மயிலிறகாய்! – உமா மனோஜ்

மென்மையான அழகான காதல் காவியம், அதுவும் கொஞ்சும் தமிழில் படிக்க வேண்டுமா??

கவிதை நடையில் ஒரு கதை, அதுவே ரோசி எழுதிய மயிலிறகாய்.. 
கதை இன்னும் கொஞ்சம் நீண்டு இருக்கலாம்.

நல்ல அனுப்ப முதிர்ச்சி எழுத்தில் தெரியுது,    

பாராட்டுகள் ரோசி

ஹீரோ தீபன் செம ஸ்மார்ட்… தீபன் நெஞ்சில் காதல் லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக இருக்கு ரொமான்ஸ்…
அஞ்சலி..பார்கத்தான் சொப்ட்..நல்ல பேரு காளி..என்னமா பேசுறா வெடுக்குனு??பட் பட பட்டாசு…

ஹ ஹா.. ரோஹினிக்கு அரவிந்தசாமி வேணுமா??நல்ல வாய்…
வெளிநாட்டில் வாழும் இளைஞனுக்கு நல்ல உதாரணம் சுதாகரன்..

அழகான குடும்ப சுழ்நிலையில் காதல் கதை அருமை..

அஞ்சலி மற்றும் தீபனின் பெற்றோர்,ரவி,ஜீவா,நிரஞ்சன் எல்லோருமே கதைக்கு தகுந்த மனதில் நிற்கும் பாத்திரங்கள்…

எனக்கு மிகவும் பிடித்தது கொஞ்சும் இலங்கை தமிழ்,

 ரசித்து படித்தேன்…

நீங்கள் பொருள் சொல்லவில்லை என்றாலும் கதைக்கு தகுந்தார் போல்  

அர்த்தம் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மொத்தத்தில் மயிலிறகாய் மனதுக்கு இனிமையை ரம்மியமாய் இதமாய் இருக்கிறது..

Advertisements