உயிரில் கலந்த உறவிதுவோ ! புத்தக வடிவில்…

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்… 
 இப்படி, கூவி அழைப்பதன் காரணம் தெரியுமா? 
 ஹ்ம்ம் மனதிலுள்ள சந்தோசம் விரல்களுக்குள் புகுந்து கொண்டதன் விளைவுதான்; வேறென்ன ! 
  எனது அடுத்த நாவலான, ‘உயிரில் கலந்த உறவிதுவோ! புத்தக வடிவில் உங்களை நாடி வந்துள்ளது.
 (இணையத்தில் வாசித்தவர்கள், யாதவ், தியா மற்றும் ராஜேந்திரன், கோதை இவர்களை மறந்திருக்க மாட்டீர்களே! அதுவும் அன்புருவான ராஜேந்திரனை மறக்கவே மாட்டீர்கள்.(ஹா..ஹா..) விசாலம் பாட்டியையும் தான் )   
   மிகவும் அழகான அட்டைப்படத்தோடு நேர்த்தியான நூலாக இதை வெளியிட்ட அருண் பதிப்பகத்திற்கும்,  திரு அருண் அவர்களிற்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள். 
   அடுத்து, வாசகர்களிடம் சின்ன உதவி! சரி …சரி…பெரிய உதவி என்றே வைத்துக் கொள்வேமே! 
   ‘அட! உங்களுக்கில்லாததா!’ என்று நீங்கள் கேட்பதும் கேட்குதே! 
   நாமெல்லாம்  தாயாய், பிள்ளையாய், அக்கா, தங்கை, பாட்டி, பேத்தியாய் பழகியிருக்கிறோமே; இதைச் செய்யாட்டி பிறகென்ன இல்லையா? (எப்போது பழகினோம் என்று குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது ..ஒ.கேவா  ) 
   பெரிதாக ஒன்றுமில்லை, எனக்காக சில நூறுகளை செலவழிக்க மாட்டீர்களா என்ன? 
   ஹலோ..ஹலோ யார் அது? என்னையா திட்டுறீங்க!  என்ன!? ஆன்லைனில் வாசித்தாயிற்றா!? அதெல்லாம் பரவாயில்லை; புத்தகத்தையும் வாங்கி வையுங்க. பிறகொருநாளில் வாசிக்கவோ,  உங்கள் மகன், மகள், மருமகப் பிள்ளைகள் வாசிக்கவோ உதவாதா என்ன ? 
   ஆன்லைனில் வாங்கினால் செப்டெம்பர் 30 வரை 10% தள்ளுபடியாம். நம்ம ‘மெரினா புக்’ஸில்!
  மிஸ் பண்ணிடாதீங்க மக்களே ! 
   அதோடு காலவரையற்ற சிறப்புச் சலுகை ஒன்று நானும் தாரேன். ஆன்லைனில் வாசித்து கமெண்ட்ஸ் சொன்னவர்கள் திரும்பவும் கமெண்ட்ஸ் சொல்லி மினக்கட வேண்டாம். டீல் ஒ.கேதானே? 
   சைலன்ட் ரீடர்ஸ், உங்க மௌனத்தை கலைக்கும் நேரம் வந்திட்டுது. புத்தகத்தை வாங்குறீங்க, வாசிக்கிறீங்க, ஏற்கனவே வாசித்தால் மேலோட்டமாக ஒருதரம் பார்க்கிறீங்க, கமெண்ட்ஸ் சொல்லுரீங்க. டீல் டபிள் ஒ.கேதானே!
 
   
 

 

Advertisements