நீயில்லாது வாழ்வேதடி!- வெண்ணிலா சந்திரா

அழகான இலங்கை தமிழில் கதை படிக்க வேண்டுமா……??

அதற்க்கு நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது ரோசி அவர்களின் “நீயில்லாது வாழ்வேதடி!”

விளையாட்டு தனமும், பாசமும் அதிகமாக கொண்ட சிந்து….

சின்ன வயதில் தாய் தந்தையை இழந்த அவளை, சித்தி லக்ஷ்மி நல்ல படிப்பை கொடுத்து, நல்ல திருமண வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கிறார்…..

ரகு….. ஏற்கனவே ஒரு திருமணத்தால், முதல் மனைவி தன் காதலனுடன் சென்றுவிட, மனம் வெறுத்து இருக்க, அன்னைக்காக சிந்துவை திருமணம் செய்துக்கொள்ள, அவனை தன் அன்பால் தன் கூட்டிற்குலிருந்து வெளிக் கொண்டு வருகிறாள் சிந்து…

இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதலுடன் வாழ்க்கை பயணிக்கிறது….

அந்த சமயம் ரகுவின் தம்பி ரமேஷ்ற்க்கும், ரகுவின் முதல் மனைவியின் தங்கையுமான இந்துவுக்கும் காதல் மலர, ஏற்கனவே மனவேறுபாட்டிலிருந்த இருக் குடும்பமும் தங்கள் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்த இருவரும் சிந்துவின் உதவியை நாடுகின்றனர்.

சிந்து இவர்கள் காதலை புரிந்துக் கொண்டு கணவனுடன் பேச, இதனால் ரகுவிற்கும் சிந்துவிற்கும் அவர்கள் உறவில் விரிசல் ஏற்படுகிறது…..

தனது தம்பிக்காக பேசும் சிந்துவை ரகு புரிந்துக் கொள்வானா?

கடைசியில் தம்பியின் காதலை ரகுவும் அவன் குடும்பமும் ஏற்கின்றதா? இதை நீங்கள் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்….

ரோசியின் தமிழ் எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கிறது,…… கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டையை நாள் கணக்கில் நீட்டிக்காமல், உடனுக்குடன் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வது மிகவும் அழகு…..

இவை அனைத்தையும் விட தன்னை ரகு அடித்த ஒரு அடிக்கு சிந்து அவன் முதுகில் விலாசுவது அருமையிலும் அருமை…..

ரோசி அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்…. அடுத்த உங்கள் கதையை பெரியதாக கொடுக்க வேண்டும் என்பது வாசகர் விருப்பம்……

Advertisements