வாசகர்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!

Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017

வாசகர்கள் அனைவருக்கும் ,

விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்ததால் உங்களுக்கு நத்தார் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. எல்லோரும் சந்தோசமாக நத்தார் பண்டிகையை கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .

பிறந்துள்ள புதிய வருடத்தில், ஒவ்வொருவரினதும் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அமைதியும் மகிழ்வும் இடம் பிடித்திடவும், அன்பின் ஆதிக்கம் பரவவும், கடந்துசெல்லும் கணங்கள் மங்களகரமாக அமைந்திடவும் உளமார வாழ்த்துகிறேன்.

 


 

Advertisements

8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் !)

“மதுரா, மணவாழ்வில் வஞ்சனையை சந்திக்கிறாள்,  அதன் உக்கிரத்தை ருசிபார்க்கிறாள் . மூச்சு முட்டித் தவித்தும் போகிறாள்.

 அதன் பின்னர் , அவள் வாழ்வு கேள்விக்குறியானதா ? மற்றவர் கேலிக்குரியதானதா ?

 ஒன்றுக்கு இரண்டாக பெண் குழந்தைகளோடு தன்னைத்தான் நிலைநிறுத்திக்கொண்டாளா?  நிலை தடுமாறிப் போனாளா?”

7 . நெஞ்சினில் நேச ராகமாய் !

5

   

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

காதல், மிக அற்புதமான அழகிய நுண்ணிய உணர்வு !

   ஆனால் , அது படுத்தும் பாடுகளை அனுப்பவிப்பவர்களுக்குத்தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று!

  இக்கதையிலும் காதல் நிமிர்வாகவே தலை காட்டுகின்றது .

  இதேகாதல், இரு பெண்களுக்கும் , ஒரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தும்  விளைவே கதையாக நகர்கின்றது.

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து செல்கின்ற கதை , உங்களையும் தன்னுள் இழுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

 

6 . உயிரில் கலந்த உறவிதுவோ!

 

pixiz-13-09-2017-21-52-06

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

 

”   பிரதிபலன் பாராது, தன்னலமற்ற அன்பைச் செலுத்துவது ஒரு வரம் அல்லவா?

 அது கிடைப்பதும் நிச்சயம் வரமே!

அதையே தகுதியே இல்லாதவர்களிடம் செலுத்தினால்?”

5 . நீ என் சொந்தமடி!

 

rt innature (2)

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

ஆறுகதைகளையும் இலங்கையை மையமாக  வைத்து எழுதிய நான், இதில் இந்தியாவை மையமாக வைத்து எழுதியுள்ளேன் .

“எத்தனையோ காரணங்களை முன்னிட்டு சிசுக்கள் ஆனாதை ஆக்கப் படுகிறார்கள். அந்த செயலைச் செய்பவர்களிடம் தம்மை நியாயப்படுத்த எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம் .

ஆனால் அந்த சிசு?

அதன் வாழ்வு?”

இதை மையமாக வைத்து எழுதிய நாவல். 

எனது இரண்டாவது புத்தகமாக வெளிவந்த கதை. 

4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்!

1

 

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

 

வாழ்ந்த காலம் சிறிதோ பெரிதோ, உயிராக நேசித்து ஒருத்தர் ஒருத்தரில் இரண்டறக் கலந்த இணையின் பிரிவை,இன்னொருவரை அவ்விடத்தில் வைப்பதன் மூலம் நிவர்த்தி செய்வதென்பது இலகுவில் சாத்தியமாகுமா ?”

என்னுள் பலகாலமாக இருந்துவரும் இக் கேள்விக்கு(பள்ளி நாட்களின் ஒரு கதையை வாசித்ததன் விளைவு) எனக்குப் பிடித்தமான வகையில் கற்பனையில் பதில் எழுதியுள்ளேன்.

    என் மனதோடு மிகவும் நெருக்கமான கதை. ‘அழுத்தமாக எழுத முடியுமா?’ என்கின்ற பரீட்சை எழுதிப் பார்த்தேன் .

கிடைத்த விடை, மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது.

3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

 

rt innature

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

” தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள் பூஜா. “

முடிவு?

அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா?  

      என் எழுத்து நூல் வடிவில் வாசகர்கள் கரங்களில்!

      அருண் பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றிகள்!

2 என்றும் உன் நிழலாக!

 

“சிறுவயதில் வீட்டை விட்டு வெளிநாடு செல்லும் சிறுமியொருத்தி இன்று இளம் பெண்ணாகி, தன் வாழ்க்கைப் பயணத்தில் தான் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை, தன்னைத் தனக்காகவே அரவணைக்கும் கரங்களின் உதவியுடன் எப்படிக் கடந்து வருகிறாள் என்பதை, சிறு சிறு புதிர்களுடன் உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறேன்.”

என் எழுத்தை ஒருவித எதிர்பார்ப்போடு கவனிக்க வைத்த கதை.