காவ்யா 9

அன்பு வாசகர்களே!

இதோ அடுத்த அத்தியாயம்.

உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலோடு காத்திருக்கிறேன் .

<<<<  தந்தையை தன் சைக்கிளின் பின்னால் ஏற்ற முயன்றவளை செல்லமாக முறைத்தார் மூர்த்தி.

   “ஏம்மா, அப்பாவுக்கு உன்னை வைத்து சைக்கிள் மிதிக்க கஷ்டமென்று நினைத்து விட்டாயா? தா, நான் ஓடுகிறேன்; நீ பின்னால் ஏறு!”

  “இல்ல இல்ல; வீட்டில் என்றால் எங்க சைக்கிளின் பின்னாலிருந்து வரும் சந்தர்ப்பம் இல்லையப்பா? அதனால் நானே ஓடுறன்; பயப்படாமல் ஏறுங்க.” ஓடுவதற்கு ஏதுவாக கால்களை போட்டபடி பிடிவாதமாகச் சொன்ன மகளை, பாசம் ததும்பும் பார்வையால் வருடினார் மூர்த்தி.

  “ஹ்ம்…உன் ஆசையை ஏன் கெடுப்பான்!” என்றவாறே ஏறியமர்ந்தவர், “பார்த்தும்மா, அப்பா பாவம்டா; அங்க இங்க விழுத்தி உடைத்துப் போடாதே சொல்லீட்டன்.” என்றவர், ஒரு காலை நிலத்தில் இலேசாக ஊன்றியவாறே தான் அமர்ந்திருந்தார்.

   “என்னப்பா நீங்க, பயப்படாமல் வடிவா இருங்க.” திரும்பிப்பார்த்துச் சொன்னவாறே இறுக்கி மிதித்து ஓடத் தொடங்கியவள், அருகிலிருந்த ஒழுங்கைக்குள்ளிருந்து சர்ரெனத் திரும்பிய மோட்டார் சைக்கிளில் மோதப்பார்த்துத் தடுமாறி இறங்கி நின்றாள்.

   மகள் தடுமாறவே, சட்டென்று குதித்துவிட்டார் மூர்த்தி.

   “ஏமலாந்திக் கொண்டு ராங் சைடால வந்து பாயுறான் எருமை!” சத்தமாகச் சொன்னவாறே திரும்பிய காவ்யா, அது சந்தோஷின் மோட்டார் என்பதையுணர்ந்ததும், “ஏறுங்கப்பா, நாங்க போவோம்; கெதியா ஏறுங்க.” அவசரப்பட்டாள்.

   ‘திரும்புகிறானே; நான் சொன்னது கேட்டிருக்குமோ! அப்பாவுக்கு முன்னால் எதையாவது சொல்லி, பிரச்சனை வளர்க்கப் போகிறானோ!?’ மகளின் மன அலறலையோ, அங்கிருந்து சென்றுவிட எண்ணும் அவசரத்தையோ  செவிமடுக்கும் ஆர்வமின்றி, தம்மை நோக்கி வருபவனைப் பார்த்துவிட்டு மகளிடம் திரும்பினார் மூர்த்தி.

   “நீ விடு, நான் ஓட்டுகிறேன். பார், இன்னும் கொஞ்சத்தில் மோதியிருப்பாய். அவன் பிழையாக வந்தால் நீ பார்த்துப் போகக் கூடாதா? அடிபட்டிருந்தால் உனக்குத்தான் சேதம் அதிகமாக இருந்திருக்கும்மா.”  மகளிடமிருந்து சைக்கிளை வாங்க முயன்றவர், சர்ரென்று அருகில் வந்து நின்ற மோட்டாரில் இருந்தவனைக் கேள்வியாகப் பார்த்தார்.>>>>

இவ்வத்தியாயத்தை தொடர்ந்து வாசிக்க கீழுள்ள லிங்கின் உதவியை நாடுங்கள் .

CALAMEO 9

GOOGLE DOC 9

வாசகர்கள் கருத்துக்கள்:

பெண்மை இணையதளம் 

லேடீஸ் விங்க்ஸ் இணையதம் 

Advertisements

அன்பெனும் பூங்காற்றில்! – தேனு ராஜ்

ஸ்ரீ, மஞ்சு, மயூரி மூவரும் தோழிகள்… இதில் மஞ்சு கலகலப்பான பேர்வழி…  துடுக்குத்தனம் ஜாஸ்தி.. அதே நேரம் பொறுப்பானவளும் கூட. ஸ்ரீ அமைதியானவள்…

ஜெயராம் – மேல்படிப்புக்காக இந்தியா சென்றுவிட்டு திரும்பி இருப்பவன்.., தாய்க்கு வேண்டியவற்றை  வாங்க வேண்டி.. கடைக்கு சென்றபோது அவனுக்கும் ஸ்ரீக்கும் மோதல்..

மஞ்சுவின் அண்ணன் சிவாவின் நண்பன் நரேன்… பெற்றோர் இல்லாமல் படித்து முன்னேறி வேலை பார்ப்பவர்.. அவருக்கு மஞ்சுவின் மேல் காதல் வர…  பின் என்ன இருவரும் காதல் பறவைகளாக மாறினார்.

