கிருநிசாவின் ‘உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்!’

 

  அன்பு வாசகர்களே!இன்னுமொரு  மகிழ்ச்சியான செய்தி!

 

‘உயிரே உன்னில்  ச(அ)ரண் புகுந்தேன்!’ எனும் அழகிய தலைப்போடு, தன் முதல் கதையில் அறிமுகமாகிறார் ‘ கிருநிசா‘. 

அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மிக்க சந்தோசம். 

முதல் கதை என்று சொல்ல முடியாதவகையில் இலாவகமும் சுவாரசியமுமாகக்  கதை நகர்த்துகிறார்.

நாயகி ஆனந்தவர்ஷினி,  நாயகன் ரித்விக்ராஜ் நம் மனங்களைக் கொள்ளை கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டில், தை முதலாம் திகதி முதலாவது அத்தியாயத்தோடு உங்களிடம் வரவுள்ள கிருநிசாவை, வாழ்த்துவதுடன், உங்கள் ஆதரவையும்  நல்குவீர்கள் என்று நம்புகிறேன் .

 

அவரது சிறு அறிமுகமும் கதைக்கான சிறு முன்னோட்டமும் கீழே…

 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நான் கிருபாகரன் நிசாந்தி.  கிருநிசா என்ற பெயரில் எழுதப்போகிறேன்.
என் சொந்த இடம் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை.

 

நிறைய கற்பனைக் கதைகளை நினைக்கும் என்னையும் ‘நீ கதை எழுது, நல்லா வரும்.’ என, துஜி தூண்டிவிட்டாள்.
அதன் பயனாக, என் முதல் முயற்சியுடன் உங்களை நாடி வந்துள்ளேன். 
முதலாவது அத்தியாயத்துடன் வருகின்ற முதலாம் திகதி சந்திப்போம்.
அன்புடன் ,
கிருநிசா 
கதை முன்னோட்டம் 

 

லண்டன் ஹீதுறு விமான நிலையம்.

அங்கிருந்த இருக்கையில் சம்மணமிட்டபடி அமர்ந்திருந்தாள் அவள்.

கண்களை மூடி, கைகூப்பி வேண்டியபடி இருந்த அவளது தோற்றம் அங்கிருந்த ஒருவனை உற்றுப்பார்க்கவைத்தது.

அவன், லண்டனில் ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்கும் இலங்கைத்தமிழன். பார்ப்பதற்கு வெளிநாட்டவன் போலவே இருப்பான். தனது நண்பனை வழியனுப்புவதற்கு அந்த விமான நிலையத்திற்கு வந்திருந்த அவனைத் திரும்பிப்பார்க்கவைத்தாள் அவள்.

மெல்ல அவளருகில் சென்றவன் , “ஹேய்! இங்க பார்!” என்று, அவளது முகத்திற்கு நேரே தனது கையைத் தட்ட, அதிர்ந்து, கண்களை மலர்த்தினாள் அந்தக் காரிகை…

 அத்தியாயம்  1

அத்தியாயம்   2

அத்தியாயம்  3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

 

 
Advertisements

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: