில் வாழ்பவள்.

அவர்களின் தோப்பில் டிரைவராக வேலை செய்யும் ஆனந்த், படிப்பறிவில்லாதவன், வசதியும் இல்லை… நோயாளி தந்தை, பேராசை பிடித்த தாய், மூன்று தங்கைகள் என வாழ்பவன்.

மங்கை ஆனந்திடம் காதலில் விழ…. அவளின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணமும் நிச்சயிக்க போகும் நேரத்தில், வீட்டைவிட்டு வந்து ஆனந்தை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைக்க… பேராசை கொண்ட அவனின் தாயின் துர்போதனையால், அவனும் மங்கையை சில விஷயங்களில் ஏமாற்ற… மாமியாரின் பேச்சை கேட்டு, அண்ணனிடம் சொத்தில் பங்கும் கேட்கிறாள். அங்கு கிடைப்பது அவமானமே…! ஒருநாள் மாமியார் மற்றும் கணவனின் பேச்சை கேட்டபிறகே, சொத்திற்காக மட்டும் அவளை கல்யாணம் செய்துக் கொண்டான் என்ற கசப்பான உண்மை தெரிந்து, நிரந்தரமாக அவனை பிரிந்து, மீண்டும் அண்ணனின் தயவில் வாழ்கிறாள்.

மங்கையின் மகள் தான் மகிழினி….. சுருக்கமாக மகிழ்… துடுக்கானவள்… எதையும் வெளிப்படையாக பேசும் குணம்… தாயின் மேல் அளவில்லாத பாசம்… 

கனடாவில் வசிக்கும் ராசனின் நண்பர் சரவணனின் மகன் உதயதீபனுக்கு மகிழை கல்யாணம் பேச…. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் இலங்கை வந்தபோது இவளுடன் மோதல்… அந்நினைவில் இவள் மறுக்க… அவனோ இவள்தான் தனக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரிந்ததும் ஓகே சொல்ல.. ஆனால் உதயின் பாட்டி பர்வதமோ அந்த கல்யாணத்தை எதிர்க்கிறார். அதேபோல் மகிழின் பாட்டி சரசுவும் மறுப்பு சொல்ல …

இரண்டு பாட்டிகளின் எதிர்ப்புக்கும் என்ன காரணம்….?

ஒருவழியாக அனைவரையும் சமாளித்து சம்மதிக்க வைத்து கல்யாணமும் நடந்து, உதய் & மகிழ் இருவரின் மோதல் முடிந்து, ஊடல் ஆரம்பித்து கூடலில் முடிகிறது. அவளும் கனடா சென்று அவனின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறாள். அனைவரும் சந்தோஷமாக ஒன்றி வாழ… உதயின் நண்பன் குணா, அவனின் பெரியப்பா குமார் என சிலர் அவளுக்கு அறிமுகமாக, அனைவரும் இவளிடம் பாசத்தை பொழிகின்றனர். 

உதய் அம்மா, அப்பா, இரு அண்ணா, அண்ணி அனைவருமே மகிழிடம் பாசமாக இருந்தாலும், அவ்வப்போது பாட்டி பர்வதம் மகிழை வார்த்தைகளால் வதைக்க…. மனம் நோகும் அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் காதல் கணவன்.

கணவன் உதய் சில விஷயங்களை தன்னிடம் மறைத்ததால், அவனிடம் முறைத்துக்கொள்ளும் மகிழ், அதற்கு நேர்மாறாக பாட்டி பர்வதத்திடம் நெருங்க…, அவரும் இவளை ஏற்றுக்கொண்டு கொண்டாட…

இந்நிலையில் உதய் குடும்பமும், குணா குடும்பமும் ஒன்றாக நயாகரா சென்றுவந்த போட்டோவை மங்கைக்கு அனுப்ப… அதை பார்க்கும் அவர் மயங்கி விழுகிறார்.

அவரின் மயக்கத்துக்கு என்ன காரணம்…?

உதய் மகிழிடம் மறைத்த விஷயம் என்ன…?

உதய் – மகிழ் பிணக்கு மறைந்து மீண்டும் கூடுவார்களா…?

மங்கையின் கணவன், மகிழின் அப்பா என்ன ஆனார்…?

என்றோ பிரிந்த மங்கையும், ஆனந்தும் மீண்டும் சேர்வார்களா…?

என்பதையெல்லாம் அறிந்துக்கொள்ள கதையை படிங்க….

அழகான நேர்த்தியான எழுத்துநடை…. தெளிவான கதையோட்டம்…!

அதைவிட முக்கியம், உறவுகளை சுற்றியே கதை நகர்கிறது.

கதையில் வரும் அனைவருமே மற்றவர்களின் சுக துக்கங்களையும் பகிர்ந்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதலாக வருவது சூப்பர்.

விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதையும் சொல்லியிருக்கும் கதை…!

ரொம்ப நல்லா இருக்கு. இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம். 

மதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்

ஆரம்பிக்கும் போது நான் ஒரு பெண்ணை ஏமாற்றி கல்யாணம் பண்ணி கொடுமை படுத்தும் கதை என்று நினைத்துக் கொண்டே படித்தேன்..

காப்பாற்ற போனவன் கணவன் ஆவான் என்று எதிர் பார்க்கவில்லை..இனிமையான அதிர்ச்சிதான்!

இனி வரும் காலங்களில் இப்படி திருமணங்கள் நிறைய எதிர் பார்க்கலாம்.காலத்தின் மாற்றம்! கார்த்தியின் அக்கா, சித்தி என யாருமே ஒத்துக்க கொள்ளவே இல்லியே??!!

அழகா வாழை பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி எங்களின் மனதை அப்படியே கதையோடு ஒன்ற வச்சுட்டிங்க!! ஒரு உறுத்தும் விதமாவே முடிவு தெரியாதது உங்க திறமை…


நித்தி என்ன ஒரு அருமையான தங்கை!! நம் குடும்பங்களில் இருக்கும் பாசம் …ஒட்டுதலை அழகா பிரதி பலிக்கும் பாத்திரம்!!! அண்ணி அண்ணி என்று சொல்லவும் முடியாமல் அவள் படும் பாடு! ஏஞ்சல்ஸ் பிறந்து அவள் கொஞ்சுவது அழகு!!!


மதுரா கணேசனிடம் மாட்டிக் கொண்டு படும் பாடுகளும் கொடுமைகளும் அப்பப்பா…இந்த காலத்திலும் இப்படி ஆட்கள் இருக்காங்களே! இதே உலகில் கார்த்தி மாதிரி ஆண்களும் இருக்காங்களே!


இன்னும் இந்த சீதனம் நம் ஆட்களை விட்டு வைக்கலியா!!!என் நண்பர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன், இது ஒரு தீராத வியாதி!

உங்க எழுத்துக்களில் நான் அதிகம் ரசிப்பது, ஒரு நிதானம்!!…ஆரவாரமில்லாத பொறுமையான நடை…வேறென்ன சொல்ல….ரசிச்சு படிச்சேன்…