மயூரியின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ராகவனின் தங்கை மகனான சத்தியன்… மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் பார்த்து..பழகி.. விளையாடி  களித்த சிறுவயது நியாபகத்துடனேயே இவள் அங்கு இருக்க…

சத்தியன் மாமா வீட்டுடன் குடும்ப பிரச்சனை ஆகி விட… இனிமேல் இங்கு வரவே முடியாது என்ற  சூழ்நிலையில் அவன் அங்கிருந்து செல்லும்போது சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளை நம்பி மயூவும்….  இவள் நினைவுகளை மட்டுமே எடுத்து சென்ற அவனும் சொல்லாத காதலில் திளைத்து இருக்க…

தோழிகள் மூவரும் பல்கலையில் சேர… அங்கே பாடம்  சொல்லிக்கொடுக்க வருபவன் ராம்.. ஏற்கனவே மோதலில் ஆரம்பித்த ஸ்ரீ – ராம் அறிமுகம் இங்கே அப்படியே தொடருமா…..??

ஏற்கனவே காதல் தோல்வியில் துவண்டு … அதிலிருந்து மீண்டு வந்து … பொறுப்பான பணியிலும் சேர்ந்தவன்… பெண்களிடம மட்டும் கொஞ்சம் ஒதுக்கம் காமிப்பான்… இவனும் ஸ்ரீயும் சேருவார்களா…??

நரேனின் அக்காவுக்கு அவனை தன் இஷ்டப்படி தான் பார்க்கும் பெண்ணுக்கு கட்ட ஆசை… ஆனா நரேனோ மஞ்சுவின் மேல் உள்ள காதலால் அதை மறுக்க….  அவரது கோபம் தன் தம்பியை விட்டு மஞ்சுவின் மேல் திரும்பியது….

பெண்களை கண்டால் ஒதுங்கி போகும் ராமின் மனம் மாறுமா…??

தன் மனதில் ராமின் மேல் தோன்றிய காதலை கூட உணராத ஸ்ரீ…, அதை எப்போது உணருவாள்…??

நரேனின் அக்கா மஞ்சுவை ஏற்றுக்கொள்வாரா … ??

அக்கா செய்த கலாட்டாவால் நரேனை விட்டு பிரிந்து போன மஞ்சு … அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டாளா…??

சத்தியன் & மயூரியின் காதல் அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள பட்டதா…??

இப்படி ராம் – ஸ்ரீ, நரேன் – மஞ்சு, சத்தியன் – மயூரி மூன்று 
ஜோடிகளின் காதலும் நிறைவேறியதா…??

அழகான இலங்கை தமிழில் கண்ணை கவரும் ஒரு குடும்ப கதை… படிக்க விரும்புவர்கள் படிக்கலாம்..!! 

அன்பெனும் பூங்காற்றில்! -priyasarangapani

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.
குறள்
781-

கதை என்ற கற்பனை சாரலுடன் பயணிக்க வைக்க இரண்டு வழிகளை தேர்ந்தெடுக்கலாம்…ஒன்று நடைமுறை வாழ்வில் ஒவ்வாத அதீத கற்பனை எழுத்துக்கள் மூலம் படிப்பவர்களை வேறு உலகிற்கு அழைத்து செல்லலாம் இல்லை என்றால் சமகால வாழ்வில் இருக்கும் சராசரி மனிதர்களிடையே நடக்கும் சம்பவங்களை தொகுத்து தன் எழுத்து மூலம் ஆளுமையை நிலைநாட்டலாம்….இதில் ரோசி கையாண்டது இரெண்டாவது…..

சில நேரங்களில் முதல் முறை சந்திக்கும் போது முட்டிக்கொள்பவர்கள் பின்னால் டூயட் பாட வாய்ப்புண்டு…அதே தான் ராம் & ஸ்ரீ வாழ்வில்…….தெரியாமல் மோதிகொண்டு பிறகு காதலித்து கல்யாணம் முடித்த ஜோடி…….

வாயாடிகளை அனைவருக்கும் பிடிக்காது என்று சொல்லமுடியாது…….அந்த துடுக்கு தனமே மற்றவர்களை தன்பால் ஈர்க்கும்…..அண்ணனின் நண்பன் தன் மேல் காதல் வயப்பட்டதை அறிந்து மஞ்சுவும் நரேனை காதலிக்க…இவர்கள் சேர இருக்கும் ஒரே தடையையும் தகர்க்கிறான்……

சிறு வயதில் இருந்தே தன்னுடன் விளையாடும் மயூரியை சத்தியனுக்கு பிடித்து போக…….வளர்ந்த பிறகு பெரியவர்களிடையே நடந்த சண்டையால் கொஞ்ச காலம் விலக வேண்டி…..பிறகு பெற்றவர்களாகவே சேர்த்து வைக்கப்பட்ட ஜோடி…..

comment:

சின்ன கதை என்பதால் ஒரு அவுட்லைன் சொல்லி இருக்கேன்……….படித்து நீங்களே மீதி கதையை தெரிந்து கொள்ளுங்கள்……..

மூன்று தோழிகளின் அடாவடி பேச்சில் அவர்கள் வாழும் முறைகளின் தொகுப்பு…….

 

அன்பெனும் பூங்காற்றில்!- அனு அஷோக்.


