9 . நிர்மலவதனா

நடைபாதையை உறங்குமிடமாகக் கொண்டு வாழும் கூரையற்றோரை ஆதாரமாக கொண்டு ஆரம்பிக்கும் கதையானது அடுத்து வரும் அத்தியாயங்களில் சுவாரசியமும் திருபங்களுமாக நகர்கின்றது .

“தந்தையின் இதயமாற்றுச்  சிகிச்சை வெற்றிபெற்று அவர் மீண்டு வருவாரா? என ஏங்கும் நாயகி அடுத்ததடுத்து சந்திக்கும் திடுக்கிடும் நிகழ்வுகள் , அவை அவள் வாழ்வில் உருவாக்கும் தாக்கங்கள்,  திடுமென்று நிகழும் திருமணம் , அதோடு பின்னிப்பிணைந்த ரகசியங்கள் என விறுவிறுப்பாக நகருகின்றது கதை!”

‘நீங்களே எழுதியதை நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி ?’ என்றெல்லாம் முணுமுணுப்பு கேட்குதே! 

நான் சொல்வது உண்மையா என்றறிய கதையை வாசித்துப் பாருங்கள்.

 

இக்கதைக்கான ‘பெண்மை’ மற்றும்  ‘லேடீஸ்விங்க்ஸ்’ தளங்களின் வாசகர்கள்  பகிர்ந்து கொண்ட கருத்துக்களை கீழேயுள்ள திரிகளில் வாசிக்கலாம் .

 

பெண்மை 

லேடீஸ்விங்க்ஸ்

 

 

 

Advertisements

2 . மயிலிறகாய்!

Edward Singer

 

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

முதல் கதையில் ஏற்பட்ட மனமகிழ்வு இக்குறுநாவலுக்கு வித்திட்டது.  

 இதம் தருமோ இந்த உறவுகள் எனும் தலைப்பில் இணையத்தில் எழுதிய இத்தொடர், அக்ஷ்யா இதழில் எனது முதல் குறுநாவலாக வெளியாகி மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

“கிளிநொச்சியில், அன்பான விவசாய குடும்பத்தில் மூன்று பெண்சகோதரிகளில் மூத்தவளாக பிறக்கும் நாயகி அஞ்சலி!

 திருமணம் எனும் உறவால் குடும்பத்தை விட்டு தொலைவில் விலகிச் செல்ல வேண்டுமே என்கின்ற கலக்கத்தை விழுங்கிக் கொண்டு வெளிநாட்டு வாழ்வுக்கு தயாராகிறாள் . 

அதிலிருந்து ஆரம்பிக்கும் அவள் வாழ்வுப் பயணத்தில் ஒரு நிலையான தரிப்பிடம் வரும் வரை கதை  நகர்கின்றது.”

அஞ்சலியின்  வாழ்வின் பாதையில் பயணிக்க விருப்பமா ?

கதையை வாசித்து, பயணத்தை  அனுபவித்து மகிழுங்கள் வாசகர்களே! 

  

1 . நீயில்லாது வாழ்வேதடி!

rt innature (1)

 

மின்னிதழ் வடிவிலும் வெளியாகியுள்ளது 

Amazone.in

Amazone.com

விளையாட்டு விளையாட்டாக எழுதிய மூன்று சிறுகதைகளுக்குப் பிறகு ‘என்னாலும்  நாவல் எழுத முடியுமா?’ என, பரீட்சித்துப் பார்த்ததில் உருவான  குறுநாவல். 

  இக்கதையை வாசித்து , முகமறியா இணைய நட்புகள் தந்த ஊக்கம், தொடர்ந்து எழுத்துப் பரீட்சையில் ஈடுபட வைத்துள்ளது. 

  “நாயகி சிந்து, பன்னிரண்டு வயது சிறுமியாக இருக்கையில், எதிர்பாராத கோரவிபத்தொன்றில் தன்  உற்ற குடும்பத்தை தொலைத்துவிடுகிறாள்.

    பாதுகாப்பும் அரவணைப்பும் தொலைத்து நின்றவளை அரவணைத்துக் கொள்கிறார் லக்ஷ்மி ; அவளின் சிறியதாயார் .

  வளர்ந்து பெரியவளாகி ஒரு ஆசிரியையாகிய சிந்து கலகலப்புக்கு உற்ற தோழி!

  அவள் வாழ்வில் காலெடுத்து வைக்கிறான் கணவன் ரகு!”

ரகுவின் மனநிலைக்கான காரணம் என்னவோ!?

  கனத்த மனதோடு அவள் வாழ்வில் நுழைபவனால் அவள் வாழ்வு கனத்துப் போகின்றதா?

அறிந்துகொள்ள, கதையை வாசியுங்கள் வாசகர்களே!

‘மயிலிறகாய்!’ அக்ஷயா வெளியீடாக உங்கள் கரங்களில்…

ஹாய் ஹாய் ..

ஞாயிறு விடுமுறைநாள் எல்லோருக்கும் குதூகலமானதுதான் இல்லையா?  அதோடு சேர்த்து, இன்று எனக்கு ஒருபடி அதிக சந்தோசம்!

 அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் இன்னமும் மகிழ்ச்சி !

 என் இரண்டாவது குறுநாவலான ‘மயிலிறகாய்!’ ‘அக்ஷயா’ மார்கழி மாத வெளியீடாக உங்களை நாடி வரவுள்ளது!

  இக்கதை மூலம் ‘அக்ஷயா’வுடன்  இணைவதில் மிகுந்த மகிழ்வடைகிறேன். பதிப்பகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் பல பல!

  எனது எழுத்துப் பயணம் சிறுகதை, குறுநாவல் என்றே  ஆரம்பித்திருந்தாலும் அவற்றை வெளியிட வேண்டும் என்கின்ற ஆர்வம் பெரிதாக என்னுள் இருக்கவில்லை. அதை என்னுள் கொண்டு வந்தவர்  சகோதரர் சித்தார்த், மற்றும்  இப்புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டி நம்பிக்கை தந்த சிந்து(எழுத்தாளர் சசிமுரளி) இருவருக்கும் என் அன்புகளும் நன்றிகளும்!

அன்புடன் , 

ரோசி

இலங்கை வாசகர்களுக்கு ஒரு மகிழ்வான தகவல்..

அன்பு வாசகர்களே !

எனது கதைகளை வாசிக்க ஆர்வமுள்ள இலங்கை வாசகர்களுக்கு  ஒரு மகிழ்வான தகவல்!

நூல் வடிவம் பெற்றுள்ள எனது மூன்று நாவல்களும் ,

கொழும்பு – தமிழ் சங்கம் .

யாழ்ப்பாணம் – பொது நூலகம் .

யாழ்ப்பாணம் – பல்கலைக் கழக நூலகம் என்பவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் .

இன்னும் சில தினங்களில் ,

திருகோணமலை – பொது நூலகம்

வவுனியா – பொது நூலகம்

மட்டகளப்பு – பொது நூலகம் என்பவற்றிலும் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

****இலங்கை எழுத்தாளர்களான உஷாந்தி கௌதமன் மற்றும் நிதனி பிரபு என்பவர்களின் நூல்களையும்   மேற்சொன்ன நூலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் .