அன்பெனும் பூங்காற்றில்!- அனு அஷோக்.


வெவ்வேறு விதமான குணங்கள் கொண்ட மூன்று பெண்கள்,அவர்களுக்குள் உள்ள தோழமை..அவர்களுக்கு அமைய போகும் வாழ்க்கை துணை, அவர்களுடைய குடும்பங்கள் பற்றிய சுவாரசியமான கதை இது 

ஸ்ரீ,ஜெயராம்: கதை இவர்களின் மோதலில் இருந்து ஆரம்பிக்கிறது தோழியுடன் ஷாப்பிங் மால் போன ஸ்ரீ..தெரியாமல் ராமின் மீது மோதிவிட,ராமும் அவளை திட்டி விடுகிறான்..பிறகு தான் ஸ்ரீ க்குதெரிய வருகிறது ராம் அவளுடைய தோழி மஞ்சுவிற்கு தெரிந்தவன் என்று…ராம் அவர்கள் படிக்கும் கல்லூரிக்கே விரிவுரையாளராக வருகிறான்.மஞ்சுவின் மூலம் அவனுடைய காதல் தோல்வியை பற்றி தெரிந்து கொண்ட ஸ்ரீக்கு ராமின் மேல் ஈர்ப்பு வருகிறது…ராமும் ஸ்ரீயின் அமைதியான குணம்,நடத்தை எல்லாவற்றிலும் கவரப்பட்டு அவள் மேல் காதல் கொள்கிறான்.இறுதியில் பெற்றோரின் சம்மதத்துடன் அவளை கைபிடிக்கிறான்…இருவரும் இறுதி வரை காதலை பகிர்ந்து கொள்ள வில்லை என்றாலும்..இருவருக்குள்ளும் இழையோடிய காதல் அழகு..மூன்று ஜோடிகளில் எனக்கு பிடித்தது..ஸ்ரீ, ஜெயராம் ஜோடி தான்.

மஞ்சு,நரேன்: தோழியர் மூன்று பேரில் வாய்துடுக்கானவள் மஞ்சு, தன் அப்பாவிடமே தைரியமாக வாதிடுபவள்..நரேனும் மஞ்சுவும் சந்திக்கும் காட்சி கொஞ்சம் வித்தியாசமானது..மஞ்சு உடன் படிப்பவன் அவளுக்கு காதல் கடிதம் எழுதி அவள் ரெகார்ட் நோட்டில் வைத்து கொடுத்து விட.அது மஞ்சுவின் அப்பாவின் கண்ணில் பட்டு மஞ்சுவிற்கு நாலு அப்பு கிடைக்கிறது..அதை தடுக்கும் மஞ்சுவின் அண்ணன் சிவாவின் தோழனான நரேன் அவளிடம் மனதை பரி கொடுக்கிறான்..இருவரும் காதலிக்க ஆரம்பித்தாலும் நரேனின் அக்காவிடம் இருந்து இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது..அதனால் இருவருக்குள்ளும் வரும் ஊடல்..பிறகு இருவரின் உண்மையான நேசம் அவர்களை சேர்த்து வைக்கிறது..

மயூ,சத்தியன் : உறவுக்கு காரர்களான மயூவிர்க்கும் சந்தியனுக்கும் சிறு வயதில் இருந்தே அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பு..இருவரின் குடும்பங்களில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக வெளிப்படுத்த படாமல் அவர்களுக்குளே காதலாக வளர்கிறது..அவர்கள் இருவரும் ஒருவரை நினைத்து மற்றொருவர் தவிப்பதை ஆசிரியர் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.ஊர் திருவிழாவில் இருவர் குடும்பமும் பகையை மறந்து உறவு கொண்டாட மயூ சத்தியனுக்கு திருமணம் நிச்சயிக்க படுகிறது..

cmt:

தோழியர்யர்களுடைய ஒற்றுமை,அவர்களுடைய கேலி கிண்டல் ஒருவர் துன்பத்தில் மற்றவர் மடி தாங்குவது..மூன்று பேரையும் காதலிப்பவர்களின் கண்ணியமான நடத்தை என்று கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்..மூன்று பெண்களும் திருமணதிற்கு பிறகும் நட்பை விடாமல் தொடருவது போல் காட்டி இருப்பது மனதிற்கு இதம் தருகிறது.. ஆசிரியருடைய மூன்றாவது கதையும்..அவரருடைய இரண்டு கதைகளை போல நம் மனதில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்து இருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அழகான இலங்கை தமிழில் கதையை படிப்பதற்கு நன்றாக இருந்தது..நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..நான் தான் கொஞ்சம் தாமதமாக படித்தேன்..யாரும் படிக்காமல் இருந்தாள் தவறாமல் படியுங்கள். 

Advertisements