வெவ்வேறு விதமான குணங்கள் கொண்ட மூன்று பெண்கள்,அவர்களுக்குள் உள்ள தோழமை..அவர்களுக்கு அமைய போகும் வாழ்க்கை துணை, அவர்களுடைய குடும்பங்கள் பற்றிய சுவாரசியமான கதை இது 

ஸ்ரீ,ஜெயராம்: கதை இவர்களின் மோதலில் இருந்து ஆரம்பிக்கிறது தோழியுடன் ஷாப்பிங் மால் போன ஸ்ரீ..தெரியாமல் ராமின் மீது மோதிவிட,ராமும் அவளை திட்டி விடுகிறான்..பிறகு தான் ஸ்ரீ க்குதெரிய வருகிறது ராம் அவளுடைய தோழி மஞ்சுவிற்கு தெரிந்தவன் என்று…ராம் அவர்கள் படிக்கும் கல்லூரிக்கே விரிவுரையாளராக வருகிறான்.மஞ்சுவின் மூலம் அவனுடைய காதல் தோல்வியை பற்றி தெரிந்து கொண்ட ஸ்ரீக்கு ராமின் மேல் ஈர்ப்பு வருகிறது…ராமும் ஸ்ரீயின் அமைதியான குணம்,நடத்தை எல்லாவற்றிலும் கவரப்பட்டு அவள் மேல் காதல் கொள்கிறான்.இறுதியில் பெற்றோரின் சம்மதத்துடன் அவளை கைபிடிக்கிறான்…இருவரும் இறுதி வரை காதலை பகிர்ந்து கொள்ள வில்லை என்றாலும்..இருவருக்குள்ளும் இழையோடிய காதல் அழகு..மூன்று ஜோடிகளில் எனக்கு பிடித்தது..ஸ்ரீ, ஜெயராம் ஜோடி தான்.

மஞ்சு,நரேன்: தோழியர் மூன்று பேரில் வாய்துடுக்கானவள் மஞ்சு, தன் அப்பாவிடமே தைரியமாக வாதிடுபவள்..நரேனும் மஞ்சுவும் சந்திக்கும் காட்சி கொஞ்சம் வித்தியாசமானது..மஞ்சு உடன் படிப்பவன் அவளுக்கு காதல் கடிதம் எழுதி அவள் ரெகார்ட் நோட்டில் வைத்து கொடுத்து விட.அது மஞ்சுவின் அப்பாவின் கண்ணில் பட்டு மஞ்சுவிற்கு நாலு அப்பு கிடைக்கிறது..அதை தடுக்கும் மஞ்சுவின் அண்ணன் சிவாவின் தோழனான நரேன் அவளிடம் மனதை பரி கொடுக்கிறான்..இருவரும் காதலிக்க ஆரம்பித்தாலும் நரேனின் அக்காவிடம் இருந்து இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது..அதனால் இருவருக்குள்ளும் வரும் ஊடல்..பிறகு இருவரின் உண்மையான நேசம் அவர்களை சேர்த்து வைக்கிறது..

மயூ,சத்தியன் : உறவுக்கு காரர்களான மயூவிர்க்கும் சந்தியனுக்கும் சிறு வயதில் இருந்தே அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பு..இருவரின் குடும்பங்களில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக வெளிப்படுத்த படாமல் அவர்களுக்குளே காதலாக வளர்கிறது..அவர்கள் இருவரும் ஒருவரை நினைத்து மற்றொருவர் தவிப்பதை ஆசிரியர் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.ஊர் திருவிழாவில் இருவர் குடும்பமும் பகையை மறந்து உறவு கொண்டாட மயூ சத்தியனுக்கு திருமணம் நிச்சயிக்க படுகிறது..

cmt:

தோழியர்யர்களுடைய ஒற்றுமை,அவர்களுடைய கேலி கிண்டல் ஒருவர் துன்பத்தில் மற்றவர் மடி தாங்குவது..மூன்று பேரையும் காதலிப்பவர்களின் கண்ணியமான நடத்தை என்று கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்..மூன்று பெண்களும் திருமணதிற்கு பிறகும் நட்பை விடாமல் தொடருவது போல் காட்டி இருப்பது மனதிற்கு இதம் தருகிறது.. ஆசிரியருடைய மூன்றாவது கதையும்..அவரருடைய இரண்டு கதைகளை போல நம் மனதில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்து இருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அழகான இலங்கை தமிழில் கதையை படிப்பதற்கு நன்றாக இருந்தது..நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..நான் தான் கொஞ்சம் தாமதமாக படித்தேன்..யாரும் படிக்காமல் இருந்தாள் தவறாமல் படியுங்கள். 

காவ்யா 8

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம் . 

<<<<

ஒருநாள் மாலை, அவித்த சோளன்களை வாங்கிச் சாப்பிட்டவாறே, இவள் தம்பியின் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருக்க, தங்கை தன் சைக்கிளில் வர, மூவரும் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

   அப்போ, இவர்களுக்கு எதிரில் தனது நண்பர்களோடு வந்து கொண்டிருந்தான் வினோத்.

   “அக்கா அந்த வழிசல் கேஸ் வருகுது; இந்த பாண் மூஞ்சிக்கு இருக்கிற நினைப்புக்கு யாரிடமாவது வாங்குவான் பார்த்துக்கொண்டே இருங்க.” தங்கை சொன்னதும் தம்பியின் முதுகுப்புறத்தால் எட்டிப் பார்த்தாள் காவ்யா.

