மயிலிறகாய்!- நிதனி பிரபு


அஞ்சலி….பொறுப்பும் குறும்பும் நிறைந்த அழகான பெண்….அவளுக்கு கீழே இரண்டு தங்கைகள்…வெளிநாட்டு மாப்பிள்ளை சுதாகருக்கு நிச்சயிக்கப்படும் அஞ்சலி லண்டன் செல்ல கொழும்பு வருகிறாள்….

அஞ்சலியை பார்த்து மனதை பறிகொடுக்கும் அவளின் மாமா மகனாக தீபன்…..அஞ்சலிக்கு நிச்சயிக்கப்பட்ட சுதாகர் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளும் தீபன் என்ன செய்கிறான்???

மூத்த பெண்ணாக இருந்து, குடும்ப பொறுப்புக்களை உணர்ந்து வாழும் அஞ்சலியின் மனதிலும் தீபன் மீதான காதல் வந்தாலும், அதனை தவிர்க்க நினைக்கும் பெண்ணாக, மனதில் மிக அழகாக பதிகிறாள் அஞ்சலி….

அவளின் அண்ணா என்கிற அழைப்பில் அதிர்ச்சியடையும் தீபன்…..ஹாஹா…அவனின் கோபம், அவளுடனான செல்ல சண்டைகள் அனைத்தும் மிக மிக அழகு….

சுதாகர்…..சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் வெளிநாட்டு வாசத்தாலும் பாதை மாறிப்போகும் யதார்த்த தமிழ்மகன்…..இவனை போன்றவர்கள் தவறினை இன்றுவரை செய்தாலும்….குற்றத்தை அவன் மீது மட்டுமே சுமத்த முடியாமல் போகிறது….காரணம்????

இலங்கையனாய் பிறந்து, தாயகத்தில் வாழமுடியாத நிலையில், வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற வெறியில் வெளிநாட்டில் கால் பதித்து, முற்றிலும் வேறான கலாச்சாரத்தில் தன்னையே அறியாது தன்னையே தொலைக்கும் ஒரு இலங்கை குடிமகன்….

அதேபோல இவனை போன்ற ஒரு சிலரால் வெளிநாடுகளில் வாழும் அனைவரையுமே சந்தேகக்கண்ணோடு பார்க்கவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டிருக்கும் நம் நிலையும் வேதனைக்கு உரியதே…..இதை மிக அழகாக தெளிவாக ஆனால் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் ரோசி அக்கா…..எனக்கு அது மிகவும் பிடித்த விடயம்….

தீபன் & அஞ்சலி மனதில் இருவர் மீதும் காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்…..தயங்கும் இருவரின் காதலும் இணைகிறதா…? இதுதான் கதைக்கான கேள்வி….அதை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள் நட்புக்களே….

இலங்கை தமிழில், இயல்பான நடையில் அழகிய காதலை சுமந்து மிதமாக நம் மனதை அள்ளிச்செல்கிறது  கதை….

உறவுகள் மட்டும் அல்ல இந்த கதை கூட மனதில் மிக அழகான இதத்தை கொடுத்திருக்கிறது!!

இந்த ஜோடியோடு அதிரடி ஜோடி ஒன்றும் இணைகிறது கதையில்…..படித்து தெரிந்துகொள்ளுங்கள்…..

ரோசி அக்கா, மிக மிக அழகா இருக்கு உங்க கதை…எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. ஒரே ஒரு குறை…கொஞ்சம் பெருசா தாங்களேன்…..அடுத்த கதை இதைவிட பெரிதாக இருக்கவேண்டும்….சரிதானா…

கிளிநொச்சி….என் பிறந்த ஊர்…..மிக்க நன்றி அந்த இடத்தை எடுத்ததுக்கு….கதையிலாவது நான் பிறந்த ஊர் பற்றி தெரிந்துகொள்கிறேன்…

Advertisements