  இதை எதிரில் வந்தவனின் விழிகள் கவனிக்கத் தவறவில்லை. தூரத்தில் இவர்களைக் கண்ட வினோத் அமைதியாகப் போகும் எண்ணத்தில் தான் வந்தான். ஆனால், காவ்யாவின் தங்கை எதையோ சொல்லிவிட்டு ஏளனமாகச் சிரிக்க, அவள் தம்பியின் முகத்திலும் ஒரு அசட்டை முறுவல் வந்துபோக அவனுள் சுறுசுறுவென்று எரிந்தது.

   தான் விரும்பியவள் தன்னை ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்பதே பெருத்த அவமானம் அல்லவா? அப்படியிருக்க, இப்படி, காணும் இடங்களில் அவளின் தம்பி, தங்கைகளின் கேலியை சந்திக்க நேர்ந்தால், அதைப் பொறுத்துக்கொள்ள அவன் என்ன கேனயனா?

   மனம் கொந்தளிக்க அவர்களை நெருங்கினான்.

   தங்கையின் பேச்சில் எட்டிப்பார்த்த காவ்யாவின் விழிகளில் வினோத்தின் கோப முகம் பதியாமலில்லை. தொடர்ந்து எதையோ சொல்ல முயன்ற தங்கையை கண்டிப்போடு பார்த்தாள்.

   “இதென்ன கதை ஓவியா? இப்படிக் கதைக்காதே என்று எத்தனையோ தடவைகள் சொல்லியிருக்கிறன். தேவையில்லாத பிரச்சனைகளை வளர்த்துக் கொள்வானேன். பார், இப்போ என்ன முறை முறைக்கிறான்.”

  “இவர் பெரிய ஆள் என்று பயப்படுறீங்கக்கா; உங்களை ராக்ங் பண்ண நினைத்தவர் தானே!” தன் பங்குக்கு முறைத்தான் தம்பி தரன்.

  இம்முறை, பொறுமையாக அளவளாவ நேரம் கிடைத்ததில் பேச்சுவாக்கில் கம்பஸில் நடந்த ராகிங் கதைகளை சொல்லியிருந்தாள் இவள். அது, இப்படி முட்டிக்கொள்ள வழி செய்யும் என்று கண்டாளா என்ன?

  இவள் தம்பியை கண்டிக்க எண்ணும் போதே இவர்களை நெருங்கியவனை, இவள் தம்பியோ நன்றாக சினந்து வைத்தான்.

   இது போதாதா வினோத்திற்கு!

   “இப்போ ஏன் தரன் இப்படி முறைக்கிறாய்?” என்றவாறே அவன் சைக்கிளைத் திருப்ப, சைக்கிளை ஓரமாக நிறுத்தி, இறங்கி நின்று நேருக்கு நேராகவே தெளிவாக முறைத்தான் தரன்.>>>>>>>

 

CALAMEO 8

GOOGLE DOC 8

வாசகர்கள் கருத்துக்கள்:

பெண்மை இணையதளம் 

லேடீஸ் விங்க்ஸ் இணையதம் 

 

 

காவ்யா 7

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம் .

எட்டுப் பக்கம் , குட்டி எபி , அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் வாசிக்கையில்  ‘வருவாள் ‘ இதெல்லாம் என்னது ? என்று என்னைத் திட்டுகிறீர்களா …

அதெல்லாம் சின்னப்பிள்ளைகள் வேலை …ஸோ வேண்டாம் .

இதுவரை பதிந்த ஆறு அத்தியாயங்களுக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள் .  

நன்றி மட்டும் இல்லை, இம்முறை போனஸ் எபி கிடைக்கும் .

அடுத்த அத்தியாயமும் இன்றே பதிந்து விடுகிறேன் . வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

<<<<

இவன் பார்வை அவள் காலில் இருக்க, அவளோ, விறைப்போடு அவன் முகத்தில் பதிந்த பார்வையை விலக்காது நெருங்கினாள்.

   இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறே வந்தாள் அபி.

   நடந்தது அனைத்தையும் அறிந்திருந்த சீலனின் பார்வையும் நண்பனிலும் காவ்யாவிலும் மாறி மாறிப் பதிந்தது விலகியது.

   எதையாவது கேட்பான், ஸாரி சொல்வான் என்கின்ற காவ்யாவின் எதிர்பார்ப்பு அங்கு பொய்யாக, இவர்களைக் கடந்து சென்றார்கள் ஆண்கள் இருவரும்.

   சீலனின் முறுவலுக்கு பதில் முறுவல் செய்தவாறே வந்த அபி காவ்யாவை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள்.

   “டி காவ்யா என்னாச்சு? உன் ஆள் காலையே கவலையாகப் பார்த்துக்கொண்டு போறார்; என்ன மேடம் நடக்குது? உனக்கு அடிபட்டதில் அவருக்கு வலிக்குது போல இருக்கே! எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்குதா?

   சந்துவுக்கு உன்காலில் என்ன காயம் என்று கேட்க விருப்பம் தான்; ஆனாலும் வரட்டுக் கௌரவம்; நீயும்தான் கேட்பார் என்று எதிர்பார்த்தாய் போல!” கேலியாக ஆரம்பித்தாள்.

    “பச்! சும்மா வாடி.” சிடுசிடுத்தவாறே, நூலகம் செல்ல வேண்டி இருக்கவே சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கே சென்றார்கள்.

   “என்னவோடி காவ்யா, உனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி சரியாக் கோபம் வருது செல்லம்; அது, உடம்புக்கு நல்லதில்லை; குறைத்துக்கொள்.” கேலி முறுவலோடு சீண்டிக்கொண்டே வந்தாள் அபி.

   தோழிக்கு ஒருமுறைப்பைக் கொடுத்தவள் ஏனோ வாய் திறக்கவில்லை.

   ‘நடந்தது தெரிந்தால் நீ இப்போ என்னடி சொல்வாய்?’ அவள் மனம் தான் முணுமுணுத்தது.

   ‘அந்தாள் ஒன்றும் திடீர் அக்கறையில் என் காலை பார்க்கவில்லை. முறிந்து மூலையில் கிடக்காது கட்டுப் போட்டுக்கொண்டு வந்து நிற்கிறாளே என்ற ஆதங்கப் பார்வை! அட, இன்னும் நாலு சாடிகளை அவள் மீது எத்தி இருக்கலாமே என்கின்ற ஆற்றாமைப் பார்வை!’ அவள் நெஞ்சம் முணுமுணுத்துக் கொண்டது.

   ‘இத்தனை பட்ட பிறகும், இந்தாள் எல்லாம் ஒரு மனித ஜென்மமென்று, கொஞ்சம் சரி மனசாட்சி இருக்கும் என்றும் எதிர்பார்த்தது என் பிழை!’ அவன் தன் தவறுணர்ந்து ஸாரி கேட்பான் என்ற எண்ணம் வந்த மனதை தானே கடிந்து கொண்டாள்.

    இப்படியே நூலகத்துள் நுழைந்த தோழிகள் ஆளுக்கொரு பக்கமாகச் சென்று தமக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்த வேளை,   குனிந்து கீழ்த்தட்டில் புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தவள், “காவ்யா!” என்ற அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.>>>>>

CALAMEO 7

GOOGLE DOC 7

வாசகர்கள் கருத்துக்கள்:

பெண்மை இணையதளம் 

லேடீஸ் விங்க்ஸ் இணையதம் 

காவ்யா 6

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த அத்தியாயம் .

<<<<< அன்று சனிக்கிழமை!

   ரதினியின் தந்தை வழமைபோல நகைக்கடைக்குச் சென்றிருந்தார்.

   ‘இருவருக்கும் மதிய உணவு, சின்னச்சமையல்; பதினொன்றுக்கு ஆரம்பித்தாலே மாமா வரும் போது சுடச்சுட சாப்பாடிருக்கும்.’ மனதுள் கணக்கிட்ட காவ்யா, ‘சமையலுக்கு முதல் தோட்டத்தை துப்பரவு செய்துவிட்டு தலைக்கு முழுகுவோம்.’ என முடிவெடுத்தவள், தலைக்கு முழுக ஏதுவாக எண்ணையை வைத்து உச்சியில் கொண்டை இட்டுக்கொண்டு முன்புறத்தோட்டத்தைத் துப்புரவு செய்யத் தொடங்கினாள்.

   செம்மண் தோட்டத்தில் செழித்து வளர்ந்திருந்த ரோஜா செடிகளும் அதை அலங்கரித்திருந்த வண்ண வண்ண ரோஜா மலர்க்களும் தோட்டத்தின் ஒருபுறத்தை அசரடிக்க, மதிலோரமாக நிமிர்ந்து நின்ற அழகிய பலவர்ணக் குரோட்டன்கள் வேறு ஒருவித அழகை அள்ளி வழங்கியது.

   வெளிவாயிலில் இருந்து வீட்டு வாயில் வரையிலான சீமெந்து பாதை,  இருமருங்கிலும் சிறுசிறு சாடிகளுள் அடங்கிய மினி ரோஸ் செடிகளால் அலங்கரித்து நின்றன.

   வீட்டில் வலப்புறமாக, பூத்துக்குலுங்கிய சிறு மல்லிகைப் பந்தலிலிருந்து கசிந்த நறுமணம், மற்றைய மலர்களின் சுகந்தத்தோடு கலந்து நாசியைத் தாக்கி மயக்கின.

   திரும்பிய புறமெங்கிலும் விழிகளுக்குக் குளிர்ச்சியாக இருந்த தோட்டமே இவள் இங்கு வந்த பின், அவளின் பிரதான பொழுதுபோக்கிடமாக மாறியிருந்தது. நீர் ஊற்றுவது, துப்புரவு செய்வது, அங்கே இங்கே சாடிகளை மாற்றி மாற்றி வைப்பதென ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பாள் இவள். இப்படி இவள் வெவ்வேறு விதங்களில் தோட்டத்தை அழகுபடுத்தவே, ஆரம்பத்தில் முணுமுணுத்த ரதினியின் தாயும் அதுவும் அழகாக இருக்கவே அமைதி அடைந்துவிட்டார்.

   இன்றும் அப்படியே துப்புரவு செய்து கூட்டி விட்டு, நீர் விட்டுக் கொண்டிருந்தவள் வாயிலில் வந்து நின்ற மோட்டார் சைக்கிளின் சத்தத்தில் யோசனையாக எட்டிப் பார்த்தாள். அதற்கிடையில், வாயிலைத் திறந்து கொண்டு மின்னலாக உள்ளே நுழைந்திருந்தான் சந்தோஷ்!

   அவன் முகம் பூசியிருந்த கடுமையில் இவள் உள்ளம் நடுக்கமடைந்தது.

   ‘இங்கே ஏன் வந்திருக்கிறார்? அதுவும் இத்தனை கோபத்தோடு!’ மனதின் எண்ணத்தை பதற்றத்தோடு உணர்ந்த கரம், கையிலிருந்த தண்ணீர்க் குழாயின் பிடிப்பை நழுவ விட்டது.>>>>

இவ்வத்தியாயத்தின்  நடுவில் வரும் பகுதி மேலேயுள்ளது . அப்போ ஆரம்பமும் முடிவும் ….. அறிந்து கொள்ள லிங்கின் உதவியை நாடுங்கள்.

CALAMEO 6

GOOGLE DOC 6

வாசகர்கள் கருத்துக்கள்:

பெண்மை இணையதளம் 

லேடீஸ் விங்க்ஸ் இணையதம் 

 

கதையை வாசித்து உங்கள் மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொள்ளும் வாசகர்களுக்கு மிக்க நன்றிகள் .

இந்த அத்தியாயத்துக்கான உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலோடு காத்திருக்கிறேன் .

 

 

காவ்யா 5

அன்பு வாசகர்களே!

  இதோ அடுத்த அத்தியாயம் பதிவிடுகிறேன் . 

    <<<<<“சீலன் அண்ணாவிடம் நன்றாகக் கேட்டு விட்டேன்டி. இனி என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்! அந்த அரை லூசு வினோத் அலட்டியதை கேட்டுட்டு உன்னோடு எப்படி அப்படிக் கதைப்பார்? எவ்வளவு துணிவு அந்த முக்கால் லூசுக்கு? என்னதான் ராக்ங் பண்ணினாலும் அவரில் எனக்கு நல்ல மரியாதை இருந்தது; இப்போது அது துளியும் இல்லை.” பொரிந்தாள் அபி.

   “என்றாவது  ஒருநாளைக்கு சந்தர்ப்பம் கிடைக்காதா? அன்றைக்கு இருக்கு அந்த சந்துவுக்கு!” தொடர்ந்து கறுவினாள்.

   அடுத்துவந்த நாட்களில் சந்தோஷோ அவன் நண்பர்களோ இவர்கள் பக்கமும் பார்த்த மாதிரித் தெரியவில்லை.

   “நான் சொன்னேன் இல்லையா? ஆங்… அது! ஃபைனல் இயர்ஸ் என்றால் என்ன கொம்பா முளைத்திருக்கு! நம்ம பேச்சுக்கு சந்து அடங்கிப் போனாரே! அபியா கொக்கா!” தன்னைத்தான் தட்டிக் கொடுத்தவளை, எவ்வித பாவமுமின்றிப் பார்த்தாள் காவ்யா.

   அவளைப் பொறுத்தமட்டில் வார்த்தைகளில் கூட ‘சந்தோஷ்’ எனும் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை.

   ‘செய்வதெல்லாம் செய்துவிட்டு, பேசாத பேச்செல்லாம் பேசிவிட்டு இப்போ நல்லபிள்ளைக்கு நடிக்கிறான்.’ இப்படித்தான் எண்ணிக்கொண்டாள்.

  இதுவரை இறுதிவருட மாணவர்களால் ராக்ங் செய்யப்பட்டதால் மற்றவர்களின் பிடியிலிருந்து தப்பித்திருந்தவர்கள், ஃப்ரஸர்ஷ் வெல்கம் பார்ட்டிக்கு முதல் கிழமை, வினோத் குழுவிடம் வசமாக மாட்டிக்கொண்டார்கள்.

   “எந்நேரமும் ஒட்டிப் பிறந்த மாதிரி இரண்டு பேரும் ஒன்றாகத் தான் திரிவீர்களா?” எடுத்த எடுப்பில் கேலியிழையோட முறைத்தான் ஒருவன்.

   “நீ என்னோடு வாடி, இரண்டு பேருமாக டீ குடித்துக்கொண்டே கதைக்கலாம்!” அபியை அழைத்தான் இன்னொருவன்.

   “அபி..அபிதானே உன் பெயர்?” சந்தேகம் கேட்ட வினோத், “காசு வைத்திருக்கிறாய் தானே? பிறகு சந்தோஷ் அண்ணா வரத்தேவையில்லையே!” காவ்யாவை பார்த்தவாறே எள்ளலாகக் கேட்டு அவளின் முகத்தைக் கன்ற வைத்தான்.

   ‘இவன்களைவிட சந்து பார்ட்டி பரவாயில்லை போலிருக்கே!’ மனதுள் முனகலோடு, தோழியை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே சென்று மறைந்தாள் அபி.

   “மேற்ராணியார், நீங்க இப்படி வாங்க.” கிண்டல் பண்ணி, சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த இரண்டாம் வருட மாணவர்களை நோக்கி அழைத்துச் சென்ற வினோத், ‘எத்தனை நாட்களாக காத்திருந்த தருணமிது; வாடி வா!’ மனதுள் கறுவியவாறே, முகமிறுக தன்னருகில் வருபவளை ஏற இறங்க அளவெடுத்தான்.

    “அட! இவர்கள் எல்லாம் ஃபைனல் இயர்ஸ் ராங்க் பண்ணுமளவுக்குப் பெரிய ஆட்கள்; நாங்க எந்த மூலைக்கு மச்சான்! எப்போதும் பிஸியாக இருப்பவர்கள் இன்றைக்கு எப்படி?” வினோத்தையும் அவளையும் கேலியோடு வரவேற்றார்கள் அவன் தோழர்கள்.

   சிலநாட்களுக்குமுன் சந்தோஷ் இவளோடு வந்தமர்ந்த அதே கல்லிருக்கை!

   காவ்யாவின் மனதில் அன்றைய நாள் துல்லியமாக வலம் வந்தது.   ‘என்னோடு பேசும் போது அவன் முகம் காட்டிய பாவங்கள் தான் எத்தனை? எவ்வளவு வெறுப்பு? கசப்பு! ஏளனம்! அந்தளவுக்கு என் மீது என்ன கோபம்?’ ஆழ்மனம், ‘அதை அறியக் கிடைத்தால்!’ என ஏங்கியது.

    “மகாராணிக்கு நாங்க கதைத்தால் காது கேட்காதோ!” அவள் முகத்தருகில் நெருங்கி இரைந்தான் வினோத்.

   சட்டென்று திடுக்கிட்டு நகர்ந்தவளை அவனுமே சினத்தோடுதான் பார்த்தான். “என்னடி அப்படிப் பார்க்கிறாய்? நான் கதைப்பது காதில் விழவில்லையா? ஃபைனல் இயர்ஸ் கதைத்தால் தான் பல்லை காட்டுவாய் போல!” ஏளனத்தோடு தொடர்ந்தான்.

  இத்தனைநாளுமின்றி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தைச் சற்றும் இழக்க விரும்பாதவன் மனம், அவளை, குத்திப் பதம் பார்க்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டது.

  “நின்றுகொண்டே கனவு காண்கிறாய்! எப்போதிருந்து இந்தப் பழக்கம்? ஹ்ம்…கம்பசுக்கு வந்து நீ நிறையவே மாறிவிட்டாய் காவ்யா!” நெற்றி சுருக்கி முறைத்தவன் குரலில் வெறுப்பு மண்டிக்கிடந்தது.>>>>

முன்னும் பின்னும் நடந்தவற்றை அறிய லிங்கின் உதவியை நாடுங்கள் மக்களே . அப்படியே உங்கள் சில நிமிடங்களை செலவிட்டு கருதிட மறக்காதீர்கள்!

முந்தய அத்தியாயத்துக்கு கருத்திட்ட ஒவ்வொரு வாசகர்களுக்கும் நன்றிகளும் அன்பும்!

CALAMEO     5

GOOGLE DOC  5

வாசகர்கள் கருத்துக்கள்:

பெண்மை இணையதளம் 

லேடீஸ் விங்க்ஸ் இணையதம் 

 

மயிலிறகாய்!- நிதனி பிரபு


அஞ்சலி….பொறுப்பும் குறும்பும் நிறைந்த அழகான பெண்….அவளுக்கு கீழே இரண்டு தங்கைகள்…வெளிநாட்டு மாப்பிள்ளை சுதாகருக்கு நிச்சயிக்கப்படும் அஞ்சலி லண்டன் செல்ல கொழும்பு வருகிறாள்….

அஞ்சலியை பார்த்து மனதை பறிகொடுக்கும் அவளின் மாமா மகனாக தீபன்…..அஞ்சலிக்கு நிச்சயிக்கப்பட்ட சுதாகர் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளும் தீபன் என்ன செய்கிறான்???

மூத்த பெண்ணாக இருந்து, குடும்ப பொறுப்புக்களை உணர்ந்து வாழும் அஞ்சலியின் மனதிலும் தீபன் மீதான காதல் வந்தாலும், அதனை தவிர்க்க நினைக்கும் பெண்ணாக, மனதில் மிக அழகாக பதிகிறாள் அஞ்சலி….

அவளின் அண்ணா என்கிற அழைப்பில் அதிர்ச்சியடையும் தீபன்…..ஹாஹா…அவனின் கோபம், அவளுடனான செல்ல சண்டைகள் அனைத்தும் மிக மிக அழகு….

சுதாகர்…..சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் வெளிநாட்டு வாசத்தாலும் பாதை மாறிப்போகும் யதார்த்த தமிழ்மகன்…..இவனை போன்றவர்கள் தவறினை இன்றுவரை செய்தாலும்….குற்றத்தை அவன் மீது மட்டுமே சுமத்த முடியாமல் போகிறது….காரணம்????

இலங்கையனாய் பிறந்து, தாயகத்தில் வாழமுடியாத நிலையில், வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற வெறியில் வெளிநாட்டில் கால் பதித்து, முற்றிலும் வேறான கலாச்சாரத்தில் தன்னையே அறியாது தன்னையே தொலைக்கும் ஒரு இலங்கை குடிமகன்….

அதேபோல இவனை போன்ற ஒரு சிலரால் வெளிநாடுகளில் வாழும் அனைவரையுமே சந்தேகக்கண்ணோடு பார்க்கவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டிருக்கும் நம் நிலையும் வேதனைக்கு உரியதே…..இதை மிக அழகாக தெளிவாக ஆனால் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் ரோசி அக்கா…..எனக்கு அது மிகவும் பிடித்த விடயம்….

தீபன் & அஞ்சலி மனதில் இருவர் மீதும் காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்…..தயங்கும் இருவரின் காதலும் இணைகிறதா…? இதுதான் கதைக்கான கேள்வி….அதை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள் நட்புக்களே….

இலங்கை தமிழில், இயல்பான நடையில் அழகிய காதலை சுமந்து மிதமாக நம் மனதை அள்ளிச்செல்கிறது  கதை….

உறவுகள் மட்டும் அல்ல இந்த கதை கூட மனதில் மிக அழகான இதத்தை கொடுத்திருக்கிறது!!

இந்த ஜோடியோடு அதிரடி ஜோடி ஒன்றும் இணைகிறது கதையில்…..படித்து தெரிந்துகொள்ளுங்கள்…..

ரோசி அக்கா, மிக மிக அழகா இருக்கு உங்க கதை…எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. ஒரே ஒரு குறை…கொஞ்சம் பெருசா தாங்களேன்…..அடுத்த கதை இதைவிட பெரிதாக இருக்கவேண்டும்….சரிதானா…

கிளிநொச்சி….என் பிறந்த ஊர்…..மிக்க நன்றி அந்த இடத்தை எடுத்ததுக்கு….கதையிலாவது நான் பிறந்த ஊர் பற்றி தெரிந்துகொள்கிறேன்…

மயிலிறகாய் ! – Priya Sarangapani

 

தேற்க யாரையும் தேராது தேர்ந்தபின் 

தேறுக தேறும் பொருள்.
-குறள் 509-
காதல் என்ற மெல்லிய உணர்வு இவ்வளவு நாள் பார்த்து பழகியவர்கள் என்றாலும் சரியான நேரத்தில் வெளிப்பட்டு இரு உள்ளங்களையும் சேர்த்து வைக்கும்…..

தீபன் & அஞ்சலி

பாசமான குடும்பத்தில் நிலைமையை அறிந்து நடந்து கொள்ளும் மூத்தமகளான குணவதி அஞ்சலி…

பாரின் மாப்பிள்ளையை முடிவு செய்ததால் தனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் பெரியவர்கள் ஆசைக்காக ஒத்துக்கொள்பவளுக்கு மனதில் ஒரு சுணுக்கமே…..தன் நாட்டை விட்டு போவதால்……..

கூடிய சீக்கிரம் திருமணம் என்பதால் உறவுக்காரர்களான தீபன் வீட்டிற்கு வருகின்றனர் அஞ்சலி மற்றும் அவளின் அப்பா அங்கே தனக்கானவனை பார்ப்போம் என்று தெரியாமல்..

செல்வ குடும்பத்தின் முதல் மகனான தீபன் தொழிலில் கெட்டிக்காரன் ஒரே தொல்லையான விஷயம் அவனிடம் வரும் கோபம் மட்டுமே…..அஞ்சலிக்கு முடிவு செய்த மாப்பிள்ளை தவறான பழக்கத்தில் இருப்பதை தன் தம்பி மூலம் அறிந்து நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்திவிடுகிறான்…

இவ்வளவு நாள் வேலை என்று சுற்றிக்கொண்டிருந்தவனின் உள்ளம் மெதுவாக வாழ்க்கையின் இன்பமான பகுதியும் உண்டு என்பதை காட்ட காதலை விதைக்கின்றது….அஞ்சலி மேல் கொஞ்சம் மாக ஈர்க்கப்பட்டவன் அவள் அண்ணா என்று கூப்பிட்டதை பொறுக்க முடியாமல் தன் மனதை திறந்து காட்டி விடுகிறான்….

பெரியவர்கள் இருவரின் மனதையும் தெரிந்து இணைத்துவைக்கின்றனர்….

பெண்ணை பெற்றவர்கள் பாரின் மாப்பிள்ளை என்றாலே பயப்படும் விஷயம் தான் கதை கரு…..

ஒரு கதையில் பாசிட்டிவான மனிதர்களின் தாக்கம் இருக்கும் என்றால் அது படிப்பவர்கள் மனதிலும் நல்லதையே உருவாக்கும் ….. இந்த கதையில் முழுக்க முழுக்க அதுவே தான்…

பாசம் சூழ காதல் இருக்கிறது…..

comment:

ஒரு சின்ன விஷயத்தை எடுத்துகொண்டு குடும்ப பாச உறவுகள் அதை பார்த்து வரும் காதல் என்று ஒரு கோர்வையாக கதை செல்கிறது….

இந்த கதையின் அழகே அதில் இருக்கும் தமிழ் தான்……..

முதல் கதையை sprint டாக எடுத்து சென்று இரெண்டாவது கதையை middle – distance யாக கொடுத்து இருக்காங்க…. அடுத்த கதை endurance சாக வரும் என்று எதிர்பார்ப்போம்….. [இது எல்லாம் running ல use பண்ணும் வார்த்தைகள்(தெரியாதவர்களுக்காக சொன்னேன